ஈழம்:சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் – கலைஞர்

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் நா‌ம் எடு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கைக‌ள் ப‌ற்‌றி முடிவு செ‌ய்ய நாளை ச‌ட்டம‌ன்ற க‌ட்‌‌சி‌த் தலைவ‌ர்க‌ள் கூ‌ட்ட‌ம் எனது தலைமை‌யி‌ல் செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் நடைபெறு‌கிறது” எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

செ‌ன்‌னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் நாளுக்கு நாள் இலங்கையில் வாழும் தமிழர்கள் உயிர் உடமைகளை இழந்து வாழ்வதற்கே பயந்து பாதிக்கப்படும் நிலையில் மேலும் மேலும் நம் சிந்தை கலக்கும் செய்திகள் வந்து கொண்டிருப்பதால் அது பற்றி மத்திய அரசுடன் தொடர்பு கொள்ளவும், மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்யவும், சட்டமன்றத்தில் இடம் பெற்று உள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நாளை (25ஆ‌ம் தேதி) காலை 10 மணிக்கு தலைமை‌ச் செயலகத்தில் எனது அறையில் நடைபெறவிருக்கிறது எ‌ன்று கூ‌றினா‌ர்.

கட்சியின் தலைவர், பொதுச் செயலர், மாநில செயலர் என்ற முறையில் ஒருவரும், சட்டமன்ற கட்சி தலைவர் ஒருவருமாக 2 பேர் கலந்து கொண்டு தக்க ஆலோசனைகளை கூற வே‌ண்டு‌மெ‌ன்று இ‌ன்று கடிதம் எழுதியிருக்கிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்த அவசர கூட்டம் பா.ம.க. நிறுவனர் ராமதாசும், நானும் கலந்து பேசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த கருணா‌நி‌தி, இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராகவும், கட்சி தலைவராகவும் கோ.க.மணி இருந்த போதிலும், நிறுவனத் தலைவர் என்ற முறையில் ராமதாஸ் கலந்து கொள்வார் எ‌ன்றா‌ர்.

அதைப் போலவே ம.தி.மு.க. என்றால் சட்டமன்ற கட்சி தலைவராக மு.கண்ணப்பன் இருக்கிறார். அவரும் கலந்து கொள்ளலாம், அந்த கட்சியின் பொதுச்செயலரான வைகோவும் கலந்து கொள்ளலாம் எ‌ன்று கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Advertisements

ஈழம் : மென்பொருள் வல்லுனர்களின் சீரிய முயற்சி!!!

நடிகர்களான சூர்யா,பிரகாஷ்ராஜ், ஜ.டி.பொறியியளார்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து டைடல் பார்க்கில் 17.11.2008 அன்று இலங்கையில் அல்லலுறும் தமிழ் மக்களின் அவலங்கள் குறித்து எடுத்துரைக்கும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

ஈழம்  பற்றிய படித்த , படிக்காத எனப்பலரிடமும் பல மாறுபட்ட கருத்துக்கள்……

அநேக கருத்துக்களுக்கு மேற்கண்ட சிறு குறிப்புகள் விளக்கமளிக்க உதவும்…………

இந்த சீரிய முயற்சியை முன்னெடுத்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் நாம் நமது
நன்றியையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்!!!!!!!!!!!

ஈழம் – கலைஞர் தடுமாற்றமா?

இங்கே ஈழத்தின் பால் அக்கறை காட்டும் தமிழுணர்வாளர்களில் மிகப்பலர் , ஈழப்பிரச்சினையில் கலைஞர் தடுமாற்றத்துடன் கருத்துக்களை தெரிவிப்பதாக கருதுகிறார்கள்….ஒரு வகையில் அவரது நிலைப்பாடும் அவ்வாறு கருதுவதாகவே இருந்து வந்திருக்கிறது….

ஆனால் உண்மை நிலை என்ன???

