டோண்டு சார் – இன்னும் இரட்டை வேட “மோடி”தான் பிரதமராக வேண்டுமா?

கொஞ்ச நாளைக்கு முன் டோண்டு சார் , யாரோ ஒரு வட இந்தியர் மோடியைச் சந்தித்தது பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். மோடி மாதிரி ஒருவர்தான் இந்தியாவின் பிரதமராக வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா குடி முழுகிப் போய் விடும் என்று.

தீவிரவாதம் ,தீவிரவாதம் என்று கூவிக்கொண்டும் , அதற்கு பொடா சட்டத்தைக் கொண்டு வந்தாக வேண்டும் என்றும் கூப்பாடு போட்ட காவிக்கட்சிக்காரர்களின் வேடம் , “புரோகித்”தின் கைதை நியாயப்படுத்தும் போதே ஓரளவு கலைந்துவிட்டது எனலாம்……

இப்போது “புரோகித்” விடயத்தில் எந்நேரமும் தீவிரவாதத்தை மதத்துடன் சம்பந்தப்படுத்தக் கூடாது என்று கூப்பாடு போடும் இவர்கள் எந்நேரமும் இசுலாமிய தீவிரவாதம் என்று கூச்சலிடுவதேன் என்ற கேள்வி இன்னும் அப்படியேதான் இருக்கிறது….

நிற்க , இந்தப் பதிவானது இன்று செய்திகளில் வந்திருக்கின்ற காவிகளின் , மோடிகளின் புளுகு மூட்டையை அம்பலப்படுத்துகின்ற ஒரு செய்தியைப் பற்றியதாகும்…………இனி அச்செய்தியை அப்படியே கீழே கொடுக்கிறேன்..

அப்போது வில்லன்.. இப்போது ஹீரோ-சங் பரிவாரின் ‘நாடகம்’

Hemant Karkare

மும்பை: தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் ஹேமந்தை வில்லனாக சித்தரித்த நரேந்திர மோடி இப்போது அவர் பலியான பின் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு முதலைக் கண்ணீர் விட்டு வருகிறார்.

கர்கரே தான் மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் ஆகியோர் கைதாகக் காரணமாக இருந்தார்.

இதையடுத்து இவரை வில்லன் போல சித்தரித்தன பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்றவை. குறிப்பாக அத்வானியும் மோடியும்.
இந் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த அவரது பெயரைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கும் வேலையை பாஜக செய்தது. மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார்.

ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

அதே போல தீவிரவாதிகளுடன் சண்டை நடந்து கொண்டிருந்தபோது பாஜக தலைவர் அத்வானி தாஜ் ஹோட்டலுக்கு அருகே வந்து பேட்டி தந்து ராணுவம் என்எஸ்ஜியை எரிச்சலாக்கியதைப் போல, நரேந்திர மோடி தாக்குதல் நடந்து கொண்டிருந்த ஓபராய் ஹோட்டலுக்கு அருகே வந்தையும் ராணுவமும் போலீசாரும் ரசிக்கவில்லை.

அதிகாரிக்கு ஹேமந்த் ரகசிய கடிதம்:

இதற்கிடையே இந்த தாக்குதலில் தான் உயிரிழக்கவும் நேரலாம் என்பதை ஹேமந்த் முன்பே அறிந்திருந்தாரோ என்னவோ தனது முக்கிய அதிகாரிக்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பிவிட்டுச் சென்றிருக்கிறார்.

தீவிரவாத எதிர்ப்புப் படையில் உள்ள ராகுல் கோவர்தனுக்கு அவர் அனுப்பிய ரகசிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை கோவர்தன் விளக்க மறுத்துவிட்டார்.

மலேகாவ்ன் விசாரணை தொடர்பான சில முக்கிய விவரங்கள் அதில் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

தீவிரவாதிகளுக்கு எதிராக தாஜ் ஹோட்டலில் தாக்குதலுக்குக் கிளம்பும் முன் இந்தத் கடிதத்தை கோவர்தனுக்கு அனுப்பிவிட்டு அதை அவருக்கு போனிலும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் ஹேமந்த்.

