எக்ஸ்குஸ் மீ சார்…எலக்சன் வருது….! என்ன பண்ணலாம்?

வணக்கம் தமிழ் வலையுலக நண்பர்களே..ரொம்ப்போ நாளைக்கு அப்புறம் உங்களே எல்லாம் சந்திக்கிறதுலே ரொம்ப மகிழ்ச்சி.

திமுகவோட ஈழநிலையில் கொஞ்சம் வருத்தப்பட்டு ஒதுங்கியிருந்த உடன்பிறப்புகள்ல நானும் ஒருத்தன். ஆனா இப்போ தெளிவா இருக்கேன்……….. நெறைய வருத்தங்கள் இப்பவும் உண்டு. ஆனா இந்த ஈழ ஆதரவுப் போர்வையில் இருக்கும் தமிழுணர்வாளர்கள் பண்ணுற அட்டூழியத்தால நமது திமுக / கலைஞர் மீதான புரிதல் எவ்ளோ தவறுன்னு தெளிவா புரிஞ்சிடுத்து.

எக்ஸ்குஸ் மீ மேடம் எலக்சன் வருதுன்னு போயஸ் கார்டனுக்கு போன் வருது..உன்னி கிருஷ்ண பணிக்கரின் ஆலோசனைப் படி ஈழத்திற்கு குரல் கொடுக்குற ஒருத்தர்.

எக்ஸ்குஸ் மி சார். எலக்சன் வருதுன்னு தைலாபுரத்துக்கும் அதே போன் வருது…..”ஆஹா” அஞ்சு வருடம் ஆட்சிலே இருந்தாச்சே …இனி நாம புடுங்கிக் கிழிச்சது என்னன்னு ஓட்டுப் போடறவங்க கேப்பாங்களேன்னு பயந்து போய் எதிர்க்கட்சி வரிசையிலே போய் நின்னுஎதுவுமே செய்யலே இந்த ஆட்சி அப்படீன்னு குரல் கொடுக்கற (அதாவது நாங்க எதுவுமே  ) ஒரு கட்சி…..

பிரபாகரனை நேத்து ஆதரிச்சேன். நாளைக்கும் ஆதரிப்பேன்னு ஒருத்தர் சொன்னார்.
அட இன்னிக்கு ? அட அதெப்படி முடியும் ? நாந்தான் போயஸ் தோட்டத்துல இருக்கேனே அப்படீன்னார் ஒருத்தர். இன்னிக்கு அம்மா வரத்தான் அகிலமே காத்திருக்கு அப்படீங்கறார் அவரே…….இவுரு இலங்கைத் தமிழருக்கா அம்மாவோட கூட்டு சேர்ந்தார் ? கேட்டுச் சொல்லுங்கோ கொஞ்சம் கலிங்கப்பட்டி பக்கமா போய்…!

இந்த திடீர் ஈழ ஆதரவுக் கூட்டணியில இ.கம்யூ வும் , மா. கம்யூ வும் புது வரவுகள். மா.கம்யூவோட ஈழக்கொள்கை என்ன ? புலிகளுக்கெதிரான , ஈழத் தமிழர்களுக்கு எதிரான ஒற்றையாட்சிக்குட்பட்ட இலங்கைதானே ? இல்லையென்று சொல்லச் சொல்லுங்கள் காம்ரேடுகளை ?

இன்றும் நாம் மதிக்கும் தோழர் நல்லக்கண்ணுவிடம் கேட்டுச்சொல்லுங்கள் புலிகளின் மீதான தங்கள் நிலைப்பாட்டை……..

இன்று தமீழீழம் அமைப்பேன் என்று முழக்கமிடும் புரட்சித் தலைவியிடமாவது கொஞ்சம் புலிகளின் மீதான நிலைப்பாட்டை கேட்டுச் சொல்லுங்களேன்……..

இப்படி தெளிவில்லாமல் ஓட்டுக்கு நாடகமாடும் இவர்களைப் போற்றும் சிலர் கலைஞரை , திமுகவை நாடகம் ஆடுகிறார்கள் என்று குற்றஞ்சொல்லுகிறார்கள்.

கலைஞரை , காய்ச்சலாலும் , முதுமையாலும் அவதியுற்று மருத்துவமனைக்குப் போயிருக்கும் அவரைப் பார்த்து அப்படியே போய்ச் சேரக் கூடாதா என்று கேட்கிறார்கள்.

காது கொடுத்துக் கேட்க இயலாத வசவு வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார்கள். இதில் என்ன எழவு என்றால் இவர்கள் நேற்றுவரை உதயசூரியனுக்கு ஓட்டுப் போட்டவர்களாம். என்ன கொடுமைங்க இது ?

