பெரியாரின் மூத்திரச்சட்டியும் , கலைஞரின் உடல்நிலையும்!

எத்தனை ஏளனப் பேச்சுக்கள்.?

பயந்து போய் அப்பல்லோவில் ஒளிந்து கொண்டாராம்.

சோனியாவும் , இவரும் ட்ரங்க்கால் போட்டுப் பேசி செருப்படி வாங்காமல் தப்பித்துக்கொண்டார்களாம்…….

ஒரு முதியவர் , 85 வயதைத் தாண்டியவர். அறுபது ஆண்டுகளாக நமது உரிமைகளுக்காகப் போராடியவர்.

இன்றைக்கும் தமிழகத்தின் முதல்வராக இருப்பவர். தமிழக சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தி.மு.கழகத்தின் தலைவராக இருப்பவர்.

இவரை இப்படியெல்லாம் ஏசுவது பகுத்தறிவின் குரலா ? பெரியார் கற்றுத்தந்த சுயமரியாதையின் குரலா ? இருக்க முடியாதே….!

காரணம் என்ன சொல்கிறார்கள் ?

காங்கிரசின் தமிழின அழிப்பிற்கு துணை போனாராம்….!

ஆமாம் , இராஜபக்சேவின் குரலை தமிழகத்தில் ஜெயலலிதா அவர்கள் பேசிய போது இதே நெடுமாறன் கருப்புக்கொடி காட்டினாரா ?

இன்றைக்கு கலைஞரின் உடல்நலமின்மையைக் கூட கொச்சைப்படுத்தும் வைகோ அவர்கள் ஜெயலலிதாவை இடித்துரைத்தாரா ?

இதே பெரியார் திராவிடர் கழகம் , இன்று இண்டு இடுக்கெல்லாம் “போடுங்கம்மா ஓட்டு…..ரெட்டை எலையை பார்த்து….” என்று கூவுகிறதே…………………………………………….

ராமர் பாலம் இருக்கிறது என்று சொல்கிறதா என்ன ?

வீரமணியை சமரசங்களுக்கு உட்பட்டு பகுத்தறிவை அடகு வைத்து விட்டார் என்று சொல்லித்தானே திராவிடர் கழகத்தை உடைத்தீர்கள்??? இன்றைக்கு பார்ப்பனீயத்தின் தமிழகக் கிளையான ஜெயலலிதாவை ஆதரிப்பதென்பது சமரசங்களுக்கு உட்பட்டது ஆகாதா ?

உயரிய நோக்கங்களுக்காக நாம் பெரிதும் மதித்த தந்தை பெரியார் திராவிடர் கழகம் இன்று நம் கண் முன்னால் அதனுடைய பொலிவினை இழந்து நிற்கிறதே………..

நீங்கள் அரசியல் காரணங்களுக்காக என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்.

கலைஞரின் முதுமையை, அவரது உடல்நிலையை விமர்சிப்பது கொஞ்சமேனும் சகிக்கவில்லை.

அத்தகைய விமர்சனங்கள் பெரியாரின் மூத்திரச்சட்டியை இதே இனம் சுமந்து வீதிவீதியாக சென்ற போது பார்ப்பனீயம்  வைத்த விமர்சனங்கள் போன்றதே.

இந்தத் தேர்தல் , திமுகவிற்கு முதல் தேர்தல் – ஆம்…

கலைஞர் என்னும் ஆளுமையின் முழு வீச்சின்றி , முழு பிரச்சாரமின்றி , முழு உழைப்பின்றி கழகம் சந்திக்கும் முதல் தேர்தல். திமுகவின் கொள்கைகளால் , கலைஞர் என்னும் ஆலமரத்தின் விழுதுகள் நாங்கள் வென்று காட்டுவோம்.

தமிழினத்தின்  துரோகிகள் யார் என்பதை காலம் சொல்லும்….

ஆம் காத்திருங்கள் காலம் சொல்லும்..!

அன்றும் திமுக தமிழர்களுக்கு காவலரணாகத்தான் நிற்கும்…!!!

Advertisements

43 Comments

 1. fuck you bastard.you son of bitch.until 60years what he doing.he worked for his family.not for tamil people.

  • நன்றிகள் நண்பர் ஷாம்.

