ஈழம்:சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் – கலைஞர்

”இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் நா‌ம் எடு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கைக‌ள் ப‌ற்‌றி முடிவு செ‌ய்ய நாளை ச‌ட்டம‌ன்ற க‌ட்‌‌சி‌த் தலைவ‌ர்க‌ள் கூ‌ட்ட‌ம் எனது தலைமை‌யி‌ல் செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் நடைபெறு‌கிறது” எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.
செ‌ன்‌னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் நாளுக்கு நாள் இலங்கையில் வாழும் தமிழர்கள் உயிர் உடமைகளை இழந்து வாழ்வதற்கே பயந்து பாதிக்கப்படும் நிலையில் மேலும் மேலும் நம் சிந்தை கலக்கும் செய்திகள் வந்து கொண்டிருப்பதால் அது [...]

ஈழம் : மென்பொருள் வல்லுனர்களின் சீரிய முயற்சி!!!

நடிகர்களான சூர்யா,பிரகாஷ்ராஜ், ஜ.டி.பொறியியளார்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து டைடல் பார்க்கில் 17.11.2008 அன்று இலங்கையில் அல்லலுறும் தமிழ் மக்களின் அவலங்கள் குறித்து எடுத்துரைக்கும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

ஈழம்  பற்றிய படித்த , படிக்காத எனப்பலரிடமும் பல மாறுபட்ட கருத்துக்கள்……
அநேக கருத்துக்களுக்கு மேற்கண்ட சிறு குறிப்புகள் விளக்கமளிக்க உதவும்…………

இந்த சீரிய முயற்சியை முன்னெடுத்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் நாம் நமது
நன்றியையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்!!!!!!!!!!!

ஈழம் – கலைஞர் தடுமாற்றமா?

இங்கே ஈழத்தின் பால் அக்கறை காட்டும் தமிழுணர்வாளர்களில் மிகப்பலர் , ஈழப்பிரச்சினையில் கலைஞர் தடுமாற்றத்துடன் கருத்துக்களை தெரிவிப்பதாக கருதுகிறார்கள்….ஒரு வகையில் அவரது நிலைப்பாடும் அவ்வாறு கருதுவதாகவே இருந்து வந்திருக்கிறது….

ஆனால் உண்மை நிலை என்ன???

கலைஞரது தமிழுணர்வையும் , அவரது ஈழத்தின் பாலான அக்கறையையும் சந்தேகப்படுவதென்பது மிகப்பெரிய முட்டாள்தனம்..!! ஆகவே , அவ்வாறான வாதங்களை வைப்போர் , கலைஞரின் அரசியல் எதிர்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி , அவர்களுக்கு நாம் பதிலும் சொல்லத் தேவையில்லை.ஆனால் , கலைஞரின் நிலையில் குழப்பங்கொண்டு [...]

தமிழக அரசை தர்மசங்கடப்படுத்தாதீர்கள் – கலைஞர்

சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினையில், சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு சிலர் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தனித்து என்னால் எதுவும் செய்ய முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப் படுகொலை, நாற்பது ஆண்டுக் கால வரலாற்றுக்குரிய தொடர் நிகழ்ச்சியாகி விட்டது.
அதைத் தடுத்து நிறுத்தித் தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள், பகைவர்கள் மீது பாய்ந்திடாமல்; சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு [...]

நாங்கள் பேசுவதனை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் நீங்கள் போரை ‌நிறு‌த்துங்கள்: பார‌திராஜா

[புதன்கிழமை, 05 நவம்பர் 2008, 10:31 பி.ப ஈழம்] [கி.தவசீலன்]

நா‌ங்க‌‌ள் பே‌சுவதனை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் போரை ‌நிறு‌த்து‌ங்க‌ள் எ‌ன்று ‌‌இயக்குநர் இமயம் பார‌திராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்ய‌ப்படுவதை கண்டித்து தென்னிந்திய திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் பாரதிராஜா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உலக‌த்‌தி‌ற்கு த‌‌மி‌ழ் இரு‌ப்பதை, ஏ‌ன் த‌மிழை‌ கொ‌ண்டு செ‌ன்றவ‌ன் இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ன்தா‌ன். த‌மிழ‌ன் எ‌ன்ற இன‌ம் இரு‌ப்பதை உல‌‌கி‌ற்கு பறை சா‌ற்று‌கி‌ன்றவ‌ன் த‌மிழ‌ன்தா‌ன். அ‌த்தகைய [...]

