சந்தேக சாம்பிராணி…

நாளையே (07.10.2008 ) காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், வாசன் மற்றும் இளங்கோவன், காங்கிரஸ் எம்பிக்கள் பங்கேற்கவுள்ளனர். கட்சியின் மத்திய பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர். மேலும் ஆட்சியில் பங்கு கோஷத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சந்தேக சாம்பிராணி

என்னாங்கோ , நேத்துதான் உங்க சென் ட்ரல் மினிஸ்டர் இளங்கோவன் ஆட்சியில பங்கு வேணாம்னார் , இப்ப இப்படி சொல்றீங்கோவ்??? ஒரு வேளை அவுரு சென் ட்ரல் மினிஸ்டரா இருக்கறதால தமிழ்நாட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எல்லாம் நாசமா போகட்டும்னு ப்ளான் பண்ணறாரோ ?? கொஞ்சம் என்னன்னு கேட்டு வையுங்கோவ்..!

சென்னை: மதம் மாறிய தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் இட ஒதுக்கீட்டு சலுகைகள் வழங்கலாம் என ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை அமலாக்கக் கூடாது என பாஜக கூறியுள்ளது.

சந்தேக சாம்பிராணி

அப்போ மதம் மாறீய தலித்கள் மறுபடியும் இந்து மதத்துக்கு மாறினா சலுகைகளை கொடுத்திரலாமா?????? அப்போ , மதமாற்றம் பரவாயில்லையா?

வாரங்கல்: தெலுங்கு சூப்பர் ஸ்டார் மற்றும் பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவர் சிரஞ்சீவி மீது, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அழுகிய முட்டைகளை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

சந்தேக சாம்பிராணி

அங்கே தமிழர்கள் போல முட்டாள்கள் நிறைய இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இங்கே நடிகன் தவிர எவனும் நாடாள முடியாது.அங்கே கடந்த இரு முதல்வர்கள் நடிகர்கள் அல்லர். எம்.ஜி.ஆர் தொடங்கிய கேவலமான சினிமா அரசியல் இன்று விஜயகாந்த் வரை தொடர்கிறது..பத்தாததுக்கு ரஜினி அரசியலுக்கு வந்தாகணும்னு ஒத்தக்கால்ல நிக்கிற ஒரு கூட்டம்… தமிழன் மேல அழுகிண முட்டையை யார் வீசி அவனுக்கு புரிய வைக்கிறதுன்னு புரியலையே?

பாட்னா & சிந்த்வாரா: விமான நிலையத்துக்கு தாமதமாக வந்ததால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட மத்திய அமைச்சர் விமான நிறுவன மேலாளரை பலர் முன்னிலையில் கெட்டவார்த்தைகளால் ஏசியபடி அறைந்து தாக்கினார்.

சந்தேக சாம்பிராணி

அட நீங்க பரவாயில்லே..பகுத்தறிவு வழியில வந்த திராவிட இயக்கத் தலிவர் ஒருவர் படி இடிச்சுட்டதால பயணத்தையே தள்ளி வெச்சுட்டார்…அத எந்தக்கொடுமைல சேர்த்த??


சந்தேக சாம்பிராணி தனது சந்தேகங்களை தொடர்வார்…………

புரட்டுக்களை கிழித்தெறிவார்!

Advertisements