கலைஞரது தமிழுணர்வையும் , அவரது ஈழத்தின் பாலான அக்கறையையும் சந்தேகப்படுவதென்பது மிகப்பெரிய முட்டாள்தனம்..!! ஆகவே , அவ்வாறான வாதங்களை வைப்போர் , கலைஞரின் அரசியல் எதிர்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி , அவர்களுக்கு நாம் பதிலும் சொல்லத் தேவையில்லை.ஆனால் , கலைஞரின் நிலையில் குழப்பங்கொண்டு , ஏன் இவ்வாறாக அவர் செயல்படுகிறார் என்ற ஆதங்கத்துடன் தமது கருத்துக்களை வைப்போரின் சந்தேகத்தை தீர்க்கும் முகமாகவே இப்பதிவினை நாம் எழுதுகின்றோம்!

எந்தவொரு கட்சிக்கும் அரசியல் அதிகாரம் முக்கியம்…..இன்றைய சூழலில் புதிதாக கட்சி ஆரம்பிக்கும் பலரும் கூட முதலமைச்சர் கனவிலேயே ஆரம்பிக்கிறார்கள் என்பது கண்கூடு…மறுக்க முடியாத உண்மையுங் கூட…..

ஆக , தமது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் , அதுவும் இன்றைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியும் , தென் இந்தியாவில் நிலவும் தற்போதைக்கு சரி செய்யமுடியாத மின்வெட்டுக்களும் சூழந்த ஒரு சூழலில் தேர்தலில் ஈழத்துக்காக பதவி துறந்தால் , கழகம் மீண்டும் ஆட்சிக்கு வருமா என்பது சந்தேகம்தான்!!! இதுதான் உண்மை , இதைச்சொல்ல நமக்கு தயக்கமேதுமில்லை…கழகப்பொருளாளர் கூட அதே கருத்தைதன் சொல்லியிருக்கிறார்…

ஆக , ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதென்பது எவ்வளவு முக்கியமோ , அதே அளவிற்கு காங்கிரஸுக்கு மத்திய ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதென்பது முக்கியம் , ஆனால் இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் மத்திய ஆட்சியை பற்றிய பெரியதொரு கவலை இல்லை அவர்களுக்கு , இங்கே நிலை தலைகீழ்!!!!! காங்கிரஸை நம்பியே கழக் ஆட்சி இருப்பது கண்கூடு!!

அப்படிப்பட்ட சூழலில் , திரு.பழ நெடுமாறன் அவர்களுக்கோ , திரு.வைகோ அவர்களுக்கோ , திரு.திருமாவளவன் அவர்களுக்கோ , இல்லாத நெருக்கடி அல்லது பொருந்தாத சூழல் கலைஞருக்கு இருக்கிறது……அதனால் பழ.நெடுமாறன் போன்ற தமிழுணர்வாளர்களின் செயல்பாட்டையும் , ஆட்சியில் இருக்கும் கலைஞரின் செயல்பாட்டையும் ஒப்பிடுவதென்பது முட்டாள்தனம்…

ஆனால் , கலைஞரின் தமிழுணர்வின் பால் நம்பிக்கை கொண்ட பலரும் கூட , நெடுமாறனைப்போல கலைஞர் செயல்பட மாட்டேன் என்கிறாரே என்ற ஆதங்கத்தில் தான் கலைஞரை குறை கூறுகிறார்கள்..

ஆகவே தவறான ஒப்பீட்டின் பால் கலைஞரை குறைகூறுபவர்களுக்கு சில கேள்விகள்…

இன்றைய சூழலில் கழக ஆட்சி இல்லாது போனால் , ஒரு வேளை ஜெயலலிதா ஆட்சி மலருமானால் கருத்து சுதந்திரம் காணாமல் போய்விடும்….அதைத் தான் விரும்புகிறீர்களா??

இன்றைக்கு நாடாளுமன்ற எம்பிக்களை ராஜினாமா செய்வதால் யாருக்கு நட்டம்?? தமிழகத்துக்குத் தானே???? ஒரு வேளை ராஜினாமா செய்தபின் , காங்கிரஸ் தமிழகத்தில் ஆதரவை விலக்கி அதனால் திமுக ஆட்சியும் கவிழ்வதைத்தான் விரும்புகிறோமா????

