மக்கட்பணி செய்க!

சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்வி , திமுகவுக்கானது அல்ல. மக்களுக்கேற்பட்ட தோல்வி. ஆரியவல்லியின் அடக்குமுறைகளைக் கண்டு பொங்கியெழ காலம் மக்களுக்களித்த வாய்ப்பு. ஆட்சி செய்யும் அடிப்படைகளேதுமே தெரியாத அதிமுகவைக் இனிமேலும் ஆட்சிக்கட்டிலில் ஏறவிடாமல் செய்திட அரியதொரு வாய்ப்பு. ஆகவே உடன்பிறப்புக்களே , அமைதி காத்திடுக. சமயம் வரும்போது சீறிப்பாய்ந்திடுக. இந்த மக்களுக்கு நல்வழி காட்ட திமுகவை விட்டால் எந்த ஒரு இயக்கம் இருக்கிறது? நாம் மக்கள் மேல் கோவித்துக்கொள்ளலாமா? மக்கள் அடிக்கடி மறந்துவிடுவார்கள். நாம்தான் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்!!! கழக இளைஞர்களே களமாடுவோம். மக்கட்பணி செய்வோம்!!!

 

வாழ்க தமிழகம்…

 

வளர்க தமிழ்த்திருநாடு….

 

வெல்க தமிழர்தம் வேட்கை…

தமிழீழமே உலகத்தமிழர்களின் தாளாத கனவு!!

 

உடன்பிறப்புக்கள்!!

Advertisements

ஸ்டாலினும் முதல்வர்தான்! – தினமணி தலையங்கம்.

எப்போதோ நடந்தேறியிருக்க வேண்டிய ஒன்று காலதாமதமாக இப்போதாவது நடந்திருக்கிறதே என்கிற வகையில் மகிழ்ச்சி. மு.க. ஸ்டாலினுக்குப் பதவியும் அங்கீகாரமும் ஆரம்பம் முதலே தாமதமாகத்தான் கிடைத்து வருகிறது.

1989-ல் 13 ஆண்டு அரசியல் வனவாசத்திற்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டிருந்தால் யாரும் குற்றம் கண்டிருக்க மாட்டார்கள். ஏனோ, முதல்வர் கருணாநிதி அவரை அமைச்சராக்கவில்லை.

இன்றைய அமைச்சரவையில், க. அன்பழகன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தவிர ஏனைய மூத்த அமைச்சர்களான ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி. மணி, பொன்முடி மற்றும் கே.என். நேரு ஆகியோர் முதன்முதலில் அமைச்சர்களானது அப்போதுதான்.

1996-ல் ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்த்தால் மீண்டும் ஏமாற்றம். சென்னை நகர மேயராக்கப்பட்டார். அவர் நிர்வாக அனுபவம் பெற வேண்டும் என்று தந்தையும் முதல்வருமான கருணாநிதி எதிர்பார்த்ததில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியலில் அனுபவமே இல்லாத பலரை அமைச்சர்களாக்குவதில் தயக்கம் காட்டாதவர் தனது மகனிடம் மட்டும் ஏன் தயக்கம் காட்டினார் என்பது புதிர்.

ஏனைய பல திமுக தலைவர்களைவிட, கட்சிப் பொறுப்பையோ ஆட்சிப் பொறுப்பையோ ஏற்கும் தகுதியும் அனுபவமும் மு.க. ஸ்டாலினுக்கு நிச்சயமாக உண்டு. அவரது அரசியல் வாழ்க்கை 70-களில் தொடங்கிவிட்டது. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்பதைவிட அடிமட்டத்திலிருந்து தன்னை உயர்த்திக் கொண்டவர் என்பதுதான் மு.க. ஸ்டாலினின் உண்மையான பலம்.கட்சிக்குப் பிரசார நாடகங்கள் போடுவது, கட்சியின் போராட்டங்களில் பங்கு பெறுவது, இளைஞர் அணியை வலுவான அமைப்பாக மாற்றி இன்றைய தலைவர்கள் பலரை உருவாக்கியது என்று கட்சிக்கு அவரது பங்களிப்பு கொஞ்சநஞ்சமல்ல.