   ஏற்கெனவே சொன்னது போல , உங்கள் வசவுகள் எங்களை வளமாக்கும். நன்றி.

  • 60 வருட காலமா என்னத்தை வெட்டிப் புடுங்கினார்.
   குடும்ப ஆட்சியத்தான் ஒழுங்கா நடத்தினார்.
   குடும்ப ஆட்சிய நினல நிறுத்துவதற்காக ஈழத்தமிழர் ஒழிப்புக்கு துனணபோகின்றார்..

   • அறுபதாண்டு காலம் என்னதான் செய்தார் கலைஞர். அருமையான கேள்வி.

    பதில் உங்களின் மனசாட்சியில் இருக்கும் . கொஞ்சம் தட்டிப்பார்த்து கேட்டுக்கொள்ளுங்கள் நண்பர் விகாஸ்.

 2. yes kalaingar thorpar……………. ithu uruthi

  • கலைஞர் தோற்பது தமிழினம் தோற்பதே…..

   தன் தோல்வியையே கொண்டாடும் பைத்தியக்காரத் தனத்தை என்னென்பது?

 3. Kalaignar will win

 4. கலைஞர் தோற்பது தோற்பதே..

 5. kalainar cheated tamil people in the past 50 years, he betrayed tamil people. Kalainar (Alias) Kolainar killed tamil people. He is tamil traitor. DMK & Congress will loose every seats.

 6. அனுதாப வோட்டு வாங்கியாவது பிழைக்க எண்ணும் தமிழக தலைவர்

  • ஊகங்களின் அடிப்படையிலும் , காழ்ப்புணர்வின் அடிப்படையிலும் வைக்கப்படும் குற்றச்சாட்டு.

 7. ஆமாம் கலைஞர் சாதனைகள் சொல்லி அடங்காதவை
  வீட்டுக் கொரு தொலைக்காட்சி நிறுவனம் அதன் மூலம் தமிழ் வளர்க்கப் பாடுபடுகிறார் அருமையான தலைவர் அவரைப் போய் சீ…சீ.. நினைக்கவே வாய் கூசுகிறது

  • நன்றி. அதை ஒரு சாதனை என்ற அளவிற்கு ஒத்துக்கொண்டதற்கு.

 8. பெரியார் திராவிடர் கழகம் இன தூரோகத்தையும், பார்ப்பனீயத்தையும் ஏற்றுக் கொள்ளும் இயக்கமல்ல.
  தமிழினத்தின் காவலர்,முத்தமிழர் அறிஞர் என்றும் கூறிக்கொள்ளும் கலைஞர் தோ்தல் சந்தர்ப்பத்திற்காவாது இலங்கை போர் நிருத்தத்திற்கு கூட்டணி காங்கிரசுக்கு அழுத்தம் கொடுத்தாரா? இலங்கை அரசுக்கு கண்டணம் தெரிவித்ததை போல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காதற்கு கண்டணம் தெரிவித்தாரா?
  தோ்தல் சந்தர்ப்பத்திற்காவாது ஜெயலலிதாவைப் போல் தனி ஈழம் அமைத்து கொடுப்போன் ஈழதமிழரை காப்பாற்றுவேன் என்று பேச்சுக்காவது மனதார துணிச்சலுடன் கூரினாரா?
  இந்த்த தோ்தலை பொருத்தவரை தமிழின தூரோகத்தை மட்டு்ம் கையில் எடுக்கின்றதே தவிர இன தூதோகத்திற்கு துணை போக வில்லை .
  பெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கொள்கையில் உறுதியோடு இருக்குமே தவிர தன் ஆதாயத்திற்காக தடம்மாறும் அவலநிலைக்கு போகாது உணர்ச்சியுள்ள தமிழா சற்று யோசணை செய்துபார்

  • தோ்தல் சந்தர்ப்பத்திற்காவாது ஜெயலலிதாவைப் போல் தனி ஈழம் அமைத்து கொடுப்போன் ஈழதமிழரை காப்பாற்றுவேன் என்று பேச்சுக்காவது மனதார துணிச்சலுடன் கூரினாரா?//

   துணிச்சலுடன் கூறினார். ஒத்துக்கொள்கிறேன். மனதாரக் கூறினாரா என்பதை நீங்கள் மனதாரத்தான் சொல்கிறீர்களா?

