கலைஞர் செயல்பாடு : ஸ்டாலின் பெருமிதம்..!

கோவை: அண்ணாவின் பெயரில் சிலர் கட்சி நடத்துகின்றனர். ஆனால் அண்ணாவின் கொள்கை, லட்சியங்களை செயல்படுத்தும் ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,

அண்ணாவின் பெயரில் சிலர் கட்சி நடத்துகின்றனர். அவர்கள் எல்லாம் அறிக்கைதான் விடுகின்றனர். ஆனால் அண்ணா நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதில்லை.

தமிழகத்தில் இன்று யார் யாரோ திடீர் தலைவராகி விடுகின்றனர். அவர்கள் எல்லாம் அடுத்து நாங்கள் தான் முதல்வர் என்கின்றனர்.

கடந்த 1957ம் ஆண்டு 15 இடங்களிலும், 1962ல் 50 இடங்களிலும் பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த கட்சி திமுக. அந்த தேர்தலில் காமராஜர் தோல்வி அடைந்ததற்காக கவலைப்பட்டவர் அண்ணா. அந்த அளவுக்கு பெருந்தன்னைமிக்கவர் அண்ணா.

அதே போன்ற பெருந்தன்மை கொண்டவர் நமது முதல்வர் கருணாநிதி. அண்ணாவின் கொள்கை, லட்சியங்களை செயல்படுத்தும் ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே என்றார்.

Advertisements

நிலா பெண்ணே’.. கலைஞர் கவிதை

‘நிலா பெண்ணே’.. கருணாநிதி கவிதை

சென்னை: நிலவில் இந்திய தேசியக் கொடியோடு ஒரு விண்கலத்தை தரையிறக்கிக் காட்டிய இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டி முதல்வர் கலைஞர் ஒரு கவிதை எழுதியுள்ளார்.

Earth image taken by Chandrayan

அந்தக் கவிதை:

வான் முகத்தில் நகக்குறி போல்
இருக்கின்ற நிலாப் பெண்ணின்
தேன் கிண்ண இதழ்களிலே முத்தமிட்டு-

இந்திய நாட்டுத்
தேசியக்கொடிதனையும் கையில்
கொடுத்து விட்டுத் திரும்பி வரும்
திறமைமிகு விஞ்ஞானத்தின் கரம் குலுக்கி
வாழ்த்துகின்றோம்.

புராணத்தில் வரும் சந்திரனோ;
குருவின் மனைவி தாரைக்கு;
புதியதோர் காதலன் என்று புராணமே
கூறி வணங்கும்!

பாம்புகள் இரண்டு ராகுவும் கேதுவும்
சந்திரனை விழுங்குமாம்;
பஞ்சாங்கம் அதனை “கிரகணம்” என
விளம்புமாம்!

அனைத்தும் பொய், புளுகு, கற்பனையெனத்
தூக்கி அடித்து;

அமெரிக்க, ரஷ்ய, அய்ரோப்பிய
கூட்டமைப்பு நாடுகளின்
அணிவகுப்பில் இணைந்து அருஞ்சாதனை
புரிந்து விஞ்ஞானம்;
அசோக சக்கரக்கொடியை அம்புலியில்
நாட்டியது;

அறிவியக்க வரலாற்றில் ஓர் அற்புதமாம்;
அதுவும் நம் நாட்டில் என்பதிலோர் பெருமிதமாம்!

– கலைஞர் மு கருணாநிதி

இப்படி அவர் , இந்தியாவின் சாதனையை பாராட்டிய அதே சமயம் ,

தகுந்ததோர் சமயத்தின் புரட்டுக்களையும் கிழித்தெறிய தயங்கவில்லை..

கிரகம் விழுங்கியதால் கிரகணமாம் , அதே ராகு சாயா கிரகமாம் …!!!!!

புற ஊதாக் கதிர் தோலுக்கு தீங்கென்றால் பகுத்தறீவு….அந்தக்கதிர் தான்

நமது சாதனைக்கும் , வேதனைக்கும் காரணம் என்பது மூடர்தம் கருத்து.!!!!

இதை உணர்ந்து நாம் நம்மை உயர்த்திக்கொள்வோம்!!!

சாமியைக் கும்பிடு….தப்பில்லை , மன நிம்மதிக்காகவேனும் இல்லாத

சாமியைக் கும்பிடு , தவறே இல்லை!!!!! ஆனால்

ஆசாமியைக் கும்பிடாதே …..அதை அந்தச்

சாமி கூட மன்னிக்குமா என்பது சந்தேகம்தான்!!!!!