சங் பரிவார்-கவலை தெரிவித்த ஹேமந்த்:

இதற்கிடையே முன்னாள் மும்பை போலீஸ் கமிஷ்னர் ரோட்ரிகஸ் கூறுகையில், ஹேமந்த் மறைந்ததின் மூலம் மும்பை போலீசாருக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் தன்னை சங் பரிவார் தவறாக சித்தரிப்பது குறித்து 5 நாட்களுக்கு முன் என்னை சந்தித்து வருத்தப்பட்டார். அதே நேரத்தில் தான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்றும் கூறிவிட்டுச் சென்றார்.

மிக நேர்மையான அதிகாரி, இக்கட்டடான கால கடத்தில் அவரை இழந்திருக்கிறோம் என்றார்.

===================================================================

இப்படிப் பட்ட  இரட்டை வேடங்களை வெளிப்படையாக பேணும் மோடியும் , அத்வானியுமே இந்தியாவை முன்னேற்ற முடியும்???

ஒருவேளை , நர மாமிசன் மோடி இந்தியப்பிரதமராகும் சூழல் ஏற்பட்டால் , அனேகமாக இந்தியா ஒரு மாபெறும் சுடுகாடாக வேண்டுமானால் மாற வாய்ப்பிருக்கிறது…

அப்போதும் “டோண்டு” சார் “பிரவீன் தொகாடியா” பிரதமரானால்தான் இந்தியா சுபிக்ஷம் பெறும் என்று சோசியம் பார்த்து சொன்னாலும் சொல்வார்!!!

யார் கண்டது???

பிற்சேர்க்கை –

குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த – அம்பலமாகும் இந்து பயங்கரவாதம் கட்டுரை உங்கள் பார்வைக்கு…

அம்பலமாகும் இந்து பயங்கரவாதம்

30.11.08     ஹாட் டாபிக்
திரிசூலத்தின் முதல் கூறு இஸ்லாமியர்களையும் இரண்டாவது கூறு கிறிஸ்துவர்களையும் மூன்றாவது கூறு மதச்சார்பின்மை பேசுபவர்களையும் குத்தும்” என்ற பிரவீண் தொகாடியாவின் (விஸ்வ ஹிந்து பரிஷத்) பேச்சை அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியாது. அது வெறும் பேச்சல்ல, எதிர்காலத்தில் நடக்க இருக்கும் தாக்குதல்களுக்கான முன்னெச்சரிக்கை என்பது சமீபத்திய சம்பவங்களால் நிரூபணமாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் இந்துத் தீவிரவாத அமைப்புகள் இருக்கின்றன என்பதற்கு சாட்சியங்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. அதில் முக்கியமானவர், பிரக்யாசிங் தாகூர் என்ற பெண்துறவி. குண்டுவெடிப்புக்கும் சாத்வீகமான இந்தத் துறவிக்கும் இருக்கும் நெருக்கம் பற்றிய ஆதாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவானதை அடுத்து, அக்டோபர் 23, 2008 அன்று இந்தூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார் பிரக்யாசிங் தாகூர். கைது செய்தது, மகாராஷ்டிர மாநில தீவிரவாதத் தடுப்புக் காவல்படை.

இந்தக் கைதின் ஆரம்பப்புள்ளி, கடந்த செப்டெம்பர் 29 அன்று மகாராஷ்டிர மாநிலம் மாலேகானிலும் குஜராத் மாநிலம் மொடாஸாவிலும் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இருந்துதான் தொடங்கியது. விசாரணைப் படலம் ஆரம்பித்தது. சமீபகாலமாக நடக்கும் குண்டுவெடிப்புகளில் இருசக்கர வாகனங்களே அதிகம் பயன்படுத்தப்படுவது மகாராஷ்டிர காவல்துறையினரை உறுத்திக்கொண்டே இருந்தது. அந்தக் கோணத்திலேயே விசாரணையைத் தொடர்ந்தனர்.

மாலேகான் சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் நதிமூல, ரிஷிமூலங்களைத் தோண்டிப் பார்த்தபோது, பிரக்யாசிங் தாகூருக்குச் சொந்தமான வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் இந்தக் குண்டுவெடிப்புக்கும் சங்கப் பரிவார அமைப்பினருக்கும்  தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவ்வளவுதான். வியர்த்து விறுவிறுத்துவிட்டது காவல்துறையினருக்கு.  உடனடியாக பிரக்யாசிங் தாகூர் மற்றும் சிவநாராயண சிங், ஷாம்லால் பவார் சாஹு ஆகியோரைக் கைது செய்தது மகாராஷ்டிர காவல்துறை. விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.

யார் இந்த பிரக்யாசிங் தாகூர்?

மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சி.பி. சிங் தாகூர். தீவிர ஆர்.எஸ்.எஸ். காரர். ஆயுர்வேத மருத்துவரும்கூட. இவருடைய மகள் பிரக்யாசிங் தாகூர். ம.பி.யைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் பிறகு குஜராத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டது தாகூரின் குடும்பம். ரத்தம், நாடி, நரம்பு எல்லாவற்றிலுமே இந்துயிசம் என்பது புரையோடிப் போயிருந்தது பிரக்யாசிங்குக்கு. விளைவு, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., அகில பாரத வித்யார்த்தி பரிஷத் போன்ற இந்து அமைப்புகளின் மீதும் அவற்றின் நடவடிக்கைகள் மீதும் இயற்கையாகவே ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது பிரக்யாசிங்குக்கு.

1997-ல் ஏ.பி.வி.பி.யின் மகளிர் அணியில் தன்னை இணைத்துக்கொண்டார். பிறகு வி.ஹெச்.பி.யின் துர்காவாஹினி அழைப்பு விடுக்கவே, அங்கு சிலகாலம் தன்னுடைய சேவையைத் தொடர்ந்தார். சேவை என்றால் பேச்சு. பேச்சு. வார்த்தைக்கு வார்த்தை இந்து வாடை அடிக்கும் அளவுக்கு. வசீகரிக்கும் பேச்சாற்றல் கொண்ட அவருடைய பேச்சு இந்துத் தலைவர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. அதன்பிறகு ராஷ்ட்ரிய ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பைப் பிரத்யேகமாகத்  தொடங்கினார். இந்த அமைப்பின் சார்பாக பல பொதுக்கூட்டங்களும் சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டன. எல்லாவற்றிலும் அம்மணியின் பிரசங்கங்கள்தான் பிரதானமாக இடம்பெறும்.

இதற்கிடையே 2002-ல் `ஜெய் வந்தே மாதரம் ஜன் கல்யாண் சமிதி’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இதற்கு நேசக்கரம் நீட்டியது குஜராத் அரசு.  இந்த பிரக்யாசிங் தாகூருக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. சாத்வி பூர்ணா சேத்தானந்த் கிரி. நிற்க.

சாத்வி பிரக்யாசிங் தாகூருக்கும் அவருடைய ஆதரவாளருக்கும் இடையே நடைபெற்ற சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலை மகாராஷ்டிர காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.  அந்த உரையாடலில் இருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம்.

சாத்வி: என்னை (போலீசார்) இன்று மாலை கைது செய்யப் போகிறார்கள்.

ராம்நாராயணன்: ஏன்?

சாத்வி: மாலேகான் நகரில் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட என்னுடைய மோட்டார் சைக்கிளை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

ராம்நாராயணன்: பைக்கை நீங்கள்தான் விற்றுவிட்டீர்களே..

சாத்வி: எங்கே விற்றதாகச் சொல்வது.. மத்திய பிரதேசம், குஜராத் அல்லது மகாராஷ்டிரம்..?

ராம்நாராயணன்: குஜராத் என்று சொல்லுங்கள்.

சாத்வி: எப்போது விற்றேன் என்று கேட்டால் என்ன சொல்ல?

ராம்நாராயணன்: ஞாபகம் இல்லை என்று சொல்லி விடுங்கள்.

சாத்வி: அந்தக் குண்டுவெடிப்பில் ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர்? அதை நீ எங்கே பார்க் செய்தாய்.. ஆட்கள் நிறைய இருந்த இடத்தில் நிறுத்த வேண்டியது தானே?

ராம்நாராயணன்: நிறையப் பேர் இருந்த இடத்தில்தான் நிறுத்த முயன்றேன். ஆனால், சரியான இடம் கிடைக்கவில்லை. கடைசியாக நான் நிறுத்திய இடத்தில் நிறையப் பேர் இல்லை. சரி.. நிலைமை மோசமானால் அதை நாம் சந்திப்போம்…

– இந்த ஆதாரத்தையடுத்து சாத்வியை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்துத் துறவி ஒருவர் குண்டுவெடிப்பு வழக்கில் கையும் களவுமாகப் பிடிபட்டது சங்கப் பரிவாரங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஆனாலும் `இது பொய்வழக்கு. இந்துக்களை அவமானப்படுத்த நடத்தப்படும் நாடகம்’ என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். என்ன சொல்லி இந்தப் பிரச்னையைத் திசைதிருப்பலாம் என்று காத்துக்கொண்டிருந்தது பா.ஜ.க. விசாரணையின்போது தன்னைக் கொடுமைப்படுத்துவதாக பிரக்யாசிங் பேட்டியளித்து வைக்க, தற்போது ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கியிருக்கிறது பாரதிய ஜனதா.

