எப்போதோ நடந்தேறியிருக்க வேண்டிய ஒன்று காலதாமதமாக இப்போதாவது நடந்திருக்கிறதே என்கிற வகையில் மகிழ்ச்சி. மு.க. ஸ்டாலினுக்குப் பதவியும் அங்கீகாரமும் ஆரம்பம் முதலே தாமதமாகத்தான் கிடைத்து வருகிறது.
1989-ல் 13 ஆண்டு அரசியல் வனவாசத்திற்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டிருந்தால் யாரும் குற்றம் கண்டிருக்க மாட்டார்கள். ஏனோ, முதல்வர் கருணாநிதி அவரை அமைச்சராக்கவில்லை.
இன்றைய அமைச்சரவையில், க. அன்பழகன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தவிர ஏனைய மூத்த அமைச்சர்களான ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், [...]
May 30, 2009
Categories: அரசியல், செய்திகள், தமிழக அரசியல், திமுக செய்திகள், திமுக வரலாறு . . Author: உதயசூரியன் . Comments: 2 Comments
வர வர இந்த தமிழ் உணர்வாலர்கலுக்கும் ( சரியான “லா” தான்..!!!) , தமிழகத்த முன்னேத்தப் போறதா சொல்லிக்கிடுறவுக அட்டகாசம் அதிகமாயிட்டு. என்னன்னு கேக்கீகளா?
அதுக்கு முன்னாடி இந்தப் பதிவ படிச்சிக்கிடுங்க.
டெல்லிக்கு ப்ளைட் ஏறிய நம்மூரு புகழ்
என்னமோ வாரிசு அரசியலுக்கும் , காங்கிரசு கட்சிக்கும் சம்பந்தமே இல்லையாம். அதுனால நாடாளுமன்றத்திலே பேபி சீட் இல்லையாம்.
சோனியா காந்தி என்ன தேசத்தோட தாயா ?
ராஜிவ் காந்தியோட சம்சாரம்….
ராஜிவ் காந்தி யாரு ?
இந்திராகாந்தியோட பையன்….
இந்திராகாந்தி யாரு ?
நேரு மாமாவோட பொண்ணு.
அவுகள விடுங்க , [...]
May 27, 2009
Categories: அரசியல், செய்திகள், தமிழக அரசியல், திமுக செய்திகள் . . Author: உதயசூரியன் . Comments: 3 Comments
சென்னை: 85 வயதாகும் முதல்வர் கருணாநிதிக்கு, இந்த லோக்சபா தேர்தல் முடிவுகளை மறக்கவே முடியாது. அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி, திமுக கூட்டணிக்கு எதிர்பாராத வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டன அவரது அரசியல் சாதுர்யமும், அட்டகாச காய் நகர்த்தல்களும்.
நேற்று வரைக்கும் இப்படிப்பட்ட ஒரு முடிவு வரும் என கருணாநிதி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.
தனது உடல் நலிவையும் தாண்டி மிக அசாத்தியமான தன்னம்பிக்கையையும் தனது அரசின் சாதனைகளையும் மட்டுமே முன்நிறுத்தி தேர்தலை சந்தித்து வெற்றியை ஈட்டிக் காட்டியிருக்கிறார்.
ஈழத் தமிழர் [...]
May 16, 2009
Categories: அரசியல், செய்திகள், தமிழக அரசியல், தமிழ், திமுக செய்திகள், திமுக வரலாறு, தேர்தல் 2009 . . Author: உதயசூரியன் . Comments: 5 Comments
ஜெ., வை சந்திக்கிறார் அந்தோணி
மே 15,2009,14:09 IST
சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக மத்திய அமைச்சர் அந்தோணி சென்னை வரயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி – தினமலர்
http://www.dinamalar.com/latestnews.asp#17617
May 15, 2009
Categories: அரசியல், ஈழம், செய்திகள், தமிழக அரசியல், தேர்தல் 2009 . . Author: உதயசூரியன் . Comments: 18 Comments
சென்னை: சென்னையில் பல பகுதிகளில் நேற்றிரவு திடீரென மின்சாரம் தடைபட்டது. தேர்தல் நேரத்தில் ஆளும்கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க எதிர்கட்சிகளைச் சேர்ந்த விஷமிகளே இந்த செயல்களைச் செய்ததாக முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மைலாப்பூர் உள்பட சென்னை நகரின் பல பகுதிகளில் நேற்றிரவு மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து நிருபர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி, இந்த மின்தடை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சிக்கு அவப்பெயர் [...]
May 13, 2009
Categories: அரசியல், செய்திகள், தமிழக அரசியல் . . Author: உதயசூரியன் . Comments: 6 Comments
அரசு ஊழியர்களே…..
ஒரே கையெழுத்தில் உங்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிய பெருமை வாய்ந்த ரெட்டை இலைக்கே உங்கள் ஓட்டு…..!!!
போக்குவரத்து கழக ஊழியர்களே……..
உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தையும் , போனஸ்ஸையும் தர மறுத்த ரெட்டை இலைக்கே உங்கள் ஓட்டு….!
பெரியாரின் சீடர்களே……….
