“டோண்டு” சாருக்கு கலைஞரின் விளையாட்டின் மீதான திடீர் அக்கறை!

அது சின்னக்கவுண்டர் என்ற திரைப்படம்னு நெனைக்கிறேன்……! எந்நேரமும் தேவையில்லாத ஆராய்ச்சி பண்ணிக்கொண்டே இருப்பார் திரு.செந்தில் , கவுண்டமணி அதைக்கிண்டலடிப்பார் கவுண்டமணி….

அத்தகைய செந்தில் சாரின் தேவையற்ற ஆராய்ச்சி போலவே இருக்கிறது ஜூவியின் ல்லுல்லாயி ஆராய்ச்சியும் அதையொட்டிய டோண்டூ சாரின் பதிவும்….!!

கிண்டலாகச் சொன்னேன் என்று பெருந்தன்மையுடன் சொன்ன பிறகும் அதற்காக மான நஷ்ட வழக்குப்போடும் ஜெயல்லிதாவைக் கண்டிக்க துப்பில்லாதவர் அவர் என்றே நாம் கருதுகிறோம்…

மேம்பால ஊழல் வழக்கென்று கலைஞரை நள்ளிரவில் கைது செய்தாரே , இன்று அந்த வழக்கில் எந்த மூகாந்திரமும் இல்லை , குற்றமும் நிரூபிக்கப்படவில்லை…!!! அதற்காக ஜெயல்லிதா மன்னிப்புக் கேட்டாரா ? அதைக் கண்டிக்க நினைத்தாரோ டோண்டு சார்…? இல்லை இதே போன்ற ஒரு நையாண்டிப்பதிவையாவது பதிந்தாரா?

டோண்டு சாரை பல காலமாக பதிவுகளின் அறிந்தவன் என்ற முறையில் , நானும் மற்ற நண்பர்களும் அவரை “சோ”வின் பிரச்சார பீரங்கி என்பதனையும் , துக்ளக்கின் வலைப்பதிவு முகம்தான் அவரது இணையப்பக்கம் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது..!!!!!

ஆகவே , துக்ளக்கிற்குள்ள வாசகர் வட்டமும் , டோண்டு சாரின் வலைப்பதிவு வாசகர் வட்டமும் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான கருத்தோட்டம் கொண்டவர்கள் என்பது தான் உண்மை…

தான் எழுதுவதே மக்களின் கருத்தாக இருக்க வேண்டும் , மாற்றுக்கருத்துக் கொண்டவர்களெல்லாம் முட்டாள்கள் என்பதை சோ அவர்கள் என்றுமே தன்னுடைய அடிமனதில் நினைத்துக்கொண்டுதான் இருக்கிறார்…..அதைத்தான் காட்டுகின்றன , சமீபத்திய வட இந்தியப்பத்திரிகைக்களிடம் அளிக்கும் பேட்டி.  தனது கருத்தையே தமிழக மக்களின் கருத்தாக திரித்துக் கூறுவதில் ஏற்படும் அற்ப சந்தோசம் அவருக்கு…

அதே போலவே , ஜூவியின் இந்த நையாண்டியை எடுத்து தனது வாசகர்களுக்கு கொடுத்து மகிழ்ந்து போவதில் அற்ப சந்தோஷம் திரு.டோண்டு சாருக்கு..!!!!

ஆனால் , இவ்வாறு கலைஞரை விமர்சிக்கும் பலரும் ஒருதரம் கூட மறந்தும் ஜெஜெவையோ , சோவையோ , ராம் ஐயோ , சுப்ரமன்யம் சுவாமியையோ விமர்சிப்பது கிடையாது…

நாமாவது வெளிப்படையாக நமது நிலையை அறிவித்து விட்டு வாதம் செய்கிறோம்….

ஆனால் , இவர்கள்???????

வளரட்டும் உங்கள் பணி ,

வளரட்டும் கலைஞரின் விளையாட்டு மீதான அக்கறை !!!!

Advertisements

10 Comments

 1. ///கிண்டலாகச் சொன்னேன் என்று பெருந்தன்மையுடன் சொன்ன பிறகும் அதற்காக மான நஷ்ட வழக்குப்போடும் ஜெயல்லிதாவைக் கண்டிக்க துப்பில்லாதவர் அவர் என்றே நாம் கருதுகிறோம்…///

  கலைஞர் கிண்டலாகச் சொன்னேன் என்பது மான நஷ்ட வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்ள இல்லையா?.பெருந்தன்மையா?…அப்பப்பா என்ன ஒரு பெருந்தன்மை!.செருப்பால் ஒரு அடி அடித்து விட்டு உதை வாங்கு வதில் இருந்து தப்பிக்க சட்டையில் அழுக்கு இருந்தது அதை தட்டிவிடத்தான் செருப்பால் அடித்தேன்.என்று சொன்னால் தமாஷாக இருக்காது!. 🙂

 2. கலைஞர் கிண்டலாகச் சொன்னேன் என்பது மான நஷ்ட வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்ள இல்லையா?.பெருந்தன்மையா?…அப்பப்பா என்ன ஒரு பெருந்தன்மை!.செருப்பால் ஒரு அடி அடித்து விட்டு உதை வாங்கு வதில் இருந்து தப்பிக்க சட்டையில் அழுக்கு இருந்தது அதை தட்டிவிடத்தான் செருப்பால் அடித்தேன்.என்று சொன்னால் தமாஷாக இருக்காது!. 🙂 //

  வாங்க நல்லதந்தி சார்…நேர்மையான கேள்வி , வரவேற்கிறேன்….

  அதே சமயம் , நான் கேட்ட மிக முக்கியக் கேள்வி
  “”
  நாமாவது வெளிப்படையாக நமது நிலையை அறிவித்து விட்டு வாதம் செய்கிறோம்….

  ஆனால் , இவர்கள்???????
  “”

  உங்களுடைய பதிவையும் நெடுநாடகளாக படித்து வருபவன் என்ற முறையில் இந்தக்கேள்வி உங்களுக்கும்தான்!!

 3. டோண்டு மற்றவர்களை வம்புக்கு இழுத்து புகழ் தேட விரும்பும் ஒரு சராசரி மனிதன். இன்னுமா அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை?

  புள்ளிராஜா

 4. நண்பர் புள்ளிராஜா ,

  நாம் புரிந்துகொண்டதால்தான் இந்தப்பதிவே…!!

  புரியாதவர்களுக்காக………..

 5. ஜு.வி,துக்ளக்,தினமலர் போன்றவைகள் எல்லாம் அவாள் பத்திரிக்கைகள்.அவற்றில் இருந்து நீங்கள் நடுநிலை எதிர்பார்ப்பது,
  ஜெயலலிதாவிடம் இருந்து அடக்கத்தை எதிர்பாப்பது போல்.

 6. //தான் எழுதுவதே மக்களின் கருத்தாக இருக்க வேண்டும் , மாற்றுக்கருத்துக் கொண்டவர்களெல்லாம் முட்டாள்கள் என்பதை சோ அவர்கள் என்றுமே தன்னுடைய அடிமனதில் நினைத்துக்கொண்டுதான் இருக்கிறார்//

  இதில் நீங்கள் டோண்டு அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்

 7. ஜு.வி,துக்ளக்,தினமலர் போன்றவைகள் எல்லாம் அவாள் பத்திரிக்கைகள்.அவற்றில் இருந்து நீங்கள் நடுநிலை எதிர்பார்ப்பது,
  ஜெயலலிதாவிடம் இருந்து அடக்கத்தை எதிர்பாப்பது போல்.//

  உண்மைதான் திரு.தமிழரசு , இவற்றிடம் இருந்து நாம் என்றைக்குமே நடுநிலையை எதிர்ப்பார்க்கவில்லை… எதிர்பார்க்கவும் முடியாது…ஆனால் , சமூகத்தின் ஒரு சாரார் இன்றைக்கும் இதுபோன்ற புல்லுருவிகளைத்தான் நடுநிலைப்பத்திரிக்கைகளாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்…

  இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழர் எதிர்ப்பு பத்திரிக்கைகளென நிருபிக்கப் பட்ட பத்திரிக்கைகளை விட இந்த நடுநிலை வேடமிட்ட நரிக்கூட்டம் ஆபத்தானது…

  அவர்களின் வேடத்தை கிழித்தெறிவதென்பது அவசியமானதொன்று.!

 8. இதில் நீங்கள் டோண்டு அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்//

  முடிவை நாம் வாசகர்களுக்கே விட்டுவிடுகிறோம்..

  வருகைக்கு நன்றிகள்
  திரு.தம்பி ,
  திரு.தமிழரசு ,
  திரு.புள்ளிராஜா மற்றும்
  திரு.நல்லதந்தி..

 9. அடப்பாவி, இன்னிக்குதான்யா பாத்தேன் .எனக்கும் சேத்து வெச்சிட்டியே ஆப்பு! :))))

 10. உடன் பிறப்பு உங்க கருத்துக்கு எந்த வகையிலும் உடன் படாத பிறன் போக்கு.கவனிக்க பொறம்போக்கு அல்ல! 🙂


Comments RSS TrackBack Identifier URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s