நிலா பெண்ணே’.. கலைஞர் கவிதை

‘நிலா பெண்ணே’.. கருணாநிதி கவிதை

சென்னை: நிலவில் இந்திய தேசியக் கொடியோடு ஒரு விண்கலத்தை தரையிறக்கிக் காட்டிய இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டி முதல்வர் கலைஞர் ஒரு கவிதை எழுதியுள்ளார்.

Earth image taken by Chandrayan

அந்தக் கவிதை:

வான் முகத்தில் நகக்குறி போல்
இருக்கின்ற நிலாப் பெண்ணின்
தேன் கிண்ண இதழ்களிலே முத்தமிட்டு-

இந்திய நாட்டுத்
தேசியக்கொடிதனையும் கையில்
கொடுத்து விட்டுத் திரும்பி வரும்
திறமைமிகு விஞ்ஞானத்தின் கரம் குலுக்கி
வாழ்த்துகின்றோம்.

புராணத்தில் வரும் சந்திரனோ;
குருவின் மனைவி தாரைக்கு;
புதியதோர் காதலன் என்று புராணமே
கூறி வணங்கும்!

பாம்புகள் இரண்டு ராகுவும் கேதுவும்
சந்திரனை விழுங்குமாம்;
பஞ்சாங்கம் அதனை “கிரகணம்” என
விளம்புமாம்!

அனைத்தும் பொய், புளுகு, கற்பனையெனத்
தூக்கி அடித்து;

அமெரிக்க, ரஷ்ய, அய்ரோப்பிய
கூட்டமைப்பு நாடுகளின்
அணிவகுப்பில் இணைந்து அருஞ்சாதனை
புரிந்து விஞ்ஞானம்;
அசோக சக்கரக்கொடியை அம்புலியில்
நாட்டியது;

அறிவியக்க வரலாற்றில் ஓர் அற்புதமாம்;
அதுவும் நம் நாட்டில் என்பதிலோர் பெருமிதமாம்!

– கலைஞர் மு கருணாநிதி

இப்படி அவர் , இந்தியாவின் சாதனையை பாராட்டிய அதே சமயம் ,

தகுந்ததோர் சமயத்தின் புரட்டுக்களையும் கிழித்தெறிய தயங்கவில்லை..

கிரகம் விழுங்கியதால் கிரகணமாம் , அதே ராகு சாயா கிரகமாம் …!!!!!

புற ஊதாக் கதிர் தோலுக்கு தீங்கென்றால் பகுத்தறீவு….அந்தக்கதிர் தான்

நமது சாதனைக்கும் , வேதனைக்கும் காரணம் என்பது மூடர்தம் கருத்து.!!!!

இதை உணர்ந்து நாம் நம்மை உயர்த்திக்கொள்வோம்!!!

சாமியைக் கும்பிடு….தப்பில்லை , மன நிம்மதிக்காகவேனும் இல்லாத

சாமியைக் கும்பிடு , தவறே இல்லை!!!!! ஆனால்

ஆசாமியைக் கும்பிடாதே …..அதை அந்தச்

சாமி கூட மன்னிக்குமா என்பது சந்தேகம்தான்!!!!!

பங்காரும் சாமி , சங்கராச்சாரியாரும் சாமி என்றால்

இன்றும் சீரடி சாயிபாபாவுக்கு சிலை இருக்கிறதென்றால் ,

ஒருவேளை முருகனும் , சிவனும் அவ்வாறோ என்ற

சந்தேகம் எழுவது இயற்கையன்றோ ????

இன்னுஞ் சில மைல்கல்லாவது சாமியாகாமல்

தனது பணியைச் செய்யட்டும்…அதற்காகவேனும்

பகுத்தறிவை உபயோகம் செய்து மக்களுக்கு

வழி காட்டுவோமாக….!!!!!!!!!