“பெண் துறவியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நோகடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் அரசு பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறது. விசாரணை நேர்மையுடன் நடத்தப்படவில்லை” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் பா.ஜ.க. தலைவர் அத்வானி.

இதனையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை அனுப்பி அத்வானியிடம் விளக்கம் கொடுக்க வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது பெண் துறவியின் வாக்குமூலங்களை பிரதமர் தனிப்பட்ட முறையில் படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்போது இந்தக் குண்டுவெடிப்பு விவகாரம் இன்னொரு திசையிலும் நகரத் தொடங்கியிருக்கிறது. இந்துத் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக  முன்னாள் ராணுவ அதிகாரி புரோகித் என்பவரின் உதவியை நாடியிருக்கின்றன இந்து அமைப்புகள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சுதாகர் திவிவேதி என்பவர் மாலேகான் குண்டுவெடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளி. குண்டுவெடிப்புகளுக்கு முன்னர் அதில் ஈடுபட்ட நபர்களுக்கு இடையே ஃபரீதாபாத், டெல்லி, போபால், பூனே உள்ளிட்ட இடங்களில் பல சந்திப்புகளை ஏற்படுத்தி அவர்களை ஒருங்கிணைத்தவர் இவர் என்பது காவல்துறையினரின் குற்றச்சாட்டு. முக்கியமாக, தாக்குதல்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டியது, ராணுவ உயரதிகாரிகளைக் கொண்டு ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்ட வெடிபொருள்களை வாங்கியது ஆகியன இவருடைய பணிகள் என்பது மகாராஷ்டிர காவல்துறை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்.

இவருடைய சொந்த ஊர் கான்பூர். சுவாமி அமிர்தானந்தா என்பது சுயமாக சூட்டிக்கொண்ட பெயர். ஜம்முவைச் சேர்ந்த `ஷார்தா சர்வாக்ய பீடம்’ என்ற இந்து மத நிறுவனத்தின் நிர்வாகியான இவருக்கு, போலியான அடையாள அட்டைகளை வாங்கிக் கொடுத்ததோடு, ரிவால்வர் வைத்துக்கொள்வதற்கான உரிமையையும் முறைகேடான முறையில் வாங்கிக் கொடுத்துள்ளார் புரோகித் என்று கூறுகிறது மகாராஷ்டிர காவல்துறை. மேலும், இந்த இந்து அமைப்புகள் நடத்தும்  ஆயுதப் பயிற்சிகளுக்குத் தேவையான வெடிபொருள்கள் மற்றும் ஆயுதங்களை தன்னுடைய கோட்டாவின் மூலம் வாங்கியதோடு, தனக்கு நெருக்கமான உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் பதுக்கி வைத்திருந்ததும் அம்பலமாகியுள்ளது.

புரோகித் பயன்படுத்திய லேப்டாப் இன்னமும் போலீஸாரின் கையில் சிக்கவில்லை.  ஒருவேளை, அது கிடைத்தால் சுவாமி அமிர்தானந்தா, பிரக்யாசிங் உள்ளிட்ட இந்து  சாதுக்கள் மற்றும் சாத்விக்களின் நிஜமுகங்கள் அம்பலமாவதோடு, பல முக்கியத் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது மகாராஷ்டிர காவல்துறை. விஷயம் மேலும் மேலும் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது!

Advertisements

19 Comments

 1. மைக் டெஸ்டிங் ,

  மைக் டெஸ்டிங்…

  உடன் பிறப்பு காலிங் ,

  டோண்டு சார் லைனுக்கு வரவும்..!!!!!!!!!

 2. மைக் டெஸ்டிங்

  மைக் டெஸ்டிங்

  மைக் டெஸ்டிங்

  மோடியின் பிரச்சார பீரங்கிகள் லைனுக்கு வரவும்.

  உங்கள் பின்னூட்டம் எந்தவித மட்டுறுத்தலும் இல்லாமல் வெளியிடப்படும்.

  நன்றி

  உடன் பிறப்பு.

