திராவிட முன்னேற்றக் கழகம்
“சமுதாயத்தில் சீர்திருத்தம்; பொருளாதாரத்தில் சமதர்மக் கொள்கை; அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்திய விடுதலை” என்ற கொள்கைகளோடு 17.9.1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் திராவிடர் கழகத்திலிருந்து விலகிச் சென்றவர்களால் உருவாக்கப்பட்டது.
அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அறிஞர் அண்ணா (சி.என். அண்ணாதுரை) தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, தி.மு.க.வின் கொடியாக தேர்வு செய்யப்பட்டது.
1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியாரின் [...]