இன்று நமக்கும் இலேசாக இருக்கும் திமுக மேலான வருத்தம் என்பது திமுகவின் / கலைஞரின் நிலைப்பாட்டில் ஏமாற்றமே. காரணம் நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். அந்த மிகுதியான பற்றின் விளைவே மெல்லிய கோபம். அதற்கு எமக்கு உரிமை இருக்கிறது.

என்றுமே கலைஞர் மேலோ , திமுக மேலோ பற்றுக் கொண்டிராதவர்கள் திடீரென்று கலைஞர் மேல் வசவுகளைப் பொழிவதென்பது முற்றிலும் நிராகரிக்கத் தக்கது. அப்படி திமுகவின் நற்பெயருக்கும் , கலைஞருக்கும் ஏதும் தீங்கு நிகழ்த்த நடக்கும் முயற்சிகளை நிறுத்த நாங்கள் கேடயங்களாக இருப்போம்.

திமுக என்னும் அருபதாண்டு கால சரித்திரத்தை முடக்கும் முயற்சியில் இன்று தமிழகத்தின் தீண்டத்தகாத சக்திகள் ஒன்று கூடி இருக்கின்றன. ஆனால் சக்தி மிக்க உடன்பிறப்புக்கள் அதை வென்று காட்டுவார்கள்.

அதை சரித்திரம் நிச்சயம் பதிவு செய்யத்தான் போகிறது.

Advertisements

10 Comments

 1. எக்ஸ்குஸ் மீ. பின்னூட்டம் செக்கிங்.

  யாரும் இன்னும் கணக்கு துவங்கலையோ சாமி?

 2. எப்படியோ மறுபடியும் திமுக காரனுங்க தலையிலே துண்டு போடாம கவுரவமா ரோட்டுலே நடக்க முடியுது 🙂

 3. ஹிஹிஹிஹி. ஆமாம் . அதேதான்.

  எப்போதும் திமுகவிற்கு எதிர்ப்பாட்டு பாடுபவர்கள் இப்போது கொஞ்சம் சேர்த்து எக்ஸ்டரா பாடுறாங்க. அவ்ளோதான்.

  அதனால , திமுககாரங்க பாடுதான் ஈஸியா ஆயிட்டுது. நாளைக்கு ஒருவேளை ஜெயலலிதா ஜெயிச்சா ஈழத்துக்கு படை நடத்துவாங்களான்னு பாக்கத் தானே போறோம் ?

  காலமே நல்ல பதில் சொல்லும்.

 4. you bastard son of bitch.

 5. நன்றி நண்பர் ஷாம். சிங்கப்பூரிலிருந்து வந்து என்னை வார்த்தையால் அர்ச்சிக்கும் உங்களை நான் என்னவென்று சொல்லிப் புகழ்வேன்.

  உங்கள் வசவுகள் எங்கள் வளர்ச்சிக்கு உரம் என்ற தலைவரின் வார்த்தையால் உங்கள் வசவுகளை ஏற்றுக்கொள்கிறோம்.

  எங்களுக்கு அநாகரீகம் என்றுமே பழக்கமில்லை. தவிர குற்றமிருக்கும் இடத்திலிருந்துதான் கொஞ்சம் கோபம் அதிகம் வரும்.

  நன்றி , நன்றி , நன்றி , நன்றி. .

 6. நண்பர் பூனையார் பதிவிலிருந்து ,
  அவர் அனுமதிப்பார் என்ற நம்பிக்கையுடன்………………………..
  http://poonai.wordpress.com/2009/05/04/attam/

  எலியார்: 40 இடங்களையும் எனக்கு கொடுத்து, நான் கை காட்டும் அரசு மத்தியில் அமைந்தால், ஈழம் பெற்றுத்தருவேன் என்று அம்மையார் கூறியிருக்கிறாரே?

  பூனையார் : அந்த வாய்ப்பை மக்கள் ஒரு முறை அவருக்குக் கொடுத்தார்கள், ஆனால் அவர் அதை மக்கள் நலனுக்காப் பயன்படுத்தாமல் தன்னலத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டார், அதன் பின் மக்கள் மத்திய அரசுக்கு கை காட்டும் அதிகாரத்தை அம்மையாருக்கு கொடுக்கவேயில்லை.

