தை ஒன்றே தமிழ் புத்தாண்டு….பேரிகை கொட்டி வரவேற்போம் !!

தை ஒன்றே தமிழ்ப்புத்தாண்டு என்று தமிழக அரசு முழுதுமாய் சட்டமியற்றி அதன்படி கொண்டாடப்படும் முதல் தமிழ்ப்புத்தாண்டு வரும் தைப்பொங்கல் தினமேயாகும்…..!!!
பல நூறு வருடங்களாய் ஆரியப் பழக்கத்தினால் தமது வருடப்பிறப்பைக் கூட அறியாமல் , இருளில் மூழ்கியிருந்த தமிழினம் இந்த ஆண்டு முதல் தமது உண்மையான புத்தாண்டை கொண்டாடவிருக்கிறது…………
இன்னும் இரண்டே மாதங்கள்தான் இடைவெளி…….
ஆண்டாண்டு காலமாய் அடியொற்றி வந்த மூடப்பழக்கத்தை ஏதோ சில சட்டங்கள் போட்டு மட்டும் மாற்றிட முடியாது……ஆனாலும் , எந்த அடிப்படையைக்கொண்டு இந்த தை ஒன்று தமிழ்ப்புத்தாண்டாக [...]

சாதிப் பேயின் கோரத்தாண்டவம் !!!!

எங்கோ எதிரிகள் மண்ணாகிப்போயினர் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற வாக்கிற்கிணங்க , மொத்தத் தமிழினமும் இலங்கைப்பிரச்சினை கண்டு தமிழர்கள் எனும் மாபெரும் இனமாய் தமது உரிமைகளுக்கு போராட வேண்டிய , போராடிக்கொண்டிருக்கிற ஒரு சூழலில் மொத்த தமிழினத்திற்கும் ஒரு அவமானமாய் சட்டக்கல்லூரியில் ஒரு கோர சம்பவம் நடை பெற்றிருக்கிறது…
படித்த அறிவு ஜீவிக்கள் கூட எங்கோ ஒரு மூலையில் சில கிராமங்களில் படிக்காத பாமர மக்களும் , கிராமத்து பெரிசுகளும்தான் சாதியை வளர்க்கின்றனர் என்று குற்றம் சாட்டினர்…….நகரங்களில் [...]

நிலா பெண்ணே’.. கலைஞர் கவிதை

‘நிலா பெண்ணே’.. கருணாநிதி கவிதை

சென்னை: நிலவில் இந்திய தேசியக் கொடியோடு ஒரு விண்கலத்தை தரையிறக்கிக் காட்டிய இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டி முதல்வர் கலைஞர் ஒரு கவிதை எழுதியுள்ளார்.

அந்தக் கவிதை:
வான் முகத்தில் நகக்குறி போல்
இருக்கின்ற நிலாப் பெண்ணின்
தேன் கிண்ண இதழ்களிலே முத்தமிட்டு-
இந்திய நாட்டுத்
தேசியக்கொடிதனையும் கையில்
கொடுத்து விட்டுத் திரும்பி வரும்
திறமைமிகு விஞ்ஞானத்தின் கரம் குலுக்கி
வாழ்த்துகின்றோம்.
புராணத்தில் வரும் சந்திரனோ;
குருவின் மனைவி தாரைக்கு;
புதியதோர் காதலன் என்று புராணமே
கூறி வணங்கும்!
பாம்புகள் இரண்டு ராகுவும் கேதுவும்
சந்திரனை விழுங்குமாம்;
பஞ்சாங்கம் அதனை “கிரகணம்” என
விளம்புமாம்!
அனைத்தும் பொய், புளுகு, கற்பனையெனத்
தூக்கி [...]