( இங்கே குறிப்பிட வேண்டியது – அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஏன் கலைஞர் இதை நினைக்கவில்லை என்று – அன்றைய நிலை வேறு , காங்கிரஸும் கூட தீர்மானத்தை ஆதரித்தது , பிறகு அந்தர் பல்டி அடித்தது…அதனால் அனறைய சூழலும் ,இன்றைய சூழலும் வேறுவேறுதானதொரு சூழலில் இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிடுதல் இமாலயத் தவறு)

இக்கேள்விகளுக்கு பதில் கண்டோமானால் , கலைஞர் ஈழப்பிரச்சினையில் தடுமாறவில்லை…தெளிவான கொள்கையுடனே இருக்கிறார்……..ஆனால் தமிழின எதிர்கள் தான் அவர் தடுமாறுவதாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவுற விளங்கும்!!!

ஆகவெ , அவர் தடுமாறவும் இல்லை , தடுமாறவும் மாட்டார் என்பதைத்தான் அவரது சீரிய செயல்பாடுகளும் , மென்மையான அணுகுமுறைகளும் காட்டுகின்றன…

அவரது புலிகளின் நிலைப்பாடு பற்றிய கேள்விகளுக்கு புலிகளும் பதிலளித்துவிட்டார்கள் , அதன்பின்னர் கலைஞரும் போர்நிறுத்தம்தான் தேவை என்ற தொனியில் மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறார்…

நல்லதொரு தீர்வு கலைஞரால் கிடைக்குமென்ற நம்பிக்கையில் நாம் கலைஞர் கரத்தை வலுப்படுத்துவோம்!!!

வாழ்க தமிழ்மொழி , வாழ்க திமுக , வளர்க கலைஞர் புகழ்!!

தமிழக அரசை தர்மசங்கடப்படுத்தாதீர்கள் – கலைஞர்

சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினையில், சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு சிலர் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தனித்து என்னால் எதுவும் செய்ய முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப் படுகொலை, நாற்பது ஆண்டுக் கால வரலாற்றுக்குரிய தொடர் நிகழ்ச்சியாகி விட்டது.

அதைத் தடுத்து நிறுத்தித் தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள், பகைவர்கள் மீது பாய்ந்திடாமல்; சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத் தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே கருதிச் செயல்பட்டு;

தமது இனம் அறவே செத்து மடிவது குறித்து அக்கறையற்றே இருந்து விட்டனர்.

அதிர்ச்சி தரத் தக்கதும் ஆறாத் துயரம் அடையத் தக்கதுமான நிகழ்வுகள் இலங்கை மண்ணில் நித்தியத் ‘திருவிழா’க்கள் ஆகி; இறுதிக் கட்டமாக அமைந்துள்ள இன்றுள்ள சோக நிலை, உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்ததே.

இன்றைய நிலைக்கு முடிவு கண்டிட எடுத்திடும் முயற்சி என் ஒருவனால் மட்டுமே முற்றுப் பெறக் கூடியதல்ல!. இதை உணர்ந்திருப்போர் கூட நான் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருப்பதால் என்னால் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்று தவறாக எண்ணுகிறார்கள்; அல்லது தவறாகக் கூறுகிறார்கள்.

“இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக எதுவும் பேசுவோம், எங்களுக்கு வேண்டியது இலங்கையில் தமிழ் ஈழம் தான்” என்கிற அவர்களின் பேச்சும், எழுத்தும் எனக்குப் புரிகிறது.

ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கிடையே அலை மோதும் எதிர் விமர்சனங்களையும் ஓர் அரசு; சிந்தித்துச் செயல்பட வேண்டியிருக்கிறதல்லவா? அவற்றை அலட்சியப்படுத்த முடியாதல்லவா? முதலில் அத்தகைய சட்டக் கட்டுப்பாடுகளை உடைக்கும் விதமாகப் பேசுகிறார்கள்.

சட்டரீதியாக அதன் மீது நடவடிக்கை எடுத்திட நேர்ந்தால், ‘கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக் கெதிராக நடந்து கொள்கிறார்’ என்று என் மீது ‘பெரும் பழி’ சுமத்துகிறார்கள். சாதனைகள் புரியும் ஆட்சி என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள அடுக்கடுக்கான திட்டங்களும், அவற்றின் செயல்பாடுகளும் அவை தொடர்பான புள்ளி விபரங்களுமே போதுமானவை என்ற மன நிறைவு எனக்கிருந்தாலும்;

எனக்கும், என் தலைமையில் உள்ள ஆட்சிக்கும் எப்படியோ ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று தீர்மானித்து; எவையெவை சட்ட விரோதமான செயல்களோ; அவற்றிலே ஈடுபட்டு தமிழக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் தந்திரத்தைக் கையாண்டு வருகிறார்கள்.

