சட்டம் ஒழுங்கு இல்லையாம் – இளங்கோவனின் குற்றச்சாட்டு உண்மையா?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லையென்று குறை கூறும் இளங்கோவன் அவர்களின் அறிக்கையை ஆராய்வதை விட அதற்கு அவர் சொன்ன உதாரணங்கள்தான் வேடிக்கையிலும் வேடிக்கை….
http://thatstamil.oneindia.in/news/2008/11/05/tn-no-law-and-order-in-tamil-nadu-says-illangovan.html
மதுரையில் எப்போதோ நடைபெற்ற தினகரன் சம்பவத்தைச் சொல்லி 2008 ல் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பது யாரை ஏமாற்ற என்பதை இளங்கோவன் அவர்கள் சொன்னால்தான் நமக்குத் தெரியும்!!!!!
கடந்த தேவர் ஜெயந்தியின் போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதற்கும் , சட்டம் ஒழுங்கிற்கும் சம்பந்தம் இருப்பதாக கிருஷ்ணசாமி அவர்கள் கூட குற்றஞ்சாட்டவில்லை…!!!ஆனால் போன [...]

ஈழத்திற்கான உதவிகள் – கலைஞரிடம் நடுவண் அரசு விளக்கம்

இந்தியத் தூதரின் மேற்பார்வையுடன் தமிழக உதவிகள் வன்னி செல்லும்! -
கருணாநிதிக்கு புதுடில்லி விளக்கம்

[05 நவம்பர் 2008, புதன்கிழமை 11:15 மு.ப இலங்கை]

இலங்கையில் மோதலில் சிக்கியுள்ள வன்னி மக்களுக்காக இந்தியா
வழங்கவுள்ள நிவாரண உதவிகளின் விநியோகம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின்
மேற்பார்வையுடனேயே இடம்பெறும் எனப் புதுடில்லி தெரிவித்துள்ளது.

இந்திய உதவிகள் வன்னி மக்களை எவ்வாறு சென்றடையவுள்ளன
என்பதைத் தெளிவுபடுத்துமாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர்
அனுப்பிவைத்துள்ள கடிதத்திற்குப் பதிலளிக்கையிலேயே இந்திய
வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடபகுதியில் மோதலில் சிக்கியுள்ள மக்களுக்கான நிவாரண
உதவிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் [...]

இலங்கை பிரச்சினை தொடர்பாக கடைசி தமிழன் உள்ளவரை போர் ஓயாது! : த.தே. கூட்டமைப்பு

இலங்கை பிரச்சினை தொடர்பாக கடைசி தமிழன் உள்ளவரை போர் ஓயாது! : த.தே. கூட்டமைப்பு

[ புதன்கிழமை, 05 நவம்பர் 2008, 09:20.33 AM GMT +05:30 ]

கடைசி தமிழன் உள்ளவரை ஆயுதத்தைக் கீழே போடும் பேச்சுக்கே இடமில்லை. நிரந்தரத் தீர்வு வரும் வரை போர் ஓயாது என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சிவாஜிலிங்கம், சிறீகாந்தா கூறியுள்ளனர்.

திண்டுக்கல்லில், மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இலங்கை [...]

‘இலங்கை’: பிரதமர்-சோனியாவுடன் பாலு மீண்டும் சந்திப்பு

புதன்கிழமை, நவம்பர் 5, 2008

டெல்லி:  இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் மத்திய அரசு தீவிரமாக வற்புறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாவிடம் டி.ஆர்.பாலு மீண்டும் நேரில் கோரிக்கை விடுத்தார்.
பீம்ஸ்டெக் எனப்படும் 7 தெற்காசிய பிராந்திய நாட்டு தலைவர்களின் மாநாடு, வரும் 13ம்ந் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வருகிறார்.
இந் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய [...]