   ============================

   பெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கொள்கையில் உறுதியோடு இருக்குமே தவிர தன் ஆதாயத்திற்காக தடம்மாறும் அவலநிலைக்கு போகாது உணர்ச்சியுள்ள தமிழா சற்று யோசணை செய்துபார்/

   பெர்யார் திராவிடர் கழகத்தின் பால் இன்றளவும் எமக்கு மரியாதையுண்டு. ஆனால் யோசிக்க வேண்டியது அவர்கள்தான்.

 9. கலைஞர் தோற்பது உறுதி

 10. பெரியார் தி க வை விமர்சிகவும் ஒரு யோகிதை வேணும்,
  பெரியார் பேர சொல்ல கருனா வுக்கு தகுதி இல்லை,
  மு க ரசிகர் மன்றம் தான் DMK

  • ஏன் , ஏதாச்சும் பல்கலைக்கழகத்துல போய் டிகிரி வாங்கிட்டு வரணுமா? இன்றைய சூழலில் தமிழகத்தின் முதுபெரும் தலைவரையே விமர்சிக்க தகுதி ஏதும் தேவையில்லாத போது பெ.தி.கழகம் மட்டும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதா?

 11. பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழரின் உயிரகளைவிட பதவியும் குடும்ப நலனும் பெகரிதென்று நினைத்துவிட்டடபின்,

  இலக்கக்கணக்கான ஈழத்தமிழர்கள் உறுப்பறையராகி விட காரணமாகி விட்ட பின்,

  தனக்கென தமிழன் ஒரு நாட்டை உருவாக்கி நிலைநிறுத்தும் நேரத்தில் ‘ஒரு ஆளின் உயிருக்காக ஒரு இனத்தையே ஒழிக்க’ முடிவு செய்தாரின் அழிப்பு வினைகளுக்கு துணை போஓனபின்,

  அனைத்து இரண்டகச் செயல்களையும் மிகக்கரவாகச் செய்து நாடகமாடி தமிழர்களையே ஏமாற்ற முயன்று தோற்ற பின்,

  பார்ப்பனீயப் பூச்சாண்டியைக் காட்டி, தன்னலத்தையும், தன்குடும்ப நலத்தையுமே பெரிதாகக் கருதிவிட்ட ஒரு பச்சை இரண்டகனுக்கு – இனத்துரோகிக்கு – ப் பரிந்து பேசி ஏமாற்ற முயல்வது பயனளிக்காத வீண் வேலை என்பது புரியும் நாள் தொலைவில் இல்லை.

  • ஒருவேளை அப்படிப்புரியும் சமயம் வருமாகின் புரிந்து அதன் பின் உங்களுக்கு சேதியும் சொல்லியனுப்புகிறேன்.

 12. \\கலைஞர் என்னும் ஆளுமையின் முழு வீச்சின்றி , முழு பிரச்சாரமின்றி , முழு உழைப்பின்றி கழகம் சந்திக்கும் முதல் தேர்தல். \\

  And obviously it’s last too..

  • நன்றி நண்பர் xyz. அதுதானே தமிழர் எதிர்ப்புச் சக்திகளும் வேண்டுகின்றன. ?

   ஆனால் அந்தக் கனவு பலிக்காது.

 13. kalingar is a comady actor and he is taking revenge on tamil eelam people.

  • கலைஞ்ர காமெடி ஏக்டர் என்றால் ஜெயலலிதா , விஜய்காந்த் போன்றவர்கள்???

   கலைஞர் எதற்காக ஈழத்தமிழர்கள் பால் ரிவென்ஞ் எடுக்க வேண்டும்.

   மே – 10 டாக்டர் ருத்ரனின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறதாம்…….

   மனநிலை தடுமாறியவர்களான உம் போன்ற ஆட்களை போய் வந்தால் நல்லது.

 14. உண்மையான பெரியார் தொண்டனாக ஆராய்ந்து பார்த்தால் தி.மு.க. ஒரு தமிழின துரோக இயக்கம்தான். இருப்பினும் தி.மு.க. எந்தவொரு தனி மனிதனாலும் கட்டியெழுப்பட்டதல்ல, மானவுணர்வுள்ள தமிழர்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட இயக்கம் அது.