பங்காரும் சாமி , சங்கராச்சாரியாரும் சாமி என்றால்

இன்றும் சீரடி சாயிபாபாவுக்கு சிலை இருக்கிறதென்றால் ,

ஒருவேளை முருகனும் , சிவனும் அவ்வாறோ என்ற

சந்தேகம் எழுவது இயற்கையன்றோ ????

இன்னுஞ் சில மைல்கல்லாவது சாமியாகாமல்

தனது பணியைச் செய்யட்டும்…அதற்காகவேனும்

பகுத்தறிவை உபயோகம் செய்து மக்களுக்கு

வழி காட்டுவோமாக….!!!!!!!!!

ஈழம் – கலைஞர் தடுமாற்றமா?

இங்கே ஈழத்தின் பால் அக்கறை காட்டும் தமிழுணர்வாளர்களில் மிகப்பலர் , ஈழப்பிரச்சினையில் கலைஞர் தடுமாற்றத்துடன் கருத்துக்களை தெரிவிப்பதாக கருதுகிறார்கள்….ஒரு வகையில் அவரது நிலைப்பாடும் அவ்வாறு கருதுவதாகவே இருந்து வந்திருக்கிறது….

ஆனால் உண்மை நிலை என்ன???

கலைஞரது தமிழுணர்வையும் , அவரது ஈழத்தின் பாலான அக்கறையையும் சந்தேகப்படுவதென்பது மிகப்பெரிய முட்டாள்தனம்..!! ஆகவே , அவ்வாறான வாதங்களை வைப்போர் , கலைஞரின் அரசியல் எதிர்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி , அவர்களுக்கு நாம் பதிலும் சொல்லத் தேவையில்லை.ஆனால் , கலைஞரின் நிலையில் குழப்பங்கொண்டு , ஏன் இவ்வாறாக அவர் செயல்படுகிறார் என்ற ஆதங்கத்துடன் தமது கருத்துக்களை வைப்போரின் சந்தேகத்தை தீர்க்கும் முகமாகவே இப்பதிவினை நாம் எழுதுகின்றோம்!

எந்தவொரு கட்சிக்கும் அரசியல் அதிகாரம் முக்கியம்…..இன்றைய சூழலில் புதிதாக கட்சி ஆரம்பிக்கும் பலரும் கூட முதலமைச்சர் கனவிலேயே ஆரம்பிக்கிறார்கள் என்பது கண்கூடு…மறுக்க முடியாத உண்மையுங் கூட…..

ஆக , தமது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் , அதுவும் இன்றைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியும் , தென் இந்தியாவில் நிலவும் தற்போதைக்கு சரி செய்யமுடியாத மின்வெட்டுக்களும் சூழந்த ஒரு சூழலில் தேர்தலில் ஈழத்துக்காக பதவி துறந்தால் , கழகம் மீண்டும் ஆட்சிக்கு வருமா என்பது சந்தேகம்தான்!!! இதுதான் உண்மை , இதைச்சொல்ல நமக்கு தயக்கமேதுமில்லை…கழகப்பொருளாளர் கூட அதே கருத்தைதன் சொல்லியிருக்கிறார்…

ஆக , ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதென்பது எவ்வளவு முக்கியமோ , அதே அளவிற்கு காங்கிரஸுக்கு மத்திய ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதென்பது முக்கியம் , ஆனால் இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் மத்திய ஆட்சியை பற்றிய பெரியதொரு கவலை இல்லை அவர்களுக்கு , இங்கே நிலை தலைகீழ்!!!!! காங்கிரஸை நம்பியே கழக் ஆட்சி இருப்பது கண்கூடு!!

அப்படிப்பட்ட சூழலில் , திரு.பழ நெடுமாறன் அவர்களுக்கோ , திரு.வைகோ அவர்களுக்கோ , திரு.திருமாவளவன் அவர்களுக்கோ , இல்லாத நெருக்கடி அல்லது பொருந்தாத சூழல் கலைஞருக்கு இருக்கிறது……அதனால் பழ.நெடுமாறன் போன்ற தமிழுணர்வாளர்களின் செயல்பாட்டையும் , ஆட்சியில் இருக்கும் கலைஞரின் செயல்பாட்டையும் ஒப்பிடுவதென்பது முட்டாள்தனம்…

ஆனால் , கலைஞரின் தமிழுணர்வின் பால் நம்பிக்கை கொண்ட பலரும் கூட , நெடுமாறனைப்போல கலைஞர் செயல்பட மாட்டேன் என்கிறாரே என்ற ஆதங்கத்தில் தான் கலைஞரை குறை கூறுகிறார்கள்..