  1991ல் ராஜீவ் காந்தி படுகொலையின் அனுதாப அலையில் அதிமுக, மாநிலத்திலும் மத்தியிலும் அமோக வெற்றி பெற்றது. அப்போது மத்தியில் கம்யூனிஸ்டுகள் வெளியில் இருந்து ஆதரவு தர நரசிம்மராவ் மைனாரிட்டி அரசைதான் நடத்திக்கொண்டிருந்தார். இவர் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்காமல் தனது வாய்க்கொழுப்பால் அதைக் கெடுத்துக்கொண்டார்.
  சட்டமன்றத்துக்கு முதன் முதலாக முதல்வராக சென்ற இவர்,

  “இராஜீவ் காந்தி அவர்கள் எதிர்பாராத வகையில் கயமைப் பண்பும், மிருக உணர்ச்சியும் கொண்ட சதிகார கும்பலின் தூண்டுதலாலும், தீய நடவடிக்கையாலும் படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட துயரச் செய்தி இப்பேரவையினர்க்கு ஆற்றொணாத் துக்கத்தை அளிக்கிறது“

  என ராஜீவ் காந்திக்கு இரங்கல் தெரிவித்து, சபையை ஒத்தி வைத்து விட்டு, வெளியில் வந்து செய்தியாளர்களிடம்,

  “ராஜீவ் மரணத்தின் அனுதாப அலையினால் ஒன்றும் நான் வெற்றி பெறவில்லை, மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றிபெற வத்திருக்கிறார்கள்” என்க்கூறி காங்கிரஸ் உறவை அன்றே கைகழுவினார்.

  1996 முதல் 1998 வரை, தானே பிரதமர் என்ற கனவில், டீ பார்ட்டிகளுக்குச் சென்று பொழுதைக் கழித்தாரே ஒழிய யாருக்கும் அரசு அமைக்க ஆதரவு தரவில்லை. 1998 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து முதன் முதலாக வாஜ்பாய் அரசில் பங்கெடுத்தார். 13 மாதங்களில் ஆட்சியைக் கவிழ்த்தார். எதற்கு, ஈழம் பெற்றுத்தரவில்லையென்றா? 1991 முதல் 1996 வரை தமிழகத்தில் அவர் ஆடிய பேயாட்டத்தின் விளைவாக அவர் மீது போடப்பட்ட ஊழல் வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், புலிகள் நடமாட்டம் இருக்கிறதென்று கலைஞர் அரசைக் கலைக்கவும் நிர்பந்தித்தார். அது நிறைவேறவில்லை என்ற காரணத்திற்காக, மக்களின் மீது குறுகிய காலத்திற்குள் இன்னொரு தேர்தலைத் திணித்தார்.

  இவர் மத்திய ஆட்சியில் மக்களுக்காகவாப் பாடுபட்டார், அந்த நல்ல மனிதர் வாஜ்பாயை தன்னலத்துக்காகப் பாடாய்ப்படுத்தினார். ஆட்சி கலைந்த நாளில் வாஜ்பாய் சொன்னார் “இன்றுதான் நான் நிம்மதியாக தூங்கப் போகிறேன்”, என்றால் அவர் எந்த அளவுக்கு துன்பப்பட்டிருப்பார்?

  அதன்பின்தான் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு 1998 முதல் 2009 வரை மத்திய அரசுக்குக் கை காட்டும் அதிகாரத்தை மக்கள் அம்மையாருக்குக் கொடுக்கவேயில்லை.

  இன்னொரு முறை கொடுத்தால் அவர் கலைஞர் அரசைக் கலைக்கத் தமிழகத்துக்குத்தான் இராணுவத்தை அனுப்புவாரே தவிர, ஈழம் பற்றி அவர் ஏன் கவலைப்படப் போகிறார்?

 7. அய்யா உடன்பிறப்பு! இனி நாம தினமும் ஒரு பதிவா போட்டு நம்ம உடன்பிறப்புகளை உற்சாகப்ப்படுத்த வேண்டும்! கமான் கமான்! நிறைய களப்பணி இருக்கு!

 8. நன்றி அபி அப்பா அவர்களே. இன்றுமுதல் உடன்பிறப்பு உதயசூரியனாகிறான்.

  கண்டிப்பாக உங்கள் ஒத்துழைப்புடன் களப்பணியாற்றுவோம்.

 9. தனி பதிவு போடும் அளவுக்கு சரக்கு இல்லை என்றாலும் உங்களுக்கு ஆதரவு தர பின்னூட்டங்களை இட்டு உங்களை உற்சாக படுத்த என்றென்றும் கலைஞரின் ஆதரவாளனாக நான் இருப்பேன் உடன் பிறப்புகளே…!

  • உங்கள் ஊக்கப்படுத்துதல் எமக்கு எப்போதும் தேவை தோழர். ஜெயகண்பதி அவர்களே.


Comments RSS TrackBack Identifier URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s