  தமிழ்நாட்டில் பாராண்ட பல குடும்பங்கள் தி.மு.க.விற்கு உண்மையாக உழைத்ததால் இன்று பரதேசியாக மாறி நடுத்தெருவில் நிற்கிறது.

  பல பரதேசிகள் எந்த தியாகமும் செய்யாமல் கொள்கையுறுதி துளியும் இன்றி தமிழினத்தை அன்னியரிடம் அடமானம் வைத்து பல ஆயிரம் கோடிகளை சுருட்டும் கும்பலாகத்தான் இன்று தி.மு.க. உள்ளது.

  தயவு செய்து எக்காரணதிற்காகவும் கருணாநிதியை பெரியாருடன் ஒப்பிட்டு தந்தை பெரியாரை இழிவு படுத்தாதீர்கள்…

  தமிழ்நாட்டில் தன்மானமும் இனமானமும் பெரிதென்று செயல்படும் ஒரு இயக்கம் பெரியார் திராவிடர் கழகம்… அவர்கள் கருணாநிதியை எதிர்கிறார்கள் என்பதற்காக அவர்கள் மீது குற்றம் சுத்தாதீர்கள்…

  அவர்களின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டிற்கு தள்ளியதே, தி.மு.க. தமிழினத்திற்கு தற்போது செய்துகொண்டிருக்கும் துரோகச்செயல்தான்…

  • நன்றி. உங்கள் விமர்சனங்களுக்கான பதிலை காலம் தன் கையில் வைத்து இருக்கிறது. தற்போது எதுவும் சொல்வதற்கில்லை.

 15. are you paid from kalainger to write good things about him ? bullshit ; think about yourself and your surroundings what DMK and leader did ? can you list anything which is really good he did to the people ? nothing instead he did everything for himself and his family…….its all started from Anna, anna is the only person who his responsible for all the things happening in TN because he is the one who created him and developed him…….

  think before and use your brain…

  poor guy

  • are you paid from kalainger to write good things about him ?//

   no ,

   =======================

   .its all started from Anna, anna is the only person who his responsible for all the things happening in TN because he is the one who created him and developed him……./

   good , finally u accepted.

   ========================

   think before and use your brain…//

   I have to use my brain to think or I have think to how to use brain or I have think first then i have to use my brain?

   please clarify

   =================

   poor guy//

   Yes , indeed I’m very poor. can you put me some paisa?

   Thanks for coming and for your valuable (!) comment mr murugan.

 16. தயவுசெய்து பெரியாரை கலைஞருடன் ஒப்பிடாதீர்கள்… பெரியார் என்றுமே பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. அதில் ஒன்றிலேயே கலைஞரின் தகுதி எல்லோருக்கும் தெரியும். தேன் தடவிய வார்த்தைகளை நம்புவதற்கு மக்கள் இனியும் முட்டாளாக இருக்கமாட்டகள். அது இந்த தேர்தலில் நிச்சயம் தெரியும்.

  • தேன் தடவிய வார்த்தைகளை நம்புவதற்கு மக்கள் இனியும் முட்டாளாக இருக்கமாட்டகள். அது இந்த தேர்தலில் நிச்சயம் தெரியும்./

   ஆமாம் , ஈழத்தை இட்டிலி போல தூக்கி உங்கள் தட்டில் வைப்பேன் என்ற மாதிரியான மக்களுக்குப் பிடிக்கும் தேன் தடவிய வார்த்தைகளை இனியும் நம்புபவர்கள் முட்டாள்களாகத் தான் இருப்பார்கள். இந்தத் தேர்தலில் கண்டிப்பாக அப்படியல்லர் நாங்கள் என்று மக்கள் செவிட்டில் அறையத் தான் போகிறார்கள்.

 17. ///தயவு செய்து எக்காரணதிற்காகவும் கருணாநிதியை பெரியாருடன் ஒப்பிட்டு தந்தை பெரியாரை இழிவு படுத்தாதீர்கள்…///

  • தந்தை பெரியாருடன் கலைஞரை ஒப்பிடாமல் புரட்சியே புரியாத புரட்சித்தலைவரை ஒப்பிடுவதா ? புரட்சிப்புயலை ஒப்பிடுவதா ? இல்லை புரட்சித்தலைவியைத் தான் ஒப்பிடுவதா.