அடிமட்டத் தொண்டராகத் தொடங்கிய அவரது அரசியல் வாழ்க்கை இளைஞரணி, சட்டப்பேரவை உறுப்பினர், சென்னை மாநகர மேயர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், அமைச்சர் என்று தொடர்ந்து இப்போது துணை முதல்வர் பதவியில் அவரை அமரச் செய்திருக்கிறது.கட்சியைப் பொருத்தவரை அவர் தன்னை ஒரு சக்தியாகத் தொண்டர்கள் மத்தியில் வளர்த்துக் கொண்டிருப்பது உண்மைதான் என்றாலும், இதுவரை அவரால் தனது தனித்தன்மையைக் காட்ட முடியாமல் இருப்பது ஏன் என்பதுதான் பலருக்கும் புரியாத புதிர்.

ஏனைய அமைச்சர்கள் எல்லோரும் பத்திரிகையாளர்களிடம் சகஜமாகப் பேசுவதும், பேட்டியளிப்பதுமாக இருக்கும்போது மு.க.ஸ்டாலின் மட்டும் ஒதுங்கியே இருப்பது ஏன் என்று ஆச்சரியப்படாதவர்கள் இல்லை.அதற்கு ஒரு முக்கியமான காரணம், அவர் கருணாநிதி என்கிற ஆலமரத்தின் நிழலில் இருப்பதுதான் என்று கருத வழியுண்டு. நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், மதியழகன் போன்ற ஜாம்பவான்கள்கூட கருணாநிதி என்கிற சூரிய வெளிச்சத்தின் முன்னால் பிரகாசிக்க முடியாதபோது இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்ட மு.க. ஸ்டாலினால் மட்டும் அது எப்படிச் சாத்தியம்?

மேலும், மு.க. ஸ்டாலினுக்குத் தந்தை கருணாநிதியிடம் இருக்கும் பயம் கலந்த மரியாதையால்கூட தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பாமல் இருக்கலாம். தனிமனித நாகரிகத்தைக் கடைப்பிடிப்பதில் மற்றவர்களிடமிருந்து எப்போதுமே வேறுபடுபவர் அவர். சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவத்தின்போது எம்.எல்.ஏ.வான அவர் கடைப்பிடித்த நிதானம் அதற்கு ஓர் உதாரணம். தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது என்று மு.க. ஸ்டாலின் நினைப்பதுகூட காரணமாக இருக்கலாம்.

மேயராகவும் சரி, உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் சரி மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளில் யாரும் பழுது காண முடியாது. தகுதியும் திறமையும் வாய்ந்த அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, தனது துறையின் செயல்பாடுகளில் குற்றம் காண முடியாதபடி நிர்வகிப்பதில் அவர் யாருக்கும் சளைத்தவரல்ல. அதேநேரத்தில், மிகப்பெரிய சாதனை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருடைய நிர்வாகத் திறமை பளிச்சிடவும் இல்லை.

முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவைச்சிகிச்சைக்குச் சென்றபோதே ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து. இந்தத் தள்ளாத வயதில் வீல் சேரில் முதல்வர் அங்குமிங்கும் பயணிப்பதும், தன்னை வருத்திக்கொண்டு நாளும் கிழமையும் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிப்பதும் பிரச்னைகளை எதிர்கொள்வதும் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்தப் பொறுப்புகளைத் துணை முதல்வரான மு.க. ஸ்டாலின் இனிமேல் ஏற்றுச் செயல்படுவார் என்று நம்பலாம்.

இதுநாள் வரை முதல்வர் கருணாநிதியின் நிழலாக இருந்தவர் இனிமேல் தனது தனித்தன்மையைக் காட்ட வேண்டிய நேரம் கைகூடியிருக்கிறது. சுறுசுறுப்புடனும் அரசியல் சாதுர்யத்துடனும் தனது பொறுப்புகளை அவர் கையாளும் விதத்தில்தான் அவருடைய வருங்காலமும், திமுகவின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.  தமிழக சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு துணை முதல்வர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்தவகையில் மு.க. ஸ்டாலின் ஒரு முதல்வர்கூட. “தினமணி’யின் வாழ்த்துகள்.


நன்றி – தினமணி

ஊருக்கு எழைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டியாம்!

வர வர இந்த தமிழ் உணர்வாலர்கலுக்கும் ( சரியான “லா” தான்..!!!) , தமிழகத்த முன்னேத்தப் போறதா சொல்லிக்கிடுறவுக அட்டகாசம் அதிகமாயிட்டு. என்னன்னு கேக்கீகளா?

அதுக்கு முன்னாடி இந்தப் பதிவ படிச்சிக்கிடுங்க.

டெல்லிக்கு ப்ளைட் ஏறிய நம்மூரு புகழ்

என்னமோ வாரிசு அரசியலுக்கும் , காங்கிரசு கட்சிக்கும் சம்பந்தமே இல்லையாம். அதுனால நாடாளுமன்றத்திலே பேபி சீட் இல்லையாம்.

