போடுங்கம்மா ஓட்டு….ரெட்டை எலையப் பாத்து…!

அரசு ஊழியர்களே…..

ஒரே கையெழுத்தில் உங்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிய பெருமை வாய்ந்த ரெட்டை இலைக்கே உங்கள் ஓட்டு…..!!!

போக்குவரத்து கழக ஊழியர்களே……..

உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தையும் , போனஸ்ஸையும் தர மறுத்த ரெட்டை இலைக்கே உங்கள் ஓட்டு….!

பெரியாரின் சீடர்களே……….

தான் ஒரு பாப்பாத்தி என்று சபையிலேயே அறிவித்துக் கொண்ட அதிமுகவின் பார்ப்பனத் தலைமைக்கும் , இன்று வரை பாரதிய ஜனதாவின் குரலில் , பார்ப்பனீயத்தின் குரலை எதிரொலிக்கும் ரெட்டை இலைக்கே உங்கள் ஓட்டு….!

தமிழுணர்வாளர்களே…..

வருடக்கணக்கில் புலிகள் என்ற பேச்சை எடுத்ததற்கே சிறையில் வைகோவை சிறையில் அடைத்த அம்மாவுக்கே உங்கள் ஓட்டு.

எம்.ஜி.ஆரின் சீடர்களே….

எனக்கு எல்லாமே எம்.ஜி.ஆர். தான் என்று ஒப்பாரி வைத்த ஜெயலலிதாதான், அவர் உயிருடன் இருந்தபோதே அன்றைய பிரதமர் அமரர் ராஜீவ்காந்திக்கு எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்க லாயக்கற்றவர் என்று கடிதம் எழுதி உண்ட வீட்டிற்கு துரோகம் இழைத்த ஜெயலலிதாவுக்கே உங்கள் ஓட்டு…!

தமிழகத் தமிழர்களே…….

விடுதலைப்புலிகளால் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடுகிறது என்று பொய்ப்பிரச்சாரம் செய்து , அத்தகைய புலிகளுக்கு ஆதரவு அளிக்கிற ஆட்சி திமுக என்று சொல்லி ஆட்சியைக் கலைக்க வைத்து புலிகளின் மீதான தடையை இந்தியாவில் முதலில் அங்கீகரித்து இன்றளவும் புலிகளின் தலைமையை வெறுத்து ஒதுக்கும் அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு…!!!!

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி-தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றிய அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு…!!!!

கம்யூனிஸ்டுகள் ஈழத்தமிழர்களுக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் விஜய்காந்த் கட்சியும் கலந்து கொண்டது என்ற காழ்ப்புணர்வு காரணமாக எவ்வித அக்கறையும் இன்றி புறக்கணித்த அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு….!!!

தமிழ்ச்செல்வன் மறைவிற்காக ஒரு இரங்கற்பா எழுதிய காரணத்தால் கலைஞரின் ஆட்சியையே கலைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ரெட்டை இலைக் கட்சிக்கே உங்கள் ஓட்டு.!!!!

ஈழத் தமிழர் என்று சொல்வதைக் கூட சகித்துக்கொள்ளாமல் , இலங்கைத் தமிழர் என்றுதான் சொல்ல வேண்டும் என்று திமிராகப் பேசிய அதிமுக தலைமைக்கே உங்கள் ஓட்டு.

சற்றேறக்குறைய ஒரு லட்சம் தமிழ் மக்களைப் பலி கொண்ட ஒரு போராட்டத்தை இதுகாறும் கொச்சைப்படுத்தி விட்டு , ஒற்றை இரவில் ஒரு சி.டி.யைப் பார்த்து புரிந்துகொண்டதாகப் புழுகும் அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு….!!

இன்றளவும் தமிழகத்தின் எந்தவொரு பெரிய கட்சியையும் புலிகளுக்கு ஆதரவாக , ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதையோ , எழுதுவதையோ , ஒரு பேரணி நடத்துவதையோ அன்றாடம் எதிர்த்துக்கொண்டு, ஈழ ஆதரவினை முணை மழுக்கிக்கொண்டு , ஈழ விடுதலைப் போருக்கு ஒரு தடுப்புச் சுவராக நின்று கொண்டு , ஆயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்யும் சிங்களத்துக்கு உதவிக்கொண்டு சிங்கள ரத்னாவாகக் காட்சியளித்த ஜெயலலிதாவுக்கே உங்கள் ஓட்டு.!!!!!