தான் ஒரு பாப்பாத்தி என்று சபையிலேயே அறிவித்துக் கொண்ட அதிமுகவின் பார்ப்பனத் தலைமைக்கும் , இன்று வரை பாரதிய ஜனதாவின் குரலில் , பார்ப்பனீயத்தின் குரலை எதிரொலிக்கும் ரெட்டை இலைக்கே உங்கள் ஓட்டு….!
தமிழுணர்வாளர்களே…..
வருடக்கணக்கில் புலிகள் என்ற பேச்சை எடுத்ததற்கே சிறையில் வைகோவை சிறையில் [...]
May 9, 2009
Categories: அரசியல், ஈழம், தமிழக அரசியல், தமிழ், தேர்தல் 2009 . . Author: உதயசூரியன் . Comments: 25 Comments
‘ராமதாஸ் அரசியல்வாதி அல்ல…அரசியல் வியாபாரி’
பெரம்பலூர்: ராமதாஸ் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு அரசியல் வியாபாரி. ராஜ்யசபா சீட்டுக்காக அணி மாறி அலைபவர் என உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் திமுக வேட்பாளரான நடிகர் நெப்போலினை ஆதரித்து திமுக பொருளாரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான ஸ்டாலின் அங்கு நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு [...]
May 7, 2009
Categories: அரசியல், செய்திகள், தமிழக அரசியல், திமுக செய்திகள் . . Author: உதயசூரியன் . Comments: 2 Comments
எத்தனை ஏளனப் பேச்சுக்கள்.?
பயந்து போய் அப்பல்லோவில் ஒளிந்து கொண்டாராம்.
சோனியாவும் , இவரும் ட்ரங்க்கால் போட்டுப் பேசி செருப்படி வாங்காமல் தப்பித்துக்கொண்டார்களாம்…….
ஒரு முதியவர் , 85 வயதைத் தாண்டியவர். அறுபது ஆண்டுகளாக நமது உரிமைகளுக்காகப் போராடியவர்.
இன்றைக்கும் தமிழகத்தின் முதல்வராக இருப்பவர். தமிழக சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தி.மு.கழகத்தின் தலைவராக இருப்பவர்.
இவரை இப்படியெல்லாம் ஏசுவது பகுத்தறிவின் குரலா ? பெரியார் கற்றுத்தந்த சுயமரியாதையின் குரலா ? இருக்க முடியாதே….!
காரணம் என்ன சொல்கிறார்கள் ?
காங்கிரசின் தமிழின அழிப்பிற்கு துணை போனாராம்….!
ஆமாம் [...]
May 6, 2009
Categories: அரசியல், ஈழம், தமிழக அரசியல், தமிழ், திமுக செய்திகள் . . Author: உதயசூரியன் . Comments: 43 Comments
கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கு காங்கிரஸ் எதிரி. ? நேற்றுவரை மத்தியில் காங்கிரசுடன் கூட்டு…! இன்று காங்கிரசுக்கு எதிரி.
மதவாதத்தை எதிர்ப்போம். பிஜேபியை ஆட்சிக்கு வர விட மாட்டோம் என்ற முழக்கம். பிஜேபி ஆளும் மாநிலங்களில் கூட கொண்டு வரத் தயங்கிய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்த அதிமுகவுடன் தமிழகத்தில் கூட்டு…..!
தொழிலாளர் வர்க்கத்திற்காக அனுதினமும் பாடு படுவோம் என்று சொல்லும் கம்யூனிஸ்டுகள் கொஞ்சம் பக்கங்களை பின்னோக்கி புரட்டிப் பார்க்கட்டுமே.
ஒரே கையெழுத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது யார் ?
லாபம் [...]
May 5, 2009
Categories: அரசியல், ஈழம், தமிழக அரசியல் . . Author: உதயசூரியன் . Comments: 20 Comments
வணக்கம் தமிழ் வலையுலக நண்பர்களே..ரொம்ப்போ நாளைக்கு அப்புறம் உங்களே எல்லாம் சந்திக்கிறதுலே ரொம்ப மகிழ்ச்சி.
திமுகவோட ஈழநிலையில் கொஞ்சம் வருத்தப்பட்டு ஒதுங்கியிருந்த உடன்பிறப்புகள்ல நானும் ஒருத்தன். ஆனா இப்போ தெளிவா இருக்கேன்……….. நெறைய வருத்தங்கள் இப்பவும் உண்டு. ஆனா இந்த ஈழ ஆதரவுப் போர்வையில் இருக்கும் தமிழுணர்வாளர்கள் பண்ணுற அட்டூழியத்தால நமது திமுக / கலைஞர் மீதான புரிதல் எவ்ளோ தவறுன்னு தெளிவா புரிஞ்சிடுத்து.
எக்ஸ்குஸ் மீ மேடம் எலக்சன் வருதுன்னு போயஸ் கார்டனுக்கு போன் வருது..உன்னி கிருஷ்ண பணிக்கரின் [...]
May 4, 2009
Categories: அரசியல், ஈழ நிவாரணம், ஈழம், தமிழக அரசியல், திமுக செய்திகள், திமுக வரலாறு . . Author: உதயசூரியன் . Comments: 10 Comments