சோனியா காந்தி என்ன தேசத்தோட தாயா ?

ராஜிவ் காந்தியோட சம்சாரம்….

ராஜிவ் காந்தி யாரு ?

இந்திராகாந்தியோட பையன்….

இந்திராகாந்தி யாரு ?

நேரு மாமாவோட பொண்ணு.

அவுகள விடுங்க , அட நம்ம ராகுல் காந்தி ? சோனியாவோட / ராஜிவோட பையன்.

இந்த நாலாம் பரம்பரையில இருக்குற ராகுல் காந்தி மந்திரி பதவி ஏத்துக்கிடணும்னு கெஞ்சுற ஒருத்தர் பேபி சீட்டர் இல்லைங்கறறாம். இத ஒரு கேலிச் சித்திரமாம். அதை வெச்சி நம்ம தமிழ் வெறிப் படை ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்காங்க.

இதெல்லாம் நம்ம தமிழ்நாட்டுல மட்டும் தான் நடக்குமய்யா………

சரத்பவார் பிரதமராக வாய்ப்பு இருக்குன்னா , ஆதரிப்போம்னு நேர் எதிரா இருக்குற கட்சி சிவசேனா அறிக்கை வுடுது. இங்க தமிழ்நாட்டுல மட்டும் தான் ஒருத்தரை ஒருத்தர் கால வாறி விடுற தமிழ் நண்டுகளாவே இருக்காங்க.

தமிலன் தன்னோட சுயநலத்துக்காக அதிகார வட்டத்த உருவாக்கி வெச்சுகிட்டு அது மூலமா ஏதாச்சும் லாபம் வருமான்னு பாக்குறதாலதான் இந்த வாரிசு அரசியலே.

சரி , இன்னிக்கு மதுரைல நான் நிக்கணும்னு அழகிரியா சொன்னாரு ? இல்லியே ஆதரவாளக் குஞ்சுகள் தானே அணியணியா படையெடுத்தாங்க அறிவாலயத்துக்கு?

மதுரையில் அழகிரி போட்டி?

உங்க சுயநலத்துக்காக அவுங்களை பயன்படுத்திகிட்டு அவுங்களையே குறை சொல்றது என்னய்யா நியாயம்?

தமிழ்நாட்டுக்கு அதிக அமைச்சர்கள் மூலமா  அதிகாரம் வாங்கித் தந்தாலும் குற்றம். இல்லேன்னாலும் குற்றம்…. என்னதான்யா செய்யச் சொல்றீங்க????????????

ஒண்ணு தெளிவா சொல்லிப்போடுங்க ,என்ன பண்ணுரதுன்னு…

இல்லாட்டி குட்டயக் கொழப்பாம சும்மா இருங்க.

டைம்ஸ் ஆப் இந்தியா காரன் சொல்லிட்டானாம். உடனே மானம் போச்சாம்….! ராகுல் காந்தி கண்டிப்பா மந்திரி பதவி ஏத்துக்கனும்னு பிரதமர் சொன்னப்போ இந்தியாவோட மானம் போகலியா ?

படுத்துக்கொண்டே ஜெயித்த கலைஞர்..- தட்ஸ்தமிழ் புகழாரம்!

சென்னை: 85 வயதாகும் முதல்வர் கருணாநிதிக்கு, இந்த லோக்சபா தேர்தல் முடிவுகளை மறக்கவே முடியாது. அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி, திமுக கூட்டணிக்கு எதிர்பாராத வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டன அவரது அரசியல் சாதுர்யமும், அட்டகாச காய் நகர்த்தல்களும்.

நேற்று வரைக்கும் இப்படிப்பட்ட ஒரு முடிவு வரும் என கருணாநிதி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

தனது உடல் நலிவையும் தாண்டி மிக அசாத்தியமான தன்னம்பிக்கையையும் தனது அரசின் சாதனைகளையும் மட்டுமே முன்நிறுத்தி தேர்தலை சந்தித்து வெற்றியை ஈட்டிக் காட்டியிருக்கிறார்.