இந்தப் பிரச்சனையில் சுதந்திரமாக செயல்பட வருக என்று என்னைக் காட்டிலும் வீரமிக்க தமிழர்களை அழைப்பதோடு நான் ஒதுங்கி நின்று விடாமல்; அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் உறுதி கூறி என்னுடனிருந்து துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

இந்திய அரசு என் வேண்டுகோளையும், அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானங்களையும் படிப்படியாக நிறைவேற்ற முனைந்ததற்கு சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கும்,

இலங்கை தமிழர்களுக்கு மருந்து, உணவு, உடை ஆகியவற்றை செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. மன்றம் ஆகியவற்றின் மூலம் வழங்க இதுவரை 8 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கிய தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வழங்கிட வேண்டுகிறேன்.

நான் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கள்; இலங்கை தமிழர்களின் காயத்திற்கும், இங்குள்ள சில தலைவர்களின் எரிச்சலுக்கும் தக்க சிகிச்சைக்கான மருந்தாகட்டும்.

அவர்களின் நலிவு தீர்த்திட ஒரு வகையில் நாம் பயன்படுகிறோம் என்கிற மன நிறைவுடன் என்றும் போல் தமிழ்த் தொண்டு, தமிழினத் தொண்டு தொடர்வோம் என்று கூறியுள்ளார்.

நாங்கள் பேசுவதனை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் நீங்கள் போரை ‌நிறு‌த்துங்கள்: பார‌திராஜா

[புதன்கிழமை, 05 நவம்பர் 2008, 10:31 பி.ப ஈழம்] [கி.தவசீலன்]
நா‌ங்க‌‌ள் பே‌சுவதனை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் போரை ‌நிறு‌த்து‌ங்க‌ள் எ‌ன்று ‌‌இயக்குநர் இமயம் பார‌திராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்ய‌ப்படுவதை கண்டித்து தென்னிந்திய திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் பாரதிராஜா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உலக‌த்‌தி‌ற்கு த‌‌மி‌ழ் இரு‌ப்பதை, ஏ‌ன் த‌மிழை‌ கொ‌ண்டு செ‌ன்றவ‌ன் இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ன்தா‌ன். த‌மிழ‌ன் எ‌ன்ற இன‌ம் இரு‌ப்பதை உல‌‌கி‌ற்கு பறை சா‌ற்று‌கி‌ன்றவ‌ன் த‌மிழ‌ன்தா‌ன். அ‌த்தகைய த‌மிழ‌‌னை ‌நீ கு‌ண்டுபோ‌ட்டு அ‌ழி‌க்‌கிறா‌ய். ரொ‌ம்ப அழகாக‌ச் சொ‌ன்னா‌ர்க‌ள், அவ‌ர்க‌ள் போரில் ‌மிக‌ப்பெ‌ரிய பு‌த்‌திசா‌லிக‌ள் அ‌ல்ல. ‌மிகவு‌ம் வலுவான அரசு அ‌ல்ல, சிறிலங்கா வல்லரசு‌ம் அ‌ல்ல.

உன‌‌க்கு எ‌ப்படி இ‌வ்வளவு சக்தி வ‌ந்தது?. கதுவீ மூலமாக க‌ண்டு‌பிடி‌ப்பத‌ற்கு‌ம் கட‌ல் வ‌ழியாக செ‌ல்லு‌கி‌ன்ற ‌சில‌‌ சில ரா‌ய்மா‌‌ய்களை அ‌ங்‌கிரு‌ந்து சு‌ட்டு‌க் பொசு‌க்குவத‌ற்கு‌ம் இட‌ம் க‌ண்டு‌பிடி‌‌ப்பத‌ற்கு‌ம் ‌நீ (‌ம‌த்‌திய அரசு) இ‌ங்‌கிரு‌ந்து தொ‌‌‌‌ழி‌ல்நு‌ட்ப கரு‌விகளை அனு‌ப்‌‌பி இரு‌க்‌கிறா‌ய்.