போடுங்கம்மா ஓட்டு………………………………..

ரெட்டை இலையைப் பார்த்து………!!!!!

வெய்யுங்கம்மா வேட்டு…..

தமிழினத்தின் எதிர்க்காலத்தைப் பார்த்து….!

சொருகுங்கம்மா ஆப்பு……….

தமிழ்நாட்டு முன்னேற்றத்தைப் பார்த்து…….

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு….!!!

நம்ம மாக்களுக்கு ?

Advertisements

26 Comments

 1. ஒரு விளக்கம் + பின்னூட்ட டுபிரித்தனம்……..

  நம்ம மாக்களுக்கு
  சரியான வார்த்தை தான்.
  ஸ்பெல்லிங் மிஸ்டேக்
  இல்லை….!!!

 2. ஒரு விளக்கம் + பின்னூட்ட டுபிரித்தனம்……..

  நம்ம மாக்களுக்கு
  சரியான வார்த்தை தான்.
  ஸ்பெல்லிங் மிஸ்டேக்
  இல்லை….!!!

 3. தமிழகத்தில் தேர்தல்க் கூட்டணிக்கு குற்ப்பிட்ட கொள்கையோ, குறைந்தபட்ச செயலாக்கத் திட்டமோ ஏதும் கிடையாது.

  இப்போது ஈழப்பிரச்சினையில் ஒன்றாக அணிச் சேர்ந்திருக்கும் (அப்படிக் கூறிக்கொளளும்)அ.தி.மு.க. , பா.ம.க., கம்யூ.,ம.தி.மு.க. கட்சிகள்
  உண்மையில் எந்தச் சூழலில் இணைந்தன?

  1) அணு ஒப்பந்த்தில் உடன்பாடு இல்லாத கம்யூ.கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு தரும் ஆதரவை திரும்பப் பெற்றது. தமிழகத்தில் தே.மு.தி.க. உடன் கூட்டணிக்கு முயன்று, அதில் தோற்று அ.தி.மு.க. வுடன் வேறு போக்கிடம் இல்லாமல் கூட்டணி (?) அமைத்தது.

  2) கம்யூ. உடன் இருக்கும்போதே காங்கிரைஸை இழுக்க முயன்று (ஜெ. யின் ராஜபக்ஷே ஆதரவு உரை அதற்கு சாட்சி) பின் அது கைகூடாமல் திடீரென்று தேர்தலுக்கு எடுத்த ஆயுதம் ‘ஈழப் பிரச்சினை'”.

  3) பா.ம.க. கடைசி வரை பேரம் பேசி இங்கும் அங்கும் பிடிக் கொடுக்காமல், நல்ல விலைக்கு தன்மானத்தை விற்றது.

  4) ம.தி.மு.க. – அ.தி.மு.க. கூட்ட்ணியில் ஸீனியர் (2006 முதல்). அப்போது ஈழத்திற்காக சேரவில்லை. (POTA ஞாபகம் வருகிறதா?)ஆனால் ஒதுக்கீட்டில் அவர் பட்டப் பாடை பார்க்க நல்ல வேளை அவர் கட்சியில் யாரும் இல்லை.

  இவர்கள் ஈழப் பிரச்சினைக்காக ஆட்சியை இழந்தவர்களை எதிர்த்து ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். எதன் பெயரால் ஈழத்தின் பெயரால்.

  யாரை ஏமாற்ற ?

  ஈழத்தைச் சொல்லி பாமர மக்களை ஏமாற்ற.

  தமிழுணர்வு என்ற போர்வையில் ஊரை ஏமாற்றுவதை உணருங்கள் தமிழர்களே.

 4. 34 ஆண்டு காலம் போராட்டம் நடத்திய ஒருமனிதன் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறான். போராடுவான். ஆனால் தனி ஈழம் அமைத்துக் கொடுப்பேன் என ஒரு வாசகத்துக்காக இவருக்கு ஓட்டு போடணும். இவர் வந்தால் 34 ஆண்டு போராட்டம் இல்லாமலே வாங்கிக் கொடுப்பேன் என்றால் இத்தனை ஆண்டுகாலம் இவர் என்ன செய்து கொண்டிருந்தார். இத்துனை ஆயிரம் பேர் பலி எடுப்பதை அப்போதே தடுத்திருக்கலாமே. இவர் ஏன் சிரிலங்க ராணுவ நடவடிக்கைகளை ஆதரித்தார்? அப்பொழுது கேட்டீர்களா இவருக்கு வாக்கு!?

