சென்னையில் திடீர் மின்தடை-‘விஷமிகள் சதி’, 4 பேர் கைது

சென்னை: சென்னையில் பல பகுதிகளில் நேற்றிரவு திடீரென மின்சாரம் தடைபட்டது. தேர்தல் நேரத்தில் ஆளும்கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க எதிர்கட்சிகளைச் சேர்ந்த விஷமிகளே இந்த செயல்களைச் செய்ததாக முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மைலாப்பூர் உள்பட சென்னை நகரின் பல பகுதிகளில் நேற்றிரவு மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து நிருபர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி, இந்த மின்தடை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதற்காக எதிர்கட்சிகளை சேர்ந்த குண்டர்கள் சிலர், சமூக விரோதிகள், இலாகாவில் இருந்து சில பேர் சதிவேலையில் ஈடுபட்டு மின் தடையை வேண்டுமென்றே உருவாக்கியிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

அந்த விஷமிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வேண்டும் என்றே திட்டமிட்டு செய்துள்ள இந்த விஷமத்தனத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். விஷமிகளை அடையாளம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறேன் என்றார். இந் நிலையில் இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisements

6 Comments

 1. Arcot Veerasamy is one amongst those 4?

  • தெரியலையே , தைலாபுரத்திலும் , போயஸ் தோட்டத்திலும் , கலிங்கப்பட்டியிலும் நல்லா விசாரிச்சி தீக்கதிர்ல போட்டா படிச்சிக்கிடுறோம்.

   நண்பர்களே கவனியுங்க…

   இவுங்கதான் உங்க ஓட்டைக் கேட்டு வாராங்க.

 2. I ALREADY TOLD YOU BASTARD YOU ARE ALL NEVER CHANGE ONE

  • நோ , நோ , நோ , நோ , நோ , நோ………

   நீங்க எதுக்கும் அறிவாலயத்துல வந்து பாடம் படிக்கிறது நல்லது. விமர்சிப்பதையும் எப்படி நாகரீகமா விமர்சிக்கிறதுன்னு அவுங்க நல்லா கத்துக்கொடுப்பாங்க

 3. இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் தயாரித்துள்ள குறுவட்டுக்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
  இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை குறித்தும் அதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் துணை போவதை விளக்கியும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் குறுவட்டு ஒன்று தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த குறுவட்டை வெளியிடக்கூடாது என்று காவல்துறையினர் தடை விதித்தனர்.

  இதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சி.பி.செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சோதிமணி, சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

  அப்போது, குறுவட்டுக்களை தயாரிக்கும்போது, அதில் அதை தயாரித்தவர் மற்றும் வெளியிடுவோரின் பெயர் இடம்பெற வேண்டும்.
  அவ்வாறு இருந்தால் அதை வெளியிட எந்தத் தடையும் இல்லை. எனவே இலங்கை இனப்பிரச்சினை குறித்த குறுவட்டை வெளியிட அனுமதியளிக்க வேண்டும் என்று செந்தில்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

  இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குறுவட்டை வெளியிட அனுமதியளித்தனர். இந்த தீர்ப்பை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள்
  வரவேற்றிருக்கின்றனர்.

  இதேவேளையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 9:00 மணிக்கு பின்னர் திடீரென மின்தடையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியது.

  பெரியார் திராவிடர் கழகம் தயாரித்துள்ள குறுவட்டை ஒளிபரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து அந்த குறுவட்டு ‘மக்கள்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

  இதனை பொதுமக்கள் பார்ப்பதைத் தடுப்பதற்காக சென்னை இராயபுரம், புரசைவாக்கம், பெரம்பூர் உட்பட வட சென்னை முழுவதும் இன்று இரவு 9:00 மணிக்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை நீடித்தது.

  மாநில காவல்துறையால் தடை செய்யப்பட்டிருந்த இந்த குறுவட்டு இன்று ‘மக்கள்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பு முடிந்ததும் மின்தடையும் நீங்கிவிட்டது.

  • அதற்குத்தான் கலைஞர் தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறாரே?

   ////////

   மேலும் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மைலாப்பூர் உள்பட சென்னை நகரின் பல பகுதிகளில் நேற்றிரவு மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து நிருபர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி, இந்த மின்தடை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது.

   ஆளும் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதற்காக எதிர்கட்சிகளை சேர்ந்த குண்டர்கள் சிலர், சமூக விரோதிகள், இலாகாவில் இருந்து சில பேர் சதிவேலையில் ஈடுபட்டு மின் தடையை வேண்டுமென்றே உருவாக்கியிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

   /////
   இன்னொரு முறை படியுங்க….


Comments RSS TrackBack Identifier URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s