இ‌ந்‌தியாவா‌ல் கட‌ந்த நான்கு மாத‌‌ங்களாக கொடு‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறது. ம‌த்‌திய அரசுதா‌ன் இத‌ற்கு முத‌ற்காரண‌ம், ச‌ந்தே‌கமே ‌கிடையாது. அவனு‌க்கு கா‌ரிய‌ம் முடி‌கிறது.

மு‌க்கா‌ல்வா‌சி த‌மிழனை அ‌ழி‌த்து ‌வி‌ட்டா‌ன். பா‌க்‌கியை அ‌ழி‌த்து ‌விடுவா‌ன். இ‌ன்னு‌ம் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு‌க்கா‌ன். அவனையு‌ம் ‌‌தீ‌ர்‌த்து‌க் க‌ட்டுவா‌ன் பா‌‌‌ர்‌த்து‌க்கி‌ட்டே இரு‌‌ங்க. ‌தீ‌‌‌த்து க‌ட்டி‌ட்டு ‌மி‌ச்ச‌ம் இரு‌க்‌‌கிற த‌மிழனை அ‌ழி‌ச்‌சி‌ட்டானா ஒரு பு‌ல்பூ‌ண்டி‌ல்லை த‌மிழ‌ன். அவனை அடையாள‌ம் இ‌ல்லாம‌‌ல் அ‌‌ழி‌ப்பதுதா‌ன் ராஜப‌‌க்சவி‌ன் ‌தி‌ட்ட‌ம். இது உ‌ங்களு‌க்கு பு‌ரிய‌வி‌ல்லை.

நாம் இ‌ங்கு பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌றி‌க்கொ‌ண்டே இரு‌க்‌கிறோ‌ம். நா‌ன் ஒ‌ன்றை ம‌ட்டு‌ம் ரொ‌ம்ப தெ‌‌ளிவாக சொல்‌கிறே‌ன், ‌நீ‌ங்க‌ள் எ‌வ்வளவு‌க்கு எ‌வ்வளவு தாமத‌ப்படு‌த்து‌கி‌றீ‌ர்களோ அ‌வ்வளவு‌க்கு அ‌வ்வளவு அ‌‌ங்கு ‌பிண‌ம் கு‌வி‌‌ந்து கொ‌‌ண்டு இரு‌க்கு‌ம். ‌‌நீ‌ங்க‌ள் நாளை த‌ள்ள‌த்த‌ள்ள இ‌ந்த இன‌ம் அ‌ழி‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்கு‌ம்.

பு‌த்‌திசா‌லி‌த்தனமாக, தயவு செ‌ய்து கையெடு‌த்து கு‌ப்‌பி‌ட்டு‌க் கே‌ட்டு‌க் கொ‌ள்‌கிறோ‌ம், போரை ‌நிறு‌த்து எ‌ன்று சொ‌ல்‌கிற அளவு‌க்கு உன‌க்கு வ‌லிமை இரு‌க்‌கிறது. வ‌ல்லரசு‌க்கான ச‌க்‌தி இரு‌க்‌கிறது. ஏ‌ன் அதை செ‌ய்ய‌வி‌ல்‌லை எ‌ன்பதுதா‌ன் எ‌ங்க‌ள் கே‌ள்‌வி.

நா‌ங்க‌ள் அர‌சிய‌ல்வா‌திக‌ள் அ‌ல்ல, சமூக பொறு‌ப்பு உ‌ள்ளவ‌ர்க‌ள். இவ‌ன் சராச‌ரி ‌குடிமகன். எ‌ந்த பத‌வி‌க்கு‌‌ம் ஆசை‌ப்படாதவ‌ர்க‌ள். எ‌ங்களு‌க்கு ர‌சிக‌ர்க‌‌ள் ‌கிடையாது, க‌ட்‌சி ‌‌கிடையாது, கலைஞ‌ர்க‌ள் சமூக பொறு‌ப்பு‌ள்ள கலைஞ‌ர்க‌ள். இனமான‌ம் உ‌ள்ள கலைஞ‌ன்.