  என் நண்பன் எனச்சொன்னால் குற்றம். போரஸ் என்றால் குற்றம்! பிடித்து உள்ளே வையுங்கள் தூக்கில் போடுங்கள் என்றால் ஈழத்தமிழர்களுக்கு இனிக்கிறதா. அப்படி எனில் பிரபாகரனின் போராட்ட குணத்தை பிரமிப்பவர்கள் அவரை தூக்கில் இடும் ஈழத்தாய்க்காக வாக்கு கேட்கவேண்டுமா? ஈழத்தமிழன் பிரபாகரனை தூக்கில் இடச்சொன்னவருக்கு வாக்கு கேட்கிறார்களா?

  சரி செயா வாங்கிக் கொடுத்தால் பிரபாகரனைப் பற்றி இவர் சொன்ன கருத்துக்கள் பற்றி என்ன பேசப்போகிறார் என ஏதாவது தகவல் இருக்கிறதா? இல்லை அதுவும் தனி ஈழம் போல அந்தர் பல்டி அடிப்பார் இன்னும் சில நாட்களில் என எதிர்பார்க்கலமா?

  காங்கிரஸ் படைகளை அனுப்பியதாகவே இருக்கட்டும். திமுகவிற்கு தெரிந்தே செய்ததாக இருக்கட்டும். ஆனால் செயா ஆட்சியில் இருந்த பொழுது என்ன செய்து கொண்டிருந்தார். அப்பொழுதும் சண்டைகள் நடந்திருக்கின்றன. சாவும் தொடர்கதை தான்!. அப்பொழுது தமிழர்கள் இவருக்கு எதிராக வாக்கு கேட்டானா? அல்லது அவன் சிற்றின்பத்தில் மூழ்கியிருந்தானா?

  ராசிவ் கொலையினால் பாதிக்கப்பட்டது திமுக திமுகவினர். இவருக்கு ஈழத்தமிழனால் என்ன இழப்பு நேர்ந்திருக்கிறது? அத்தனையும் அரசியல் லாபம். இப்படி அரசியல் லாபத்திற்காக வேசம் போடும் இவரைப் போன்றவர்களுக்கு ஈழத்தாய் என்ற பட்டம் பத்தாது. வேறு ஏதாவது பட்டம் இருக்கிறதா என ஆராய்வோம் வாருங்கள்!

  • நன்றீ திரு.சேகுவரே.

   நன்றாகத் தோலுரித்தீர்கள். நாடு விழிக்கட்டும். இருள் விலகட்டும்.

 5. திமுக நாற்பது இடங்களிலும் தோற்பது நிச்சயம்
  கருணாநிதியின் வாய் சவடால் கேட்பதற்கு ஆள் இல்லை
  ரவுடித்தனமும் குடும்பத்திற்காக எதையும் செய்யும் துரோகதனத்தையும் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

  • A foolish comment. Who is betraying Tamils till date? Is it not Jeyalaitha? The man who is standing in shadow of Jeyalalitha,who is pretending as the redeemer of Srilankan Tamils, must have lost the heart and brain.

   • செருப்படி வாங்கியாச்சா சாமக் கோடாங்கி.
    ரவுடித்தனமாம் ரவுடித்தனம்..

    ஆடிட்டர் வீட்டுக்கு ஆளனுப்பியது யார்?

    வக்கில் விஜய்னை வீடு புகுந்து அடித்தது யார் ?

    வக்கீல் சண்முகசுந்தரத்தை தாக்கியது யார்?

    நக்கீரன் அலுவலகத்தை நாசப்படுத்தியது யார்?

    தருமபுரியில் 3 வேளாண் கல்லூரி மாணவர்களை உயிருடன் எரித்தது யார்?

    இதெல்லாம் வன்முறை இல்லையா?

    வன்முறையைப் பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லாமல் போச்சு இந்த நாட்டிலே.

 6. உடன் பிறப்புக்களே,

  சில சாதனைகளை விட்டு விட்டீர்களே,

  • அப்படியே எதிர்த்து நிற்பவர்களின் சாதனைகளையும் கொஞ்சம் எடுத்து வையுங்களேன்..