 3. யெப்பா ,

  எத்தன நேரம்தான் நானே பின்னூட்டம் போட்டுக்கினு கீறது மாம்ஸ்…

  வாங்க , வந்து கொஞ்சம் பின்னூட்டம் போடுங்கோ,

  இல்லாட்டி அழுதுருவேன் ஆமா..!!!!!!!

 4. மைக் டெஸ்டிங்.. மைக் டெஸ்டிங்…

 5. இம்புட்டு லேட்டா மைக் டெஸ்டிங் போட்டா என்ன பண்றது தலைவரே?

  இருந்தாலும் ரொம்ப ரொம்ப நன்றி உங்க மைக் டெஸ்டிங்குக்கு.

 6. மோடியின் குஜராத்தின் பொருளாதார முன்னேற்றங்களை பார்க்கவும். உருப்படியாக ஒரு ஊழல் குற்றச்சாட்டை மோடிக்கு எதிராக வைக்க முடியாது திணறும் எதிர்க்கட்சிக்காரர்களின் பரிதாப நிலையை பார்க்கவும்.

  2002 எலெக்‌ஷனில் குஜராத் கலவரம் பற்றி பேசியாயிற்று. அப்போதைய எலக்‌ஷன் கமிஷனரே மோடிக்கு எதிராக கச்சை கட்டிக்கொண்டு இறங்கினார். அதையே 2007-லும் தொடர்ந்தார்கள்.

  இருப்பினும் மோடிதான் வெற்றி பெற்றார். அவர் ஒன்றும் பிள்ளகள் பேரன்கள் ஆகியோருக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் சொத்து சேர்க்கவில்லையே. அப்படி செய்தவர்களெல்லாம், தூள் படத்தில் வந்த வில்லன் நடிகர் ஷிண்டே மாதிரி உண்ணாவிரதம் சீன் காட்டியது போல மோடி காட்டினாரா?

  காங்கிரஸ் 1984 செய்ததை பற்றியெல்லாம் பேசாது இந்த மாதிரி செலக்டிவாக பேசினால் என்ன செய்வது?

  மதுரையில் மூன்று பேர் எரிப்புக்கு வெளிப்படையான காரணமாக இருப்பவர் எல்லாம் உங்களுக்கு அஞ்சா நெஞ்சன். நடத்துங்கள்.

  பைதிவே, தமிழ்ச்செல்வன் எழுதிய இப்பதிவை பாருங்கள், http://www.tamilhindu.com/2009/04/godhra-false-propaganda/

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 7. //கொஞ்ச நாளைக்கு முன் டோண்டு சார் , யாரோ ஒரு வட இந்தியர் மோடியைச் சந்தித்தது பற்றி சிலாகித்து எழுதியிருந்தார்.//
  அதை கூறியது சுஹேல் சேத் என்னும் இசுலாமிய பத்திரிகையாளர். அதுவும் மோடியை அதற்கு முன்னால் மிகவும் விமரிசனம் செய்தவர்.

  பதிவெல்லாம் போடுவதற்கு முன்னால் சரியாக படித்துவிட்டு வரவும்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 8. மோடியின் குஜராத்தின் பொருளாதார முன்னேற்றங்களை பார்க்கவும். உருப்படியாக ஒரு ஊழல் குற்றச்சாட்டை மோடிக்கு எதிராக வைக்க முடியாது திணறும் எதிர்க்கட்சிக்காரர்களின் பரிதாப நிலையை பார்க்கவும்./

  அதே பாஜகவோ இல்லை பாஜகவின் பிரச்சார பீரங்கியான ஜெயலலிதாவோ எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டையும் இன்றைய மாநில திமுக அரசு மீது சுமத்தவில்லையே ? எங்கேயோ இருக்கும் மோடியை உதாரணத்துக்கு எடுக்கும் நீங்கள் இங்கேயே இருக்கும் கலைஞரை ஏன் உதாரணத்துக்கு எடுக்கக்கூடாது என்பது என் கேள்வி…!
  ========================================

  2002 எலெக்‌ஷனில் குஜராத் கலவரம் பற்றி பேசியாயிற்று. அப்போதைய எலக்‌ஷன் கமிஷனரே மோடிக்கு எதிராக கச்சை கட்டிக்கொண்டு இறங்கினார். அதையே 2007-லும் தொடர்ந்தார்கள். //