ஆகை‌யினா‌ல் கே‌ட்‌கிறோ‌ம், எ‌ங்க‌ள் இன‌ம் அ‌ழி‌கிறது, தயவு செ‌ய்து கையெடு‌த்து கு‌ம்‌பிடு‌கிறோ‌ம், போரை ‌நிறு‌த்த ‌‌நினை‌த்தா‌ல் இ‌ந்த நேர‌த்‌தி‌‌ல் ‌நிறு‌த்த முடியு‌ம். ‌‌நிறு‌த்‌தி ‌வி‌ட்டு பே‌ச்சுவா‌ர்‌த்தை‌‌க்கு செ‌ல். செ‌த்து ‌தின‌ம் ‌‌தின‌ம் ‌பிணமா‌ய் ‌கிட‌க்கு‌ம் எ‌ங்க‌ள் இன‌‌த்தை கா‌‌ப்பா‌ற்று‌ங்க‌ள் எ‌‌ன்றுதா‌ன் உ‌ங்களை கையெடு‌த்து கு‌‌ம்‌பிடு‌கிறோ‌ம்.

ப‌ள்‌ளி‌க்கு செ‌‌ல்லு‌கிற ‌பி‌ள்ளைக‌‌‌ள் எ‌ல்லா‌ம் பது‌ங்‌கி கு‌ழி‌யி‌ல் ‌கிட‌‌க்‌கிறா‌ர்‌க‌ள். ‌நீ‌ங்க‌ள் பட‌ங்களை பாரு‌ங்க‌ள். ச‌ட்டி பானைகளை தூ‌க்‌கி‌க் கொ‌ண்டு எ‌ங்கே செ‌ல்வது எ‌ன்று தெ‌ரிய‌வி‌ல்லை. மேலே ச‌த்த‌ம் கே‌ட்டா‌ல் ‌பி‌‌ள்ளைகளு‌க்கு சொ‌ல்ல‌த் தெ‌ரிய‌வி‌ல்லை, வ‌ண்டி‌‌ச் ‌ச‌த்த‌ம் கே‌ட்‌கிறது எ‌ன்று கூறு‌கிறா‌ர்க‌ள்.

தரை‌ப்படை, கட‌ல்படை, வானூ‌ர்‌தி மூ‌ன்று வ‌ழிக‌ளிலு‌ம் எ‌ங்களை அ‌ழி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌‌ய். கொ‌ஞ்ச‌ம் ‌வி‌ட்டா‌ல் கதை வேற. பேச‌க்கூடாது.. ச‌‌‌ரி வே‌ண்டா‌ம்… நா‌ங்க‌ள் அதனை பேச முடியாது. இறையா‌ண்மை‌யைச் சொ‌ல்‌லி த‌மி‌ழ்நா‌ட்டையா ‌பி‌ரி‌த்து‌க் கொடு‌க்க சொ‌ன்னோ‌ம். இ‌ந்த நா‌ட்டை ‌பி‌ரி‌‌த்து‌க் கொடு‌‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கே‌ட்டிரு‌ந்தா‌ல் எ‌ங்க‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்கலா‌ம். எ‌ங்க‌ள் ‌பி‌ள்ளைகளை கா‌ப்பா‌ற்றுவத‌ற்கு முறை‌யீடுவத‌ற்‌கு கூட எ‌ங்களு‌க்கு உ‌ரிமை‌யி‌ல்லையா, ‌புரிய‌வி‌ல்லை என்றார் பாரதிராஜா.

நன்றி – புதினம்.காம்

நாம் ஒன்றுபட்டு ஐக்கியமாகக் குரல் கொடுத்தால் போரை நிறுத்த இந்திய அரசு ஆணை பிறப்பிக்காதா? – வீரமணி