   வெறும் ரிப்பீட்டேய் போடுவதால் உண்மையை ஒன்றும் ஒளித்துவைக்க முடியாது….

   பெரியாரின் கருத்துக்கள் கர்ப்பம் போன்றது. அதைச் சுகமாகப் பிரசவித்த பெருமை கலைஞருக்கானது.

   வேற எவனுக்கும் கலைஞரைப் பற்றி பேசக்கூட உரிமையில்லை…

 18. periyarin kolkai kalaigner aatchi indri tamilnadu illai.40lum dmk vellum.

  • உங்கள் கருத்துக்கு நன்றிகள் ஜாகீர்.

   கழகம் வெல்லும்…அதைக்
   காலம் சொல்லும்!

 19. karunanithi is a selfish felow.he is eligible for Tamil Leader.

  • Before passing comments on Kalaignar Karunanithy go and read at least the history.It is not necessary for my beloved leader Kalaignar Karunanithy to get certificates from distilled fools. It is Thanthai Periyar appreciated him during his life time and the testimonials granted by Thanthai Periyar, Perarignar Anna and Perunthalaivar Kamarajar are still on the pages of history. Use words with great caution. In any democracy healthy comments, even negative, can be taken into consideration. But writing comments in Jeyalalitha’s parlance will reduce the democrtic values of a country. Please do not expose your standard by using silly words against an octogenarian leader whose history is inseparable part of the history of Tamil Nadu.

   Yes, even Mao tasted such bitter experience during his life. Read the book of one Wang Ming captioned as Mao’s Betrayal. But Mao stands in the history.

   Do you know who followed to the chair of Fidel Castro in Cuba?.Is it not his Brother Ralph Castro. Rajiv Gandhi inherited his mother’s chair. Mrs. Gandhi was honoured during the life time of Pandit Jawaharlal Nehru. In Srilanka Srimao Bandaranayake came to power following her husband and then her daughter.

   I can show you hundreds of examples for a son or daughter following his father or mother to power, from the historical records.

   Do not try to blame or find fault with a true ,struggling leader for his race with thousands of credentials. Long Live Kalaignar Karunanithy.

   This reply is meant for all those who are registering awkward comments against Kalaignar M.Karunanithy.

   • wonderful thougts my dear xavier.

    good and keep it up.

    let us shut the mouths of idiots those who blindly oppose DMK and MK.

 20. //தயவு செய்து எக்காரணதிற்காகவும் கருணாநிதியை பெரியாருடன் ஒப்பிட்டு தந்தை பெரியாரை இழிவு படுத்தாதீர்கள்…//

  ரிப்பீட்டேய் …..

  • தந்தை பெரியாருடன் கலைஞரை ஒப்பிடாமல் புரட்சியே புரியாத புரட்சித்தலைவரை ஒப்பிடுவதா ? புரட்சிப்புயலை ஒப்பிடுவதா ? இல்லை புரட்சித்தலைவியைத் தான் ஒப்பிடுவதா.

   வெறும் ரிப்பீட்டேய் போடுவதால் உண்மையை ஒன்றும் ஒளித்துவைக்க முடியாது….

   பெரியாரின் கருத்துக்கள் கர்ப்பம் போன்றது. அதைச் சுகமாகப் பிரசவித்த பெருமை கலைஞருக்கானது.

   வேற எவனுக்கும் கலைஞரைப் பற்றி பேசக்கூட உரிமையில்லை…

 21. //பெரியாரின் கருத்துக்கள் கர்ப்பம் போன்றது. அதைச் சுகமாகப் பிரசவித்த பெருமை கலைஞருக்கானது.//

  அய்யோ !!! மனசாட்சியே கிடையாதா இப்படி எல்லாம் எழுத???

  //வேற எவனுக்கும் கலைஞரைப் பற்றி பேசக்கூட உரிமையில்லை…//

  ஆமாம்.. அதனால நீங்களே பேசலாம்…

  • அய்யோ !!! மனசாட்சியே கிடையாதா இப்படி எல்லாம் எழுத??? //

   அய்யய்யோ , உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா கலைஞர் எதுவுமே செய்யவில்லை என்று சொல்ல?

   மனசைத் தொட்டுச் சொல்லுங்கள்……???


Comments RSS TrackBack Identifier URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s