நாம் ஒன்றுபட்டு ஐக்கியமாகக் குரல் கொடுத்தால் போரை நிறுத்த இந்திய அரசு ஆணை பிறப்பிக்காதா? – வீரமணி

நாம் ஒன்றுபட்டு ஐக்கியமாகக் குரல் கொடுத்தால் போரை நிறுத்த இந்திய அரசு ஆணை பிறப்பிக்காதா? – வீரமணி

[ புதன்கிழமை, 05 நவம்பர் 2008, 05:38.23 AM GMT +05:30 ]

தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவேண்டிய நேரத்தில் தமிழக அரசின்மீது தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அவரது அறிக்கை வருமாறு:

ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி, உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடமின்றி காடுகள், [...]

ஈழத்திற்கான உதவிகள் – கலைஞரிடம் நடுவண் அரசு விளக்கம்

இந்தியத் தூதரின் மேற்பார்வையுடன் தமிழக உதவிகள் வன்னி செல்லும்! -
கருணாநிதிக்கு புதுடில்லி விளக்கம்

[05 நவம்பர் 2008, புதன்கிழமை 11:15 மு.ப இலங்கை]

இலங்கையில் மோதலில் சிக்கியுள்ள வன்னி மக்களுக்காக இந்தியா
வழங்கவுள்ள நிவாரண உதவிகளின் விநியோகம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின்
மேற்பார்வையுடனேயே இடம்பெறும் எனப் புதுடில்லி தெரிவித்துள்ளது.

இந்திய உதவிகள் வன்னி மக்களை எவ்வாறு சென்றடையவுள்ளன
என்பதைத் தெளிவுபடுத்துமாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர்
அனுப்பிவைத்துள்ள கடிதத்திற்குப் பதிலளிக்கையிலேயே இந்திய
வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடபகுதியில் மோதலில் சிக்கியுள்ள மக்களுக்கான நிவாரண
உதவிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் [...]

இலங்கை பிரச்சினை தொடர்பாக கடைசி தமிழன் உள்ளவரை போர் ஓயாது! : த.தே. கூட்டமைப்பு

இலங்கை பிரச்சினை தொடர்பாக கடைசி தமிழன் உள்ளவரை போர் ஓயாது! : த.தே. கூட்டமைப்பு

[ புதன்கிழமை, 05 நவம்பர் 2008, 09:20.33 AM GMT +05:30 ]

கடைசி தமிழன் உள்ளவரை ஆயுதத்தைக் கீழே போடும் பேச்சுக்கே இடமில்லை. நிரந்தரத் தீர்வு வரும் வரை போர் ஓயாது என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சிவாஜிலிங்கம், சிறீகாந்தா கூறியுள்ளனர்.

திண்டுக்கல்லில், மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இலங்கை [...]

‘இலங்கை’: பிரதமர்-சோனியாவுடன் பாலு மீண்டும் சந்திப்பு

புதன்கிழமை, நவம்பர் 5, 2008

டெல்லி:  இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் மத்திய அரசு தீவிரமாக வற்புறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாவிடம் டி.ஆர்.பாலு மீண்டும் நேரில் கோரிக்கை விடுத்தார்.
பீம்ஸ்டெக் எனப்படும் 7 தெற்காசிய பிராந்திய நாட்டு தலைவர்களின் மாநாடு, வரும் 13ம்ந் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வருகிறார்.
இந் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய [...]