நாம் ஒன்றுபட்டு ஐக்கியமாகக் குரல் கொடுத்தால் போரை நிறுத்த இந்திய அரசு ஆணை பிறப்பிக்காதா? – வீரமணி
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2008, 05:38.23 AM GMT +05:30 ]
தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவேண்டிய நேரத்தில் தமிழக அரசின்மீது தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அவரது அறிக்கை வருமாறு:
ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி, உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடமின்றி காடுகள், வனாந்தரங்களில் உறையும் நிலைக்கு – பிறந்த மண்ணிலேயே அவதியுறும் ஈவிரக்கம் அற்ற ஒரு நிலையில், தமிழ் இன உணர்வோடும், மனிதநேயத்தோடும் உதவிட நிதி, நிவாரணப் பொருள்கள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வின் வெளிப்பாடாக உலகத்திற்குக் காட்ட நிதி திரட்டி பொருள்களை அங்கே அனுப்பும் நிலை முதல்வர் கலைஞர் அவர்களின் முயற்சியால் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இப்பொருள்கள் விடுதலைப் புலிகளுக்கே பயன்படும் என்ற விதண்டாவாத விஷமப் பிரச்சாரம், சிங்களவர்களுக்கே பயன்படும் என்ற குற்றச்சாட்டுகளைக் கூறி அறிக்கைவிடும் அவசர, ஆத்திர அரசியல் அரைவேக்காடுகளுக்கு, மண்டையில் அடிப்பதுபோல முதல்வர் கலைஞருக்கு அவர் கேட்டுக்கொண்டபடி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெளிவாகக் கடிதம் எழுதியுள்ளாரே!

1. உதவிடும் இப்பொருள்கள் இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவரகத்திற்குக் கப்பலில் அனுப்பப்படும்.

2. பிறகு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) மூலமும் ஐ.நா. சபையின் பார்வையாளர்கள் மூலமும், பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு – (மூன்று இலட்சத்திற்குமேல்) சொந்த நாட்டில் சோற்றுக்கும் வழியற்ற நிலையில் உள்ள மக்களுக்குக் கிடைக்கச் செய்யப்படும். வேண்டுமென்றே உணவை சிவிலியன் மக்களுக்கு எதிரான ஓர் ஆயுதமாகக் கொண்டு, இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசின் திட்டத்தினை செயல்பட விடாத ஒரு சிறந்த ஏற்பாடு இது அல்லவா?

போர் நிறுத்தம் – அமைதி திரும்புதல், பேச்சுவார்த்தை என்பதெல்லாம், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், கட்சி அரசியல் நடத்தாது, மனிதநேயத்தோடு அரசுடன் இப்பிரச்சினையில் ஒன்றுபட்டு அழுத்தம் கொடுப்போம் என்று நிற்க முனையாமல், கட்டிய வீட்டுக்குக் குறை கூறுவதுபோல அறிக்கை விடுவதால் என்ன உருப்படியான பலன் ஏற்படும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழர்கள் வழமைபோல் இதிலும் – தீயை அயணைக்க வேண்டிய நேரத்தில், அதில் பெட்ரோலை ஊற்றுவதுபோல் நடந்துகொள்ளலாமா?

இங்கே சிறு பிசிறுகூட இல்லாமல் ஒன்றுபட்ட ஐக்கியக் குரல் கிளம்பினால், அடுத்த நிமிடமே மத்திய அரசு, சிங்கள ராஜபக்சேவுக்கு ஆணையிடாது இருக்குமா?

மனச்சாட்சியோடு எண்ணுங்கள்; நடந்துவரும் நல்லவைகளைப் பாராட்டாவிட்டாலும், குறுக்குச்சால் ஓட்டாமலாவது இருக்கக் கூடாதா?

இன்னமும் சிங்கள அதிபராகவே தன்னைக் காட்டிக்கொள்ளும் ராஜபக்சே ஒரு பேட்டியில், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்தால்தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று கூறியிருப்பது தான் இந்த ஆண்டின் தலைசிறந்த (ஜோக்) நகைச்சுவையாகும்!

போர் என்று கூற மாட்டாராம்! இராணுவ நடவடிக்கையாம் அது! அது மற்றொரு வேடிக்கை!

போர் நடைபெறுவதே சிங்கள  அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தான் என்பது உலகறிந்த உண்மை!

அந்நிலையில், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுச் சரண் அடைந்தால், அப்புறம் இவர் போர் நிறுத்தம் செய்வாராம்! என்னே வினோதமான அர்த்தமற்ற பேச்சு! அப்புறம் அங்கே ஏது போர் – அல்லது இராணுவ நடவடிக்கை?