Advertisements

2 Comments

 1. புராதன மனிதர்களின் கற்பனைக்கேற்ப உருவாக்கிய கதைகளில் சந்திரனைப் பாம்பு விழுங்குவதால் கிரகணம் ஏற்பட்டது என்று புளுகி வைத்தனர். இதைக் கடவுளர் புராணங்களாக்கி பக்தியை வளர்த்தனர். இன்றைய விஞ்ஞானம் அவை அனைத்தும் கற்பனை என்று நிருபித்துள்ளது. பாம்பு விழுங்கும் அளவுக்கு சந்திரனை பிஸ்கட் என்று நினைத்து விட்டார்கள் போலும்! ஆனால் உண்மையாக இறைவன் அருளிச் செய்தவை இத்தகைய முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதையும் சிந்திக்க வேண்டும். சூரியன் ஓரிடத்தில் நிலை கொண்டுள்ளது என்று மக்கள் நம்பியிருந்த காலத்திலேயே சூரியனின் சுழற்சியைப் பற்றிக் குர்ஆன் கூறியது! ” சூரியன் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் அது சென்று கொண்டிருக்கிறது. இது (யாவற்றையும்) மிகைத்தவனும், நன்கறிந்த வனுமானவனுடைய ஏற்பாடாகும்.” (குர்ஆன்: 36: 38) பூமி தட்டையானது என்று மக்கள் நம்பியிருந்த காலத்திலேயே பூமி மற்றும் இதர கோளங்களின் சுழற்சியைப் பற்றி எடுத்துக் கூறியது. “சூரியன் அது சந்திரனை (அணுகிப்) பிடிக்க முடியாது. இன்னும், இரவு, பகலை முந்திவிடவும் முடியாது. ஒவ்வொன்றும் (தமக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள) வட்ட வரைக்குள் நீந்திச் செல்கின்றன.”(குர்ஆன்: 36: 40) சந்திரனை இரவின் விளக்கு என்று மக்கள் நம்பியிருந்த காலத்திலேயே சூரியன் தான் ஒளியின் பிறப்பிடம் சந்திரன் அவ்வொளியைப் பிரிதிபலிக்கிறது என்று பறை சாற்றியது! “ஏழுவானங்களையும் அடுக்கடுக்காக, அல்லாஹ் எவ்வாறு படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா? இன்னும், அவற்றில் சந்திரனை ஒளியாகவும், சூரியனை விளக்காகவும் அவனே ஆக்கியுள்ளான்.” (குர்ஆன்: 71: 15,16) “வான(மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை அமைத்து, அதில் (சூரியன் என்னும்) விளக்கையும், பிரகாசிக்கும் சந்திரனையும் அமைத்தானே அவன் பாக்கியமுடையவன்.” (குர்ஆன்: 25:61) விஞ்ஞானிகளும் பகுத்தறிவு வாதிகளும் தங்கள் சிந்தனையைக் குர்ஆனை நோக்கித் திருப்புவார்களாக. சந்திரனுக்கு செயற்கைக் கோளை அனுப்பி சாதனை படைத்தவர்கள் சந்திரனின் இறைவனுக்கு தலை வணங்குவார்களாக!

 2. இசுலாம் மதமோ அல்லது எந்தவொரு மதமோ , மனிதனுக்கு நல்வழியை போதிக்குமானால் அதை வரவேற்கத்தான் வேண்டும்…

  ஆனால் இன்றைய சூழலில் எல்லா மதங்களும் , மனிதர்களை ஒன்று படுத்துவதை விட்டுவிட்டு வேற்றுமையை வளர்க்கவே முயற்சிக்கின்றன…

  உடனே நீங்கள் சொல்லலாம் , அது மதத்தின் தவறல்ல , மதத்தை பின்பற்றுபவர்களின் தவறென்று…சரிதான்…

  ஆனால் ஒரே கேள்வி , தன்னைப் பின்பற்றுபவனைக்கூட சரி செய்ய இயலாத இந்த மதங்களா மக்களுக்கு நல்வழி காட்டப்போகின்றன திரு.அப்துர் ரஹ்மான்??

  ஆகவே , வேற்றுமை களைந்து ஒன்றுபடுவோம்!!!

  அதற்கு மதம் , சாதி கடந்த மனிதம் பின்பற்றும் மகத்துவ சமுதாயமே ஒரே வழி!!!


Comments RSS TrackBack Identifier URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s