ஈழத் தமிழர் பிரச்சனை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற ரீதியில் எழுந்த பேச்சுக்களும், எழுதப்பட்ட செய்திகளும், கணிக்கப்பட்ட கணிப்புகளும் பொய்யாகி திமுக கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி விட்டன. குறிப்பாக மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி பலத்த அடி வாங்கியுள்ளது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முதல்வர் கருணாநிதி, பிரசாரத்திற்குக் கூட போக முடியாத நிலை. திருச்சி பிரசாரக் கூட்டத்தில் மட்டுமே அவர் பங்கேற்றார். ஆனால், இதனால் ஏற்பட்ட முதுகுவலி-காய்ச்சலால் மருத்துவமனையில் படுத்திருந்தபடி தன்னைச் சுற்றி நடந்து வந்த அரசியல் நிகழ்வுகளை மெளனமாக கவனித்த்தபடி, தனது தளகர்த்தர்களுக்கு செயல் திட்டங்களை மட்டும் போட்டுத் தந்துவிட்டு அமைதி காத்தார்.

இன்றைய முடிவுகள் முதல்வர் கருணாநிதிக்கு நிச்சயம் பெரும் நிம்மதியைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பெரியார் முதல் ஜி.கே.வாசன் வரை எத்தனையோ தலைவர்களுடன் பழகியுள்ள முதல்வர் கருணாநிதிக்கு இன்றைய வெற்றி கடந்த தேர்தலில் கிடைத்த 40க்கு 40 வெற்றியைவிட மிக இனிப்பானது.

இந்த வெற்றியின் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளார் கருணாநிதி.

முதல் மாங்காய் – பாமகவின் உதவி இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை தூள் தூளாக தகர்த்து எறிந்தது.

2வது மாங்காய் – ஈழத் தமிழர் பிரச்சினையால் திமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற வாதத்தை பொய்யாக்கியது.

3வது மாங்காய் – அதிமுக வென்றால் அக்கட்சியின் பக்கம் காங்கிரஸ் போய் விடக் கூடும் என்ற சூழ்நிலையை இந்த வெற்றியின் மூலம் தடுத்து நிறுத்தியது.

4வது மாங்காய் – தனது மூத்த மகனும், தென் மாவட்ட திமுக அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரிக்கு அரசியலில் அபாரமான இருக்கையைப் போட்டுக் கொடுத்தது.

இப்படி பல பலன்களை திமுகவுக்குக் கொடுத்துள்ளார் கருணாநிதி.

60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி பார்க்காத ஏற்ற, இறக்கங்கள் இல்லை. ஆனால் அத்தனையையும் அவர் ஒரே மனோபாவத்தில் எடுத்துக் கொள்வதுதான் வழக்கம்.

சவால்களை சந்திப்பது கருணாநிதிக்கு கை வந்த கலை. 1969ம் ஆண்டு காங்கிரஸ் பிளவுபட்டு, அதன் மூத்த தலைவர்கள் இந்திரா காந்தியை தனிமைப்படுத்தியபோது, தனது 25 எம்.பிக்களையும் இந்திராவுக்கு ஆதரவாக நிற்க வைத்தவர் கருணாநிதி.

1971ம் ஆண்டு லோக்சபாவை கலைத்து தேர்தலுக்கு உத்தரவிட்டார் இந்திரா காந்தி. இதையடுதது துணிச்சலுடன் சட்டசபையைக் கலைத்து தேர்தலுக்கு தயாரானார் கருணாநிதி. அந்தத் தேர்தலில் கருணாநிதி கடைப்பிடித்த உத்தியால், திமுக வரலாறு காணாத வகையில், 182 சீட்களில் வெற்றி பெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

பின்னர் இந்திரா காந்தி அவசர கால நிலையை அறிவித்தபோது அதை கடுமையாக எதிர்த்தார் கருணாநிதி. ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்களுக்கு அவர் புகலிடம் கொடுத்தார்.

இதேபோல கருணாநிதி எடுத்த முக்கியமான,அதிரடி முடிவுகளில் ஒன்றுதான் எம்.ஜி.ஆரை. கட்சியிலிருந்து நீக்கியது. ஆனால் அது அவருக்கு எதிராக திரும்பியது. அதிமுகவை உருவாக்கி கருணாநிதிக்கு பெரும் சவாலாக மாறினார் எம்.ஜி.ஆர்.

1989ம் ஆண்டு தேசிய முன்னணி உருவானபோது, முதல் முறையாக சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்தனர் வட இந்திய தலைவர்கள். அதற்கு முக்கிய காரணம் கருணாநிதிதான். சென்னை மெரீனா கடற்கரையில் தனது நெருங்கிய நண்பரான வி.பி.சிங்கை முன் நிறுத்தி மிகப் பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார் கருணாநிதி.