  பாருங்கள் நடுநிலையாக இருந்திருக்க வேண்டிய எலக்சன் கமிஷனரே மோடிக்கு எதிராக இறங்கியிருக்கிறார் என்றால் “மோடி” எவ்வளவு பேரால் வெறுக்கப்பட்டிருக்கக் கூடும் என்று ?
  ================================================

  இருப்பினும் மோடிதான் வெற்றி பெற்றார். அவர் ஒன்றும் பிள்ளகள் பேரன்கள் ஆகியோருக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் சொத்து சேர்க்கவில்லையே. அப்படி செய்தவர்களெல்லாம், தூள் படத்தில் வந்த வில்லன் நடிகர் ஷிண்டே மாதிரி உண்ணாவிரதம் சீன் காட்டியது போல மோடி காட்டினாரா?

  காங்கிரஸ் 1984 செய்ததை பற்றியெல்லாம் பேசாது இந்த மாதிரி செலக்டிவாக பேசினால் என்ன செய்வது? //

  அச்சச்சோ , 1984 ல் செய்ததை பற்றி நான் பேசவில்லை என்பதே குற்றமா ? பிள்ளைகள் , பேரன்கள் இவர்களுக்கெல்லாம் சொத்து சேர்த்தாரா இல்லையா என்று அவருக்குப் பிறகு யாராவது வந்து பைல்களைப் புரட்டினால் தானே தெரியும்.? அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி ?

  மோடி வித்தையெல்லாம் , குஜராத்தில் மட்டுமே செல்லுபடியாகும். இது பெரியாரின் பூமி. இங்கேயெல்லாம் அந்த வித்தை செல்லுபடியாகாது.
  =======================================

  அதை கூறியது சுஹேல் சேத் என்னும் இசுலாமிய பத்திரிகையாளர். அதுவும் மோடியை அதற்கு முன்னால் மிகவும் விமரிசனம் செய்தவர்.

  பதிவெல்லாம் போடுவதற்கு முன்னால் சரியாக படித்துவிட்டு வரவும்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்//

  மன்னிக்கவும் , இசுலாமியர்கள் இந்தியர்கள் அல்லர் என்பதே இந்துத்துவவாதிகளின் கொள்கையை மறந்து விட்டு அவரை வட இந்தியர் என்று குறிப்பிட்டு விட்டேன். சுஹேல் சேத்தின் நதிமூலமும் , ரிஷிமூலமும் நான் பார்க்கவே யில்லை. கருத்தினை மட்டுமே நான் பார்க்கிறேன்.

  ===================================

  மிகத்தாமதமாக இருந்தாலும் , இந்தப்பதிவினையும் மதித்து உங்களைப் போன்ற மூத்த பதிவர்கள் பின்னூட்டமிடுவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

  நன்றிகள்.

 9. //அதே பாஜகவோ இல்லை பாஜகவின் பிரச்சார பீரங்கியான ஜெயலலிதாவோ எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டையும் இன்றைய மாநில திமுக அரசு மீது சுமத்தவில்லையே ? எங்கேயோ இருக்கும் மோடியை உதாரணத்துக்கு எடுக்கும் நீங்கள் இங்கேயே இருக்கும் கலைஞரை ஏன் உதாரணத்துக்கு எடுக்கக்கூடாது என்பது என் கேள்வி…!//
  நீங்களும் எங்கேயோ இருக்கும் மோடியை பற்றித்தானே பதிவே போட்டீர்கள்? அதுவும் என்னை கேள்வி கேட்டு. அதாவது ஞாபகம் இருக்கிறதா இல்லையா?

  கருணாநிதியிடமே வருவோம். ஸ்பெக்ட்ரம் ஊழல் என்னவாயிற்று? மாறனின் பிள்ளைகள் தன்னுடன் சமரசமானவுடனேயே எல்லாம் முடிந்தது என திருவாய் மலர்ந்தருளினவருடன் மோடியை ஒப்பிடுவதா?

  மோடிக்கு எதிராக ஒரு ஊழல் புகாரை கூற முடிந்தால் கூறுங்களேன்.

  //சுஹேல் சேத்தின் நதிமூலமும் , ரிஷிமூலமும் நான் பார்க்கவே யில்லை. கருத்தினை மட்டுமே நான் பார்க்கிறேன்.//
  சுஹேல் சேத்தும் உங்களை மாதிரி மோடியை எதிர்த்தவர்தான். மற்றப்படி மோடிக்கு எதிராக இருப்பதெல்லாம் அவதூறுகள் நிறைந்த பிரசாரம். குஜராத்தியரிடம் அவை எடுபடவில்லை, ஐயோ பாவம்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  • மோடி பற்றிய பிரச்சாரம் எடுபடவில்லையா இல்லை மதவெறியைத் தூண்டி விட்டுப் பெற்ற வெற்றியா என்பதை எழுத்தாளர் மாலன் அவர்கள் கிழித்தெறிந்திருக்கிறார் பாருங்கள் அய்யா.

