சட்டம் ஒழுங்கு இல்லையாம் – இளங்கோவனின் குற்றச்சாட்டு உண்மையா?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லையென்று குறை கூறும் இளங்கோவன் அவர்களின் அறிக்கையை ஆராய்வதை விட அதற்கு அவர் சொன்ன உதாரணங்கள்தான் வேடிக்கையிலும் வேடிக்கை….

http://thatstamil.oneindia.in/news/2008/11/05/tn-no-law-and-order-in-tamil-nadu-says-illangovan.html

மதுரையில் எப்போதோ நடைபெற்ற தினகரன் சம்பவத்தைச் சொல்லி 2008 ல் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பது யாரை ஏமாற்ற என்பதை இளங்கோவன் அவர்கள் சொன்னால்தான் நமக்குத் தெரியும்!!!!!

கடந்த தேவர் ஜெயந்தியின் போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதற்கும் , சட்டம் ஒழுங்கிற்கும் சம்பந்தம் இருப்பதாக கிருஷ்ணசாமி அவர்கள் கூட குற்றஞ்சாட்டவில்லை…!!!ஆனால் போன வருடம் நடந்த இந்தச் சம்பவத்தினால் 2008 ல் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாம்!!!!

ஜெயலலிதா அம்மையாரின் குற்றச்சாட்டுக்குத்தான் அதிமுகவினரே கல் வீச்சில் ஈடுப்பட்டிருக்கிறார்கள் என்று போலிசார் சொல்கிறார்களே???? விசாரித்து உண்மை தெரிந்தபின் குற்றஞ்சாட்டுங்களேன்….தவிர்த்து அந்த அம்மாவுக்கெல்லாம் வக்காலத்து வாங்கினால் பின்னால் பிரச்சினை …பாத்து நடந்துக்கோங்கோவ்!

///அதற்கடுத்து உசிலம்பட்டி அருகே புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு பத்திரிகை அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது..//
உத்தபுரம் போன்ற பிரச்சினைகள் மிகவும் சென்சிடிவ்வானது…உங்கள் அரசியல் சண்டைகளை அறிக்கைகளில் வைத்துக்கொள்ளுங்கள் , மக்கள் வாழ்க்கையில் அல்ல…..!!!! இதுபோன்ற கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்காவிட்டால் , மத்தியில் ஆட்சி செய்யும் உங்கள் காங்கிரஸ் போலத்தான்!!!!!

ஊரெங்கும் குண்டு வெடிப்புக்கள் ………

உணர்ச்சியில்லாத ஜடமாய் இந்திய நடுவண் அரசு………..!!!!!!

முதலில் அடுத்தவர்களை குற்றஞ்சாட்டுவதற்கு முன் உங்கள் கட்சியில் சட்டமோ , ஒழுங்கோ இருக்கிறதா என்று பாருங்களேன்…அதை முன்னேற்றினாலாவது கட்சி உயிருடன் இன்னுங் கொஞ்ச காலம் இருக்கும்  , அடுத்தவர்களைக் குற்றஞ் சாட்டும் முன்…!!!!

////இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் திமுக அமைச்சரவையில் காங்கிரசுக்கு பங்கே வேண்டாம் என்றார்./////

ச்சீ ச்சீ , இந்தப் பழம் புளிக்கும்!!!!!!!!!!

Advertisements

ஈழத்திற்கான உதவிகள் – கலைஞரிடம் நடுவண் அரசு விளக்கம்

இந்தியத் தூதரின் மேற்பார்வையுடன் தமிழக உதவிகள் வன்னி செல்லும்! –

கருணாநிதிக்கு புதுடில்லி விளக்கம்

இலங்கையில் மோதலில் சிக்கியுள்ள வன்னி மக்களுக்காக இந்தியா

வழங்கவுள்ள நிவாரண உதவிகளின் விநியோகம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின்

மேற்பார்வையுடனேயே இடம்பெறும் எனப் புதுடில்லி தெரிவித்துள்ளது.

