சாதனை

தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன?

கலைஞர்:

அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது ஒரு பெருஞ்சாதனை!


அண்ணா காலத்தில்தான் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டன.

அண்ணா காலத்தில்தான் கழக ஆட்சியில் இந்தி மொழி ஆதிக்கம் அகற்றப்படவும் – தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழித்திட்டம் அறிவிக்கப்படவுமான நிலை.

அண்ணா மறைவுக்குப் பின் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்திடும் இந்தப் பதினாறு ஆண்டு காலத்தில்;

1. மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு, அவற்றுக்கு மாற்றாக அந்தத் தொழிலாளிகளுக்கு இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கப்பட்ட திட்டம்.

2. பட்டிதொட்டி முதல் பட்டினக்கரை வரையில் பார்வை இழந்தோர்க்கு இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.

3. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்.

4. விவசாயிகளுக்கு – நெசவாளர்களுக்கு – இலவச மின்சாரத் திட்டம்.

5. பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் – வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு.

6. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்.

7. குடிசை மாற்று வாரியம்.

8. குடிநீர் வாரியம்.

9. ஆதி திராவிடர்க்கு இந்தியாவிலேயே முன் மாதிரியான இலவச வீடுகள் வழங்கும் திட்டம்.

10. மலம் சுமக்கும் துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கு மாற்றுத் திட்டம்.

11. பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு – அரசு போக்குவரத்துக் கழகங்கள் அமைப்பு; பேருந்துகள் கிராமங்களுக்கெல்லாம் செல்ல வழிவகை காணப் பட்டது.

12. உடல் ஊனமுற்றோருக்கு உதவி வழங்கும் பல்வேறு திட்டங்கள்.

13. விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கடன் ரத்து திட்டம் – வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக் குறைப்பு.

14. கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்றாக்கி, தற்போது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்த்
திட்டம்.

15. விலைவாசியைக் கட்டுப்படுத்திட குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் – 50 ரூபாய்க்கு 75 ரூபாய் பெறுமானமுள்ள மளிகைப் பொருள்கள்.

16. காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டம் – மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து.

17. சத்துணவில் வாரம் மூன்று முட்டைகள் – வாழைப்பழம் வழங்கும் திட்டம்.

18. புதிய புதிய பல்கலைக்கழகங்கள் – பொறியியல் கல்லூரிகள் – மருத்துவக்கல்லூரிகள் – கலை அறிவியல் கல்லூரிகள்.

19. பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பாஸ்.

20. ஏழை மகளிருக்கு முதுகலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.

21. சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம்.

22. பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம்.

23. பரிதிமாற் கலைஞரின் கனவு நனவாகி தமிழ் செம்மொழி என அறிவிப்பு.

24. தைத் திங்கள் முதல் நாள் – தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம்.

25. மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை.

26. ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி.

27. கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி

28. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 நல வாரியங்கள்.

29. 50 வயதாகியும் திருமணம் ஆகாத ஏழை மகளிருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கும் திட்டம்.

30. மகளிர் சுய உதவிக் குழுக்கள் – சுழல் நிதி உதவிகள்.

31. அதைப் போலவே இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழுக்கள்.

32. தொலைக் காட்சிப் பெட்டிகள் இல்லா வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்.

33. எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்.

34. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.

35. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.

36. நமக்கு நாமே திட்டம்.

37. ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்.

38. திருச்சியில் உய்யகொண்டான் – சேலத்தில் திருமணிமுத்தாறு சீரமைப்புத் திட்டங்கள்.

39. மாநிலத்திற்குள் நதிகளை இணைக்கும் மாபெரும் திட்டம்.

40. நகராட்சிகள் அனைத்திலும் பாதாளச் சாக்கடைத் திட்டம்.

41. சென்னை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம்.

42. சென்னை மாநகரில் விளம்பரப் பலகைகளை அகற்றி சிங்காரச் சென்னையாக்கிய திட்டம்.

43. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.

44. கட்டணத்தை உயர்த்தாமல் பத்தாயிரம் புதிய பேருந்துகள்.

45. புதிய சட்டமன்ற வளாகம் – தலைமைச் செயலகம்.

46. உலகத் தரத்தில் அரசு நவீன நூலகம்.

47. உழவர் சந்தைத் திட்டம்.

48. வேலை நியமனத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு அரசுத் துறைகளில் புதிதாக 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.

50. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய காவலர்கள் நியமனம்.

51. இந்தியாவிலேயே முன்னோடியாக மூன்று காவல் ஆணையங்கள் (போலீஸ் கமிஷன்கள்).

52. வருமுன் காப்போம் திட்டம்.

53. ஏழைச் சிறார் இதய நோய்த்தீர்க்கும் திட்டம்.

54. நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம்.;

55. புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்வோருக்கு வீட்டு மனைப்பட்டா.

56. இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு.

57. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து.

58. மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு.

59. பழங்குடியினருக்கு புதிதாக ஒரு சதவிகித இட ஒதுக்கீடு.

60. அரசு அலுவலர்களுக்கு மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம்.

61. அரசு அலுவலர் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி.

62. விடுதலை வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நினைவகங்கள் – குடும்பங்களுக்கு நிதி உதவிகள்.

63. சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரி முனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை.

Advertisements

4 Comments

 1. வணக்கம் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் மனிதர்கள் யாரும் சாதனை களை குரை கூற முடியாது ஆனால் விவசாய கடன் தள்ளுபடி இது மேல்தட்டு மக்கலுக்கு பயன்..அதேபோல் ஒரு ரூபாய் அரிசிமுதல் 2 ஏக்கர் நிலம் வரை கீல்தட்டு மக்கலுக்கு பயன் எங்களை போல் மேலையும் போகமுடியாமள் கீலேயிம் போகமுடியாமள் இறுக்கும் எங்களை மறந்தது ஏன் உன்மையில் நாங்கள் தான் இதுவரை எந்தபலனும் அனுபவிக்காத அப்பாவிகள் நடுத்தரவாதிகள் எங்கலுக்கும் ஏதாவது சலுகை வேண்டும் என்று உரிமையோடு கேக்கிரேன் நடுத்தரமக்கள் அனைவருமே வாடகை வீட்டில் இருப்பவர்கள் அவர்கலுக்கு 4 செண்டு இடம் கொத்து உதவும் படி கேட்டுகொள்கிரேன் வரும் சட்டமன்றதேர்தலில் தேர்தல் அறிக்கையி இதை எதிர் பர்க்கிரேன் 64வது சாதனையாக இது இருக்கும் என்று நினைக்கிரேன் இப்படிக்கு

  AVSஅயூப்கான்
  உத்தமபாளையம்
  தேனி மாவட்டம்

 2. வணக்கம் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் மனிதர்கள் யாரும் சாதனை களை குரை கூற முடியாது ஆனால் விவசாய கடன் தள்ளுபடி இது மேல்தட்டு மக்கலுக்கு பயன்..அதேபோல் ஒரு ரூபாய் அரிசிமுதல் 2 ஏக்கர் நிலம் வரை கீல்தட்டு மக்கலுக்கு பயன் எங்களை போல் மேலையும் போகமுடியாமள் கீலேயிம் போகமுடியாமள் இறுக்கும் எங்களை மறந்தது ஏன் உன்மையில் நாங்கள் தான் இதுவரை எந்தபலனும் அனுபவிக்காத அப்பாவிகள் நடுத்தரவாதிகள் எங்கலுக்கும் ஏதாவது சலுகை வேண்டும் என்று உரிமையோடு கேக்கிரேன் நடுத்தரமக்கள் அனைவருமே வாடகை வீட்டில் இருப்பவர்கள் அவர்கலுக்கு 4 செண்டு இடம் கொத்து உதவும் படி கேட்டுகொள்கிரேன் வரும் சட்டமன்றதேர்தலில் தேர்தல் அறிக்கையி இதை எதிர் பர்க்கிரேன் 64வது சாதனையாக இது இருக்கும் என்று நினைக்கிரேன் இப்படிக்கு

  AVSஅயூப்கான்
  உத்தமபாளையம்
  தேனி மாவட்டம்

 3. good

 4. வணக்கம்
  இவ்வளவும் செய்தும் மக்கள் புறக்க்கனிக்கிறார்கள். எதுவுமே செய்யாதவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
  ‘ தேமே’ என்று இருந்த எம்.ஜி.ஆர். ஒரு எடுத்துக்காட்டு.
  நல்லவை செய்ய வேன்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பல்ல.
  தீயது என மக்கள் கருதுவது நடைபெறாமல் கவனித்துகொள வேன்டும்.


Comments RSS TrackBack Identifier URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s