சாதிப் பேயின் கோரத்தாண்டவம் !!!!

எங்கோ எதிரிகள் மண்ணாகிப்போயினர் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற வாக்கிற்கிணங்க , மொத்தத் தமிழினமும் இலங்கைப்பிரச்சினை கண்டு தமிழர்கள் எனும் மாபெரும் இனமாய் தமது உரிமைகளுக்கு போராட வேண்டிய , போராடிக்கொண்டிருக்கிற ஒரு சூழலில் மொத்த தமிழினத்திற்கும் ஒரு அவமானமாய் சட்டக்கல்லூரியில் ஒரு கோர சம்பவம் நடை பெற்றிருக்கிறது…

படித்த அறிவு ஜீவிக்கள் கூட எங்கோ ஒரு மூலையில் சில கிராமங்களில் படிக்காத பாமர மக்களும் , கிராமத்து பெரிசுகளும்தான் சாதியை வளர்க்கின்றனர் என்று குற்றம் சாட்டினர்…….நகரங்களில் சாதீய விழுதுகள் பட்டுப்போயின…”தலித்”தும் மேல்சாதி யும் என்ற வேறுபாடின்றி அனைவரும் ஒரீடத்திலே கல்வி கற்கின்ற ஒரு மாபெரும் மாற்றம் வந்தே விட்டது என்ற புள்ளி விவரங்கள் நம்மை புல்லரிக்க வைத்தன…..

ஆனால் , சாதீயம் , தமது கோரப்பற்களின் பிடியில் இந்தச் சமூகத்தை கூறு போட எப்போதும் காத்திருக்கின்றது என்பதையே படித்த கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதல் தெளிவாக்குகின்றது……இந்து மதமென்னும் அசுர ஆட்சியின் கொள்கையான வருணாசிரமத்தை அடியொற்றி பிறப்பெடுத்த இந்தச் சாதிப் பேய் இன்றும் தனது பிடியை தளர்த்திக்கொள்வதாயில்லை…

இத்தகைய நிகழ்வுகள் , இன்றைக்கு நமக்கு பகுத்தறிவின் தேவையை மீண்டும் , மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன…..பெரியாரின் கனவான சமத்துவச் சமுதாயமே இதற்கான மருந்து…….மனிதனை சாதியாகவும் , மதமாகவும் பிரித்துப் பார்ப்பதே இச்சமூக அவலத்திற்கு காரணமென்பதையும் மிகப்பலர் ஒத்துக்கொள்வர்…..

இன்றைக்கு சட்டக்கல்லூரி சம்பவம் ஏதோ இரு பிரிவுகளுக்குள் நடக்கும் ஒரு விடயம் என்று மோலோட்டமாக பார்ப்போமானால் நம்மை விட முட்டாள்கள் யாருமே இருக்க  முடியாது…சொல்லப்போனால் இன்றைய அவலத்தை விமர்சித்து காவலர் சும்மா இருந்தனரே என்று உணர்ச்சி பொங்கப் பேசுபவர்கள் பலருக்கும் தமது அடிமனதில் குடியிருக்கும் சாதிப்பற்றை விடுவதற்கு மனசிருக்காது…….

அப்படி காவலர்களின் அலட்சியத்தை சுட்டிக்காட்டிப்பேசுபவர்கள் , கொஞ்ச காலத்துக்கு முன் கல்லூரி மாணவர்களை கொடுமையாக தாக்கியதாக போலிசார் இடை நீக்கம் செய்யப்பட்டதை மறந்துவிட முடியாது…. இது போன்ற சாதிப்பிரச்சினைகளில் தமக்கு அரசியல் ஆதாயம் தேட முயல்பவர்களை மக்கள் இனம் கண்டு ஒதுக்க வேண்டும்…

இத்தகைய நிகழ்வுகளில் தகுந்தவாறு செயல்பட போலீ்சாருக்கு தக்க சுதந்திரம் தரப்பட