ஆகவே தவறான ஒப்பீட்டின் பால் கலைஞரை குறைகூறுபவர்களுக்கு சில கேள்விகள்…

இன்றைய சூழலில் கழக ஆட்சி இல்லாது போனால் , ஒரு வேளை ஜெயலலிதா ஆட்சி மலருமானால் கருத்து சுதந்திரம் காணாமல் போய்விடும்….அதைத் தான் விரும்புகிறீர்களா??

இன்றைக்கு நாடாளுமன்ற எம்பிக்களை ராஜினாமா செய்வதால் யாருக்கு நட்டம்?? தமிழகத்துக்குத் தானே???? ஒரு வேளை ராஜினாமா செய்தபின் , காங்கிரஸ் தமிழகத்தில் ஆதரவை விலக்கி அதனால் திமுக ஆட்சியும் கவிழ்வதைத்தான் விரும்புகிறோமா????

( இங்கே குறிப்பிட வேண்டியது – அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஏன் கலைஞர் இதை நினைக்கவில்லை என்று – அன்றைய நிலை வேறு , காங்கிரஸும் கூட தீர்மானத்தை ஆதரித்தது , பிறகு அந்தர் பல்டி அடித்தது…அதனால் அனறைய சூழலும் ,இன்றைய சூழலும் வேறுவேறுதானதொரு சூழலில் இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிடுதல் இமாலயத் தவறு)

இக்கேள்விகளுக்கு பதில் கண்டோமானால் , கலைஞர் ஈழப்பிரச்சினையில் தடுமாறவில்லை…தெளிவான கொள்கையுடனே இருக்கிறார்……..ஆனால் தமிழின எதிர்கள் தான் அவர் தடுமாறுவதாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவுற விளங்கும்!!!

ஆகவெ , அவர் தடுமாறவும் இல்லை , தடுமாறவும் மாட்டார் என்பதைத்தான் அவரது சீரிய செயல்பாடுகளும் , மென்மையான அணுகுமுறைகளும் காட்டுகின்றன…

அவரது புலிகளின் நிலைப்பாடு பற்றிய கேள்விகளுக்கு புலிகளும் பதிலளித்துவிட்டார்கள் , அதன்பின்னர் கலைஞரும் போர்நிறுத்தம்தான் தேவை என்ற தொனியில் மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறார்…

நல்லதொரு தீர்வு கலைஞரால் கிடைக்குமென்ற நம்பிக்கையில் நாம் கலைஞர் கரத்தை வலுப்படுத்துவோம்!!!

வாழ்க தமிழ்மொழி , வாழ்க திமுக , வளர்க கலைஞர் புகழ்!!

போர் நிறுத்தம் தான் உடனடித்தேவை – கலைஞர் வலியுறுத்தல்!

போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசை வற்புறுத்துமாறு பிரதமருக்கு கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2008, 02:37.38 PM GMT +05:30 ]
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, அந்நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும் என்று பிரதமரை முதல்வர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் போர் நிறுத்தம் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டியது எனக் கூறியிருந்தேன். இந்நிலையில் போர் நிறுத்தத்திற்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே “இந்திய அரசு நினைத்தால் ஒரே நாளில் இலங்கையில் நடக்கும் சண்டையை நிறுத்திவிட முடியும். இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் உட்கார்ந்து பேசி அரசியல் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்” என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்னைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

அதேபோல், “இனப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற ஆழ்ந்த நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

ஒன்றுபட்ட இலங்கையின் சட்ட திட்டத்தின்படி தமிழ்ச் சமுதாயம் உள்ளடக்கிய சிறுபான்மையினரின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும்” என்ற கருத்தை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நாடாளுமன்றத்தில் கடந்த 22-ம் தேதி கூறியுள்ளார்.

இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை அறிவித்து, பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என வலியுறுத்தியே தமிழக அரசின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரின் கருத்துகள் அந்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளன.

அந்தக் கருத்துகளை நடைமுறைப்படுத்தக்கூடிய தவிர்க்க முடியாத பொறுப்பும், கடமையும் இலங்கை அரசுக்கு உள்ளது. அதனை இந்திய அரசு, இலங்கை அரசுக்கு உணர்த்தி, செயல்படச் செய்வது அவசர, அவசியத் தேவையாகும்.