   • இது எப்படி இருக்குதுனு,

    அடுத்தவன் கழுவவில்லை.. அதனால நானும் கழுவ வில்லைனு சொல்லுற மாதிரி இருக்கு… அதுல இருக்கும் எந்த ஒரு குற்றச்சாட்டையும் மறுக்க முடியாமல் அவன் யோக்கியம் இல்லை, இவன் யோக்கியமில்லைனு வியாக்கினம் பேசிகிட்டு…

    இணையத்துல பிரச்சாரம் பண்ண கிளம்புறீங்க, உங்க மேல வைக்கும் குற்றச்சாட்டை மறுக்க எப்படி வாதம் பண்ணுறதுனு கூட பயிற்சி எடுக்கலையா…

    அய்யோ பாவம்…

   • தலைவரே….எப்ப ப்ரீயா இருப்பீங்க?

    ஒரு எட்டு வந்து கத்துகிட்டு வந்துடறேன்.

 7. சூப்பரப்பு…..

  சூப்பர் ஆப்பு….

  வேசக்கார், மோசக்காரி ஜெயலலிதா ஒழிக..

 8. ராசாத்தி மகளுக்கு பல நூறுகோடி பெற்றுக்கொடுத்த ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசாவின் தந்தை கருணாநிதிக்கு ஓட்டு போடுவதைவிட எந்த நாய்க்கும் ஓட்டுப் போடலாம்.

  • அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை. இப்போதைய தேர்தலில் கலைஞர் நிற்கவே இல்லையே?

   ஹிஹிஹி

   பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

 9. இப்படி எழுதருதுக்கு உனக்கு கருணாநிதி என்னத்த தந்தான் மயிரு?

 10. இப்படி எழுதருதுக்கு உனக்கு கருணாநிதி என்னத்த தந்தான் மயிரு?//

  கருணாநிதியும் , கழகமும் எனக்குத் தந்தது சுயமரியாதை

  கருணாநிதியும் , கழகமும் எனக்குத் தந்தது கல்வி

  கருணாநிதியும் , கழகமும் எனக்குத் தந்தது பகுத்தறிவு

  கருணாநிதியும் , கழகமும் எனக்குத் தந்தது விலை மதிக்க முடியாத தமிழுணர்வு.

  கருணாநிதியின் கை பிடித்து தமிழுணர்வைக் கற்றுக் கொண்டவனெல்லாம் இன்று கருணாநிதிக்கே தமிழுணர்வைக் கற்றுக்கொடுக்கிறானாம்…

  வேடிக்கையாய் இல்லை ?

  ஆனால் ஒருவார்த்தை …நீங்கள் கருனாநிதியிடமோ , கழகத்திடமோ சுயமரியாதை கற்று வந்தவராய் இருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால் மயிரு போன்ற வார்த்தைகளை உபயோகித்திருக்க மாட்டீர்கள்

  • hi..look at the so called things you have gained from karuna in depth.there is no material over there.all gas..u can only get place in his heart but no where else..karuna is not only in srilanka but also in tamilnadu

 11. MY HUMBLE APPEAL TO EACH AND EVERY TRUE TAMILIAN:
  This is the right time to think as you are going cast your vote. We are having sufficient bitter experiences with Madam Jeyalaltha. What she speaks for election campaign shall be conveniently forgotten by her in the near future after election. But the scars of the deep wounds we have sustained during her Hitler like administration are still speaking about her. Invariably, government servants, teachers, poor agriculturists, weavers, transport corporation workers, students, advocates, judges, had been punished during her regime in Tamil Nadu. If we can’t remember all these events we the people of are going to fail.

  It is only Dr.Kalaingnar had rendered his tireless service to the community from his fourteenth year. He is the only politician who kept his words what he promised to his people through the election manifesto. Once upon a time releasing an election manifesto is ritual of a political party and it shall be simply discarded after elections. Yes, I can proclaim now Only my beloved leader Dr. Kalaignar is gigantic, incomparable, leader of our days is thinking of his people and fulfilling their needs in time.Recently he proved that even ailments cannot prevent his service to his community.

  Please do not believe the election time pied pipers and the political chameleons who are mingling under the canopy of Jeyalalitha for the time being without any noble cause.

  PLEASE VOTE FOR D.M.K, CONGRESS and V.C.K

  • corrections: Paragraph.2:.
   . . . .releasing election manifesto is a ritual of a political
   party and it would be simply. . .

   . . . Dr.Kalaignar,the gigantic,incomparable. . .

 12. MY HUMBLE APPEAL TO EACH AND EVERY TRUE TAMILIAN:
  This is the right time to think as you are going cast your vote. We are having sufficient bitter experiences with Madam Jeyalaltha. What she speaks for election campaign shall be conveniently forgotten by her in the near future after election. But the scars of the deep wounds we have sustained during her Hitler like administration are still speaking about her. Invariably, government servants, teachers, poor agriculturists, weavers, transport corporation workers, students, advocates, judges, had been punished during her regime in Tamil Nadu. If we can’t remember all these events we the people of are going to fail.

  It is only Dr.Kalaingnar had rendered his tireless service to the community from his fourteenth year. He is the only politician who kept his words what he promised to his people through the election manifesto. Once upon a time releasing an election manifesto is ritual of a political party and it shall be simply discarded after elections. Yes, I can proclaim now Only my beloved leader Dr. Kalaignar is gigantic, incomparable, leader of our days is thinking of his people and fulfilling their needs in time.Recently he proved that even ailments cannot prevent his service to his community.

  Please do not believe the election time pied pipers and the political chameleons who are mingling under the canopy of Jeyalalitha for the time being without any noble cause.

  PLEASE VOTE FOR D.M.K, CONGRESS and V.C.K

 13. Let us wait for the result. I would like to register my confidence that DMK front is going to win all forty seats in Tamil Nadu and Pondicherry.

 14. பிரபாகரனின் தமிழீழம் இன்று ஜெயலலிதாவின் தமிழீழமாக மலர்கின்றது. அப்படி நம்புகின்ற, நம்ப வைக்கின்ற ஈழத் தமிழ் முட்டாள்கள். பெரும்பான்மை தமிழன் அரோகரா என்று கூறியபடி, அதற்கு பின்னால் எங்கே ஒடுகின்றோம் என்று தெரியாது ஓடுகின்றனர். பலதரம் தடுக்கி வீழ்ந்த இவர்கள், மீண்டும் மீண்டும் குருட்டு நம்பிக்கையுடன் எழுந்து ஒடுகின்றனர்.பிரபாகரன் ஆகாய விமானம் வரை வேடிக்கை காட்டி இந்தா தமிழீழம் என்றவர். இன்று அவர் மீதான நம்பிக்கையை படிப்படியாக இழக்க, பார்ப்பனியம் வழிநடத்தும் அம்மா ஜெயலலிதாவின் கற்பனை தமிழீழத்தில் இன்று சரணடைகின்றனர்.வலதுசாரிய புலியிசம் தன் அந்திமத்தில் கூட, தமிழினத்தை கனவுலகில் நிலைநிறுத்த முனைகின்றது. அதை இந்தியாவின் றோவின் பின், மீளவும் வடியவிடுகின்றது. எந்த றோ இந்த தமிழீழத்தை வலதுசாரி பாசிசமாக வளர்த்து அழிக்க இதில் தலையிட்டு, பணமும் பயிற்சியும் வழங்கியதோ, அந்த றோவின் பின் மீண்டும் புலிகள். இப்படி றோ மக்களை சார்ந்திருக்கக் கூடிய, அனைத்து சமூகக் கூறுகளையும் அழித்தொழித்தது. இன்றும் மக்கள் சொந்தமாக எதையும் அணுகக் கூடாது என்ற றோவின் அக்கறை, ஜெயலலிதா ஊடாக புலியிசத்துக்கு ஆப்பு வைத்துள்ளது. தமிழீழத்தை வைத்து சுரண்டித் தின்னும் புலியிசம், இந்த றோவின் சதியின் பின் அணிதிரளுகின்றது.இதற்காக உலகெங்கும் உள்ள புலிப் பினாமி அமைப்புகள் தந்திகள் அறிக்கைகள் மூலம் வாழ்த்துகளை கூட தமிழீழ ஜெயலலிதா அவர்களுக்கு அனுப்பிவிட்டனர். புலியின் வெற்றிடத்தில் மீண்டும் றோ. எந்தப் பார்ப்பனியம் தமிழ் மக்களைக் கொல்வதை ஆதரித்து கொக்கரித்து, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கின்றதோ, அது மீண்டும் ஈழத் தமிழ் மக்களின் நம்பிக்கையின் ஒளியாக புகுந்துள்ளது. இப்படி புலிகளின் தலைவர் பிரபாகரன் இடத்தை ஜெயலலிதா அபகரித்துக் கொள்வது கண்கொள்ளாக் காட்சிதான். புலியிசத்தின் தமிழீழம் எப்படி கற்பனையானதோ, அப்படித்தான் பார்ப்பனர்களின் தமிழீழமும். ஆனால் அன்னியனிடம் வெட்கம் கெட்டு சுயாதீனம் கெட்டு பிச்சை எடுக்கும் தமிழன், சுயமும் சுயஅறிவுமற்று, பகுத்தறிவின்றி கால்களில் வீழ்கின்றனர்.
  பிரபானிசமே புலியிசமாக, அது தமிழீழ மக்களை ஒடுக்கியும் பிளந்தது. இதன் மூலம் சுரண்டி வாழும் அரசியல் கூறாகியது. இப்படி மாபியாக் கும்பலின் தமிழீழம், பரந்துபட்ட மக்களின் மேலான, பேரினவாத ஒடுக்குமுறைக்கு மாற்றாக முன்னிறுத்தப்பட்டது. இது எம் மக்களை என்ன செய்தது!?சுயநிர்ணயத்ததை மறுதலித்து, தமிழீழத்தை முன்னிறுத்தியது. ஒரு நாட்டின் சொந்த இறைமைக்கான பொருளாதார கூறை மறுத்து, அன்னிய சக்திகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் தமிழீழத்தை முன்னிறுத்தியது.இப்படி சுயநிர்ணயம் என்பதை பொருளாதார துறையில் மறுத்தவர்கள், அன்னிய உதவியில் சுயநிர்ணயத்தையே இழந்தனர். சொந்த மக்களையே தமக்கு எதிரியாக நிறுத்தினர். சமூகத்தினுள் வன்மமும், பகையும் கொண்ட மனித உறவுகளை திணித்தனர்.தாயை மகன் உளவு பார்க்க, அண்ணணை தம்பி கொல்ல.. என்று எத்தனை பிளவுகளும், வக்கிரங்களும் நடந்தேறின. இப்படி குடும்பத்தினுள் கூட இந்த புலியிசம், பதம் பார்த்தது. இப்படி மனித அவலத்தின் மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்த தமிழீழம், தன் மக்களையே கொன்று குவித்தது. பிளவுகளையும், பிரிவுகளையும் கொண்டு, தமிழினத்தை சுக்கு நூறாக்கியது. இப்படி தமிழீழம் என்பது, தனக்கு எதிராக தன்னை அணிதிரட்டிக்கொண்டது.
  தமிழீழம் பெற வேண்டும் என்றால், இலங்கையில் ஒன்றுபட்ட ஜக்கியத்துக்காக உறுதியாக போராடியிருக்க வேண்டும். இதன் மூலம் பிரிவினையைத் தவிர வேறு வழியில்ல என்பதை, சிங்கள மக்களின் ஒரு பகுதி ஏற்கும் வண்ணம் போராடியிருக்க வேண்டும். அதேபோல் அயல்நாட்டு மக்கள், உலக மக்கள, எம் போராட்டத்தின் நியாயத்தை ஏற்று குரல் கொடுத்து போராடியிருக்க வேண்டும். அதேநேரம் ஜெயலலிதா ஊடாக, மீண்டும் தமிழீழத்தைக் காட்டுகின்றது.மாபியா புலியிசம் தான் பிழைத்துக்கொள்ள, பெரியார் முதல் பார்ப்பனியம் வரை தன் வியாபாரத்திற்கு ஏற்ப வித்தை காட்டுகின்றது. தமிழ்மக்களோ பேரினவாத கொடுமையில் சிக்கி சிதைகின்றனர். இதை புலியிசம் தொட்டுக்கொள்ள பயன்படுத்தும் அதேநேரம், பார்ப்பனியத்தின் பூனூலாகவே தமிழீழத்தை மாற்றியுள்ளனர்.

  • Tamil Eelam cannot be achieved at the mercy of Jeyalalitha. If it is possible,let all the freedom fighters can approach madam Jeyalalitha for her blessings to achieve an independent nation in anywhere in the world. They are fooling the total Tamil Nadu. The cunning political cannibals are still searching for the prey at the cost of the innocent Tamils in island nation.

 15. what happened ? for long time.


Comments RSS TrackBack Identifier URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s