   இப்படிச் சொல்கிறார்.

   //////1984ல் பாஜக நாடாளுமன்றத்தில் இரண்டே இடங்களைப் பெற்றிருந்தது. ராமர் கோயில் பிரசினையை அது கையில் எடுத்துக் கொண்ட பிறகு 1998ல் ஆட்சியமைக்கும் அளவிற்கு வளர்ந்தது. அதே போல 2002ல் குஜராத்தில் கோத்ரா சம்பவத்திற்குப் பின் நடந்தேறிய வன்முறைகள் 2007ல் அது ஆட்சியில் தொடர உதவின.
   இந்த அனுபவத்தின் காரணமாக மத உணர்வுகள் கூர்மையாக்கப்பட்ட ஒரு நிலையிலேயே (Charged) மக்களை வைத்திருக்க பாஜக முற்படுகிறது. இது இந்தியாவிற்கு நல்லதல்ல என நான் கருதுகிறேன்.////

   முழுக் கட்டுரைக்கு இங்கே செல்லவும்

   http://jannal.blogspot.com/2009/05/3.html

 10. The people of Gujrat are with Modi. BJP is not running a minority govt. Modi is a bachelor. Karunanidhi cannot make DMK to get absolute majority here whereas
  there BJP gets more than absolute majority under the leadership of Modi. Modi is not a saint, nor a selfish and arrogant fellow like Karunanidhi. What Karunanidhi could not do for the state despite being CM so many times Modi had done in just two terms.
  Gujrat is ahead of Tamilnadu.

  • நன்றி.

   உங்கள் வசவுகள் எங்களை வளப்படுத்தும்.

   அறுபது ஆண்டுகளாக தமிழகத்தில் அசைக்க முடியாத தொண்டர் பலத்தைக் கொண்டுள்ள திமுகழகத்தைப் பார்த்தா இந்தக் கேள்வி?

 11. Wh kalignar alliance with BJP even after Kokra train fire in 2002?

  • நியாயமான கேள்வி..அப்போ கோக்ரா ட்ரெயின் பயருக்கும் , பிஜேபிக்கும் உள்ள தொடர்பை ஒத்துக்கொள்கிறீர்களா?

 12. கருணாநிதியிடமே வருவோம். ஸ்பெக்ட்ரம் ஊழல் என்னவாயிற்று? மாறனின் பிள்ளைகள் தன்னுடன் சமரசமானவுடனேயே எல்லாம் முடிந்தது என திருவாய் மலர்ந்தருளினவருடன் மோடியை ஒப்பிடுவதா?//

  ஸ்பெக்டரம் ஊழல் , ஸ்பெக்டரம் ஊழல் என்று வாய்கிழிய பேசுபவர்களுக்கெல்லாம் ஒரு கேள்வி…….தேர்தல் மேடையில் நின்று பேசுபவர்களுக்கு கோர்ட் வழக்குத் தொடர அனுமதி மறுக்கிறதா என்ன ?

  அப்புறம் ஸ்பெக்டரம் ஊழல் புகாருக்கும் , மாறன் சகோதரர்களுக்கும் என்ன சம்பந்தம் ?

  ++++++++++===============================

  மோடிக்கு எதிராக ஒரு ஊழல் புகாரை கூற முடிந்தால் கூறுங்களேன். /

  ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சிகளைப் போல தொடர்ச்சியான புகார்களை அடுக்குவது கழகத்தாருக்கு எப்போதுமே பழக்கமானதல்ல.

  6 வருடங்கள் ஆட்சியில் இருக்கும் போது தூங்கி இருந்து கொண்டு , அடுத்த 5 வருடங்கள் ஆட்சியில் காங்கிரஸ் இருந்த போதும் அமைதியாகவே இருந்து கொண்டு – இப்போது போபர்ஸ் , குவாத்ரோச்சி என்று சொல்வது வேண்டுமானால் நவீன “மோடி”களுக்கு கைவந்த கலையாக இருக்கலாம்.