இந்திய உதவிகள் வன்னி மக்களை எவ்வாறு சென்றடையவுள்ளன

என்பதைத் தெளிவுபடுத்துமாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர்

அனுப்பிவைத்துள்ள கடிதத்திற்குப் பதிலளிக்கையிலேயே இந்திய

வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடபகுதியில் மோதலில் சிக்கியுள்ள மக்களுக்கான நிவாரண

உதவிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு கப்பல்

மூலம் அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ள இந்திய  வெளிவிவகார அமைச்சு,

இந்தப் பொருட்களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைக்குழு

மற்றும் ஐக்கிய நாடுகள் ஊடாக வழங்கும் நடவடிக்கையை உயர்ஸ்தானிகராலயம்

முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாடடு மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி மூலம் கொள்வனவு

செய்யப்படும் உதவிப் பொருட்கள் எவ்வாறு வன்னி மக்களுக்கு வழங்கப்படும் என்பதைத்

தெளிவுபடுத்துமாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அவசர கடிதமொன்றைத்

திங்கட்கிழமை இந்தியப் பிரதமருக்கு அனுப்பியிருந்தார்.

இலங்கை பிரச்சினை தொடர்பாக கடைசி தமிழன் உள்ளவரை போர் ஓயாது! : த.தே. கூட்டமைப்பு

இலங்கை பிரச்சினை தொடர்பாக கடைசி தமிழன் உள்ளவரை போர் ஓயாது! : த.தே. கூட்டமைப்பு
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2008, 09:20.33 AM GMT +05:30 ]
கடைசி தமிழன் உள்ளவரை ஆயுதத்தைக் கீழே போடும் பேச்சுக்கே இடமில்லை. நிரந்தரத் தீர்வு வரும் வரை போர் ஓயாது என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சிவாஜிலிங்கம், சிறீகாந்தா கூறியுள்ளனர்.
திண்டுக்கல்லில், மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இலங்கை எம்.பிக்கள்., சிவாஜிலிங்கம், சிறீகாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் சிவாஜிலிங்கம் பேசியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள இன உணர்வு கண்டு இலங்கை அரசு பயப்பட ஆரம்பித்து விட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தானைப் பிரித்தது போல் இலங்கையையும் பிரித்துக் கேட்டிருந்தால் தமிழர்களுக்கு இந்நிலை அங்கு ஏற்பட்டிருக்காது.

இதுவரை இலங்கை அரசு, தமிழர்கள் மீது 6,000 தொன் வெடிகுண்டுகளை வீசியுள்ளது.

தமிழக அரசு கொடுக்கும் அரிசியை வைத்து சமைத்து சாப்பிடும் நிலை அங்கு இல்லை. போர் நடந்துகொண்டிருக்கும் போதே இந்த உதவி என்றால், அது மக்களுக்கு வாய்க்கரிசியாகத்தான் சென்று சேரும்.

உலகத்தில் பல நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டாலும் இலங்கையில் தடை செய்யப்படவில்லை.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். கடைசி தமிழன் உள்ளவரை ஆயுதத்தைக் கீழே போடுவது நடக்காத ஒன்று என்றார் அவர்.

‘இலங்கை’: பிரதமர்-சோனியாவுடன் பாலு மீண்டும் சந்திப்பு


புதன்கிழமை, நவம்பர் 5, 2008

டெல்லி:  இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் மத்திய அரசு தீவிரமாக வற்புறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாவிடம் டி.ஆர்.பாலு மீண்டும் நேரில் கோரிக்கை விடுத்தார்.

பீம்ஸ்டெக் எனப்படும் 7 தெற்காசிய பிராந்திய நாட்டு தலைவர்களின் மாநாடு, வரும் 13ம்ந் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வருகிறார்.

இந் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை, மத்திய கப்பல் போக்குவரத்து, சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி டி.ஆர்.பாலு தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

டெல்லி வரும் ராஜபக்சேயிடம், இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோர் வற்புறுத்த வேண்டும் என்று பாலு கேட்டுக் கொண்டார்.

இது குறித்த முதல்வர் கருணாநிதியின் எண்ணங்களையும் அவர் தெரிவித்தார்.

மேலும் இலங்கை தமிழர்களின் நலனுக்காக அனுப்பி வைக்கப்படும் மருந்துகள் மற்றும் நிதி உதவிகளை, இலங்கை அரசு மூலம் வினியோகிக்காமல், இலங்கையில் உள்ள இந்திய தூதர் மேற்பார்வையில் வழங்க வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு கேட்டுக்கொண்டார்.