அதுதான் இன்று வட இந்திய அரசியலை பிராந்தியக் கட்சிகள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதற்காக போடப்பட்ட முக்கிய அடிக்கல்.

வி.பி.சிங் அமைச்சரவையில் முரசொலி மாறன் அமைச்சராக இடம் பிடித்த பின்னர் தேசிய அரசியலில் திமுகவின் பங்கு முக்கியமாக மாறியது.

1989ம் ஆண்டுதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு (எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர்) 3வது முறையாக முதல்வரானார் கருணாநிதி.

இந்த அரசு சந்திரசேகர் புண்ணியத்தால் ஒன்றரை வருடமே நீடித்தது. பின்னர் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பின்னர் நடந்த தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்தது. கருணாநிதி மட்டும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும், அடுத்த சட்டசபைத் தேர்தலில் திமுக விஸ்வரூபம் எடுத்தது. 1996ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது திமுக. கருணாநிதி 4வது முறையாக முதல்வரானார்.

பின்னர் 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் திமுக தோல்வியைச் சந்தித்தது.

இருப்பினும் 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இருப்பினும் தமிழ அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக கூட்டணி ஆட்சியை மக்கள் கொடுத்தனர்.

போராட்டங்களையே தனது வாழ்க்கைக் களமாக மாற்றிக் கொண்டு விட்ட கருணாநிதி, இந்தத் தேர்தலையும் கூட ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் சந்தித்தார்.

கூட்டணி கட்சிகள் பிரிந்து போனது, பல முனைகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது, விலைவாசி உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் அதிருப்தி, ஈழத் தமிழர் பிரச்சினை, எல்லாவற்றுக்கும் உச்சமாக, உடல் நலிவு, பிரசாரத்திற்குக் கூட போக முடியாத நிலை என பல பிரச்சினைகளை திமுக கூட்டணி சந்தித்தபோதிலும், யாரும் எதிர்பாராத வகையில், சிறப்பான வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார் கருணாநிதி.

கடந்த முறை பெற்ற 40 சீட்களையும் திமுக கூட்டணி பெற முடியாவிட்டாலும் கூட, அதிமுக கூட்டணியை முந்த விடாமல் தடுத்து வென்றதே ஒரு சாதனைதான்.

அவ்வளவுதான் என்று எல்லோராலும் கருதப்பட்ட திமுக கூட்டணியின் அரசியல் எதிர்காலத்தை கருணாநிதியின் அணுகுமுறையும், அனுபவ அரசியலும் பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழ வைத்துள்ளது.


Thanks தட்ஸ்தமிழ்

Flash News: ஜெயலலிதாவை சந்திக்க அந்தோணி வருகிறார்.

ஜெ., வை சந்திக்கிறார் அந்தோணி

மே 15,2009,14:09 IST

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக மத்திய அமைச்சர் அந்தோணி ‌சென்னை வரயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி – தினமலர்

http://www.dinamalar.com/latestnews.asp#17617

சென்னையில் திடீர் மின்தடை-‘விஷமிகள் சதி’, 4 பேர் கைது

சென்னை: சென்னையில் பல பகுதிகளில் நேற்றிரவு திடீரென மின்சாரம் தடைபட்டது. தேர்தல் நேரத்தில் ஆளும்கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க எதிர்கட்சிகளைச் சேர்ந்த விஷமிகளே இந்த செயல்களைச் செய்ததாக முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மைலாப்பூர் உள்பட சென்னை நகரின் பல பகுதிகளில் நேற்றிரவு மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து நிருபர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி, இந்த மின்தடை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதற்காக எதிர்கட்சிகளை சேர்ந்த குண்டர்கள் சிலர், சமூக விரோதிகள், இலாகாவில் இருந்து சில பேர் சதிவேலையில் ஈடுபட்டு மின் தடையை வேண்டுமென்றே உருவாக்கியிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

அந்த விஷமிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வேண்டும் என்றே திட்டமிட்டு செய்துள்ள இந்த விஷமத்தனத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். விஷமிகளை அடையாளம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறேன் என்றார். இந் நிலையில் இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போடுங்கம்மா ஓட்டு….ரெட்டை எலையப் பாத்து…!

அரசு ஊழியர்களே…..

ஒரே கையெழுத்தில் உங்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிய பெருமை வாய்ந்த ரெட்டை இலைக்கே உங்கள் ஓட்டு…..!!!

போக்குவரத்து கழக ஊழியர்களே……..

உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தையும் , போனஸ்ஸையும் தர மறுத்த ரெட்டை இலைக்கே உங்கள் ஓட்டு….!

பெரியாரின் சீடர்களே……….

தான் ஒரு பாப்பாத்தி என்று சபையிலேயே அறிவித்துக் கொண்ட அதிமுகவின் பார்ப்பனத் தலைமைக்கும் , இன்று வரை பாரதிய ஜனதாவின் குரலில் , பார்ப்பனீயத்தின் குரலை எதிரொலிக்கும் ரெட்டை இலைக்கே உங்கள் ஓட்டு….!

தமிழுணர்வாளர்களே…..

வருடக்கணக்கில் புலிகள் என்ற பேச்சை எடுத்ததற்கே சிறையில் வைகோவை சிறையில் அடைத்த அம்மாவுக்கே உங்கள் ஓட்டு.

எம்.ஜி.ஆரின் சீடர்களே….

எனக்கு எல்லாமே எம்.ஜி.ஆர். தான் என்று ஒப்பாரி வைத்த ஜெயலலிதாதான், அவர் உயிருடன் இருந்தபோதே அன்றைய பிரதமர் அமரர் ராஜீவ்காந்திக்கு எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்க லாயக்கற்றவர் என்று கடிதம் எழுதி உண்ட வீட்டிற்கு துரோகம் இழைத்த ஜெயலலிதாவுக்கே உங்கள் ஓட்டு…!

தமிழகத் தமிழர்களே…….

விடுதலைப்புலிகளால் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடுகிறது என்று பொய்ப்பிரச்சாரம் செய்து , அத்தகைய புலிகளுக்கு ஆதரவு அளிக்கிற ஆட்சி திமுக என்று சொல்லி ஆட்சியைக் கலைக்க வைத்து புலிகளின் மீதான தடையை இந்தியாவில் முதலில் அங்கீகரித்து இன்றளவும் புலிகளின் தலைமையை வெறுத்து ஒதுக்கும் அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு…!!!!

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி-தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றிய அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு…!!!!

கம்யூனிஸ்டுகள் ஈழத்தமிழர்களுக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் விஜய்காந்த் கட்சியும் கலந்து கொண்டது என்ற காழ்ப்புணர்வு காரணமாக எவ்வித அக்கறையும் இன்றி புறக்கணித்த அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு….!!!

தமிழ்ச்செல்வன் மறைவிற்காக ஒரு இரங்கற்பா எழுதிய காரணத்தால் கலைஞரின் ஆட்சியையே கலைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ரெட்டை இலைக் கட்சிக்கே உங்கள் ஓட்டு.!!!!

ஈழத் தமிழர் என்று சொல்வதைக் கூட சகித்துக்கொள்ளாமல் , இலங்கைத் தமிழர் என்றுதான் சொல்ல வேண்டும் என்று திமிராகப் பேசிய அதிமுக தலைமைக்கே உங்கள் ஓட்டு.

சற்றேறக்குறைய ஒரு லட்சம் தமிழ் மக்களைப் பலி கொண்ட ஒரு போராட்டத்தை இதுகாறும் கொச்சைப்படுத்தி விட்டு , ஒற்றை இரவில் ஒரு சி.டி.யைப் பார்த்து புரிந்துகொண்டதாகப் புழுகும் அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு….!!

இன்றளவும் தமிழகத்தின் எந்தவொரு பெரிய கட்சியையும் புலிகளுக்கு ஆதரவாக , ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதையோ , எழுதுவதையோ , ஒரு பேரணி நடத்துவதையோ அன்றாடம் எதிர்த்துக்கொண்டு, ஈழ ஆதரவினை முணை மழுக்கிக்கொண்டு , ஈழ விடுதலைப் போருக்கு ஒரு தடுப்புச் சுவராக நின்று கொண்டு , ஆயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்யும் சிங்களத்துக்கு உதவிக்கொண்டு சிங்கள ரத்னாவாகக் காட்சியளித்த ஜெயலலிதாவுக்கே உங்கள் ஓட்டு.!!!!!

போடுங்கம்மா ஓட்டு………………………………..

ரெட்டை இலையைப் பார்த்து………!!!!!

வெய்யுங்கம்மா வேட்டு…..

தமிழினத்தின் எதிர்க்காலத்தைப் பார்த்து….!

சொருகுங்கம்மா ஆப்பு……….

தமிழ்நாட்டு முன்னேற்றத்தைப் பார்த்து…….

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு….!!!

நம்ம மாக்களுக்கு ?