  ===============================================================
  மற்றப்படி மோடிக்கு எதிராக இருப்பதெல்லாம் அவதூறுகள் நிறைந்த பிரசாரம். குஜராத்தியரிடம் அவை எடுபடவில்லை, ஐயோ பாவம்.//

  கண்டிப்பாக மோடி அவர்களின் குஜராத்திய ஆதிக்கத்தைப் பற்றி எதுவுமே சொல்ல இயலாது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் , குஜராத் மக்கள் ஒரு நர மாமிசன் பேரில் அவ்வளவு பற்று வைத்திருப்பது போற்றத்தக்கதே. ஆனால் , அங்கே பெரியார் பிறந்திருக்க வில்லை. பகுத்தறிவும் , சுயமரியாதையும் இன்னும் சமூகத்தில் புகுத்தப்படவில்லை.

  ஒரே ஒரு கேள்வி….

  இடதுசாரிகள் மேற்கு வங்கத்தில் 35 ஆண்டுகளாக ஆட்சி நடத்துகிறார்கள். உங்கள் மோடி பற்றிய விவாதத்தை மேற்குவங்கத்திற்கும் எடுத்துப் பொறுத்திக் கொள்ளலாமா ?

  ====================================================================

 13. மோடி ஒரு வடக்கத்தி வைகோ. அவருக்கெல்லாம் பிரதமர் பதவின்னு சொல்றது சும்மா லுலுலாய்க்கு.. இதைப் போய் சீரியசா எடுத்துக்கிட்டு பதிவு போட்டு டைம் வேஸ்ட் பண்றிங்களே உடன்பிறப்பே. 🙂

  அத்வாணிக்கே அந்த வாய்ப்பு இல்லையாம். இதுல மோடிக்கு பிரதமர் பதவி வாங்கித் தரப் போறாங்களாம். என்னங்கய்யா கலர் கலரா ரீல் விடறாங்க?. இனி இந்தியாவின் வரலாற்றில் எந்த சூழ்நிலையிலும் பிஜேபி ஆட்சிக்கு வர முடியாது. அதெல்லாம் வாஜ்பாயோட போச்சி..

  மோடி பிரதமர் ஆவது பற்றி டைம்ஸ் நவ் நிருபர் கேட்ட கேள்விக்கு ராஜ்நாத் கோச்சிக்கிட்டு போனதை தான் பார்த்தோமே. சுதான்சு மிட்டலை தூக்கனும்னு ஜேட்லி அடம் புடிச்சதையும் ராஜ்நாத் ஒத்துக்காததையும் அதவாணி அபபாவி வாணியா வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

  இவர்களுக்கு ஒற்றுமை என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது. இவர்கள் தான் மோடியை பிரதமராக்கப் போறாங்களா?

  ஃப்ரீயா விடுங்க தலைவா. 🙂

 14. //இடதுசாரிகள் மேற்கு வங்கத்தில் 35 ஆண்டுகளாக ஆட்சி நடத்துகிறார்கள். உங்கள் மோடி பற்றிய விவாதத்தை மேற்குவங்கத்திற்கும் எடுத்துப் பொறுத்திக் கொள்ளலாமா ?//

  கண்டிப்பாக ஒப்பிடலாம், மேற்கு வங்கத்திலும் குஜராத் போல பொருளாதார முன்னேற்றங்கள், தடங்கலின்றி மின்சாரம் எல்லாம் இருந்தால்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  • நேர்மையான விளக்கம். அந்த மாநில மக்கள் அந்த அரசாங்கத்தின் செயல்பாட்டில் திருப்தி அடைந்திருக்கிறார்கள் என்பதையே தொடர்ச்சியான தேர்தல் வெற்றி சுட்டுகிறது.

   அதாவது அந்த மாநில மக்கள் (கவனிக்க – வெளிமாநில மக்களாகிய நாம் நினைக்கும் செயல்பாடுகளை அல்ல…), தாங்கள் அரசின் செயல்பாடுகளைக் கருதும் சேவைகளை அந்த மாநில அரசாங்கம் நிறைவேற்றுகிறது.

   ஆக , மோடியைப் போன்றே இடதுசாரிகளையும் நாம் ஒரே தட்டில் வைத்துப்பார்த்துக்கொள்ளலாம்.

   வருகைக்கும் , உங்கள் மேலான கருத்துக்கும் நன்றீகள் பல.


Comments RSS TrackBack Identifier URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s