அதிபர் இராஜபக்சேக்களுக்குத் தெரியும்படிதானே வான்படை, கடற்படை, தரைப்படை என்ற முப்படைகளையும் கொண்டு கொழும்பிலே வந்து தாக்கிவிட்டு, வெற்றிகரமாக தம் பகுதிக்கு விடுதலைப் புலிகள் திரும்பும் அளவுக்கு வலிமை பெற்று போர் புரியும் நிலையில், எத்தனை காலத்திற்கு இதோ, அதோ ஒழித்து விட்டோம், நெருங்கி விட்டோம் என்ற புரூடாக்கள் பயன்படும்?

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலங்கைப் பிரச்சினைபற்றிப் பேசிய அமெரிக்கத் தூதுவர், யதார்த்தமான ஒரு உண்மையைக் கூறி பதிவு செய்தாரே!

விடுதலைப் புலிகளுக்குள்ள வசதி – உறுதி இவைகளைப் பார்க்கையில் அவர்களைத் தோற்கடிப்பது ஒழிப்பது இயலாத காரியம் என்றாரே!

எனவே, இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலாக, அரசியல் தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறியதை உணர்ந்து வற்புறுத்த நமது மத்திய அரசு முன்வருவது ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை, மனித உரிமைக் கண்ணோட்டத்தில் அவசரம், அவசியம் ஆகும்!

இப்போது முன்னுரிமை எல்லாம் அரசியல் தீர்வு காண வற்புறுத்தும் இந்திய அரசு – அந்த அரசியல் தீர்வுக்கு எது உரிய சுமூகச் சூழல்? அதை எப்படி ஏற்படுத்துவது? என்பதை விளக்கிட முன்வருதல் அவசியமாகும்!

1987 இல் போடப்பட்ட ராஜீவ் – ஜெயவர்த்தனே உடன்பாட்டையும், ராஜபக்சே அரசு கடைப்பிடிக்காமல், வடகிழக்கு மாகாணத்தைப் பிரித்தது முதல், பல சரத்துகளை காலில் போட்டு மிதித்து விட்டதே! கூட்டாட்சித் தத்துவத்தைக் கூடப் பேசுவதில்லையே! மத்திய அரசு யோசிக்கட்டும்.

ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம்!

தமிழக முதல்வரின் நடவடிக்கைகளை விமர்சிப்பதை நிறுத்தி, ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க முன்வர காலதாமதம் வேண்டாம்! என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

ஈழத்திற்கான உதவிகள் – கலைஞரிடம் நடுவண் அரசு விளக்கம்

இந்தியத் தூதரின் மேற்பார்வையுடன் தமிழக உதவிகள் வன்னி செல்லும்! –

கருணாநிதிக்கு புதுடில்லி விளக்கம்

இலங்கையில் மோதலில் சிக்கியுள்ள வன்னி மக்களுக்காக இந்தியா

வழங்கவுள்ள நிவாரண உதவிகளின் விநியோகம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின்

மேற்பார்வையுடனேயே இடம்பெறும் எனப் புதுடில்லி தெரிவித்துள்ளது.

இந்திய உதவிகள் வன்னி மக்களை எவ்வாறு சென்றடையவுள்ளன

என்பதைத் தெளிவுபடுத்துமாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர்

அனுப்பிவைத்துள்ள கடிதத்திற்குப் பதிலளிக்கையிலேயே இந்திய

வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடபகுதியில் மோதலில் சிக்கியுள்ள மக்களுக்கான நிவாரண

உதவிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு கப்பல்

மூலம் அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ள இந்திய  வெளிவிவகார அமைச்சு,

இந்தப் பொருட்களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைக்குழு

மற்றும் ஐக்கிய நாடுகள் ஊடாக வழங்கும் நடவடிக்கையை உயர்ஸ்தானிகராலயம்

முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாடடு மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி மூலம் கொள்வனவு

செய்யப்படும் உதவிப் பொருட்கள் எவ்வாறு வன்னி மக்களுக்கு வழங்கப்படும் என்பதைத்

தெளிவுபடுத்துமாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அவசர கடிதமொன்றைத்

திங்கட்கிழமை இந்தியப் பிரதமருக்கு அனுப்பியிருந்தார்.