ஊருக்கு எழைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டியாம்!

வர வர இந்த தமிழ் உணர்வாலர்கலுக்கும் ( சரியான “லா” தான்..!!!) , தமிழகத்த முன்னேத்தப் போறதா சொல்லிக்கிடுறவுக அட்டகாசம் அதிகமாயிட்டு. என்னன்னு கேக்கீகளா?

அதுக்கு முன்னாடி இந்தப் பதிவ படிச்சிக்கிடுங்க.

டெல்லிக்கு ப்ளைட் ஏறிய நம்மூரு புகழ்

என்னமோ வாரிசு அரசியலுக்கும் , காங்கிரசு கட்சிக்கும் சம்பந்தமே இல்லையாம். அதுனால நாடாளுமன்றத்திலே பேபி சீட் இல்லையாம்.

சோனியா காந்தி என்ன தேசத்தோட தாயா ?

ராஜிவ் காந்தியோட சம்சாரம்….

ராஜிவ் காந்தி யாரு ?

இந்திராகாந்தியோட பையன்….

இந்திராகாந்தி யாரு ?

நேரு மாமாவோட பொண்ணு.

அவுகள விடுங்க , அட நம்ம ராகுல் காந்தி ? சோனியாவோட / ராஜிவோட பையன்.

இந்த நாலாம் பரம்பரையில இருக்குற ராகுல் காந்தி மந்திரி பதவி ஏத்துக்கிடணும்னு கெஞ்சுற ஒருத்தர் பேபி சீட்டர் இல்லைங்கறறாம். இத ஒரு கேலிச் சித்திரமாம். அதை வெச்சி நம்ம தமிழ் வெறிப் படை ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்காங்க.

இதெல்லாம் நம்ம தமிழ்நாட்டுல மட்டும் தான் நடக்குமய்யா………

சரத்பவார் பிரதமராக வாய்ப்பு இருக்குன்னா , ஆதரிப்போம்னு நேர் எதிரா இருக்குற கட்சி சிவசேனா அறிக்கை வுடுது. இங்க தமிழ்நாட்டுல மட்டும் தான் ஒருத்தரை ஒருத்தர் கால வாறி விடுற தமிழ் நண்டுகளாவே இருக்காங்க.

தமிலன் தன்னோட சுயநலத்துக்காக அதிகார வட்டத்த உருவாக்கி வெச்சுகிட்டு அது மூலமா ஏதாச்சும் லாபம் வருமான்னு பாக்குறதாலதான் இந்த வாரிசு அரசியலே.

சரி , இன்னிக்கு மதுரைல நான் நிக்கணும்னு அழகிரியா சொன்னாரு ? இல்லியே ஆதரவாளக் குஞ்சுகள் தானே அணியணியா படையெடுத்தாங்க அறிவாலயத்துக்கு?

மதுரையில் அழகிரி போட்டி?

உங்க சுயநலத்துக்காக அவுங்களை பயன்படுத்திகிட்டு அவுங்களையே குறை சொல்றது என்னய்யா நியாயம்?

தமிழ்நாட்டுக்கு அதிக அமைச்சர்கள் மூலமா  அதிகாரம் வாங்கித் தந்தாலும் குற்றம். இல்லேன்னாலும் குற்றம்…. என்னதான்யா செய்யச் சொல்றீங்க????????????

ஒண்ணு தெளிவா சொல்லிப்போடுங்க ,என்ன பண்ணுரதுன்னு…

இல்லாட்டி குட்டயக் கொழப்பாம சும்மா இருங்க.

டைம்ஸ் ஆப் இந்தியா காரன் சொல்லிட்டானாம். உடனே மானம் போச்சாம்….! ராகுல் காந்தி கண்டிப்பா மந்திரி பதவி ஏத்துக்கனும்னு பிரதமர் சொன்னப்போ இந்தியாவோட மானம் போகலியா ?

Advertisements

3 Comments

 1. ராகுல் காந்தி இதற்கு முன் 5 வருடங்கள் மக்களவை உறுப்பினராக இருந்தவர்…..
  அப்போது யாரும் அவரை வற்புறுத்தவில்லை….ஆனால் அழகிரி…நேற்று எம்பி இன்று மந்திரி…நாளைக்கு பிரதமர் கொஞ்சம் அசந்த அவர் சீட்டுலேயே உக்காந்துருவாறு போல…
  என்னமோ போங்க!!!! T.R.பாலு என்னங்க பாவம் பண்ணாரு…அவர ஒரு ஓரமாவாது ஒக்காரவெச்சுருக்கலாம்….அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 2. //சோனியா காந்தி என்ன தேசத்தோட தாயா ?//

  Illai. Sokka thangam 🙂 🙂 Enjoy the halwa

 3. You Are Posting Really Great Articles… Keep It Up…

  We recently have launched a Tamil Bookmarking site called “Tamilers”…

  http://www.Tamilers.com
  தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.


Comments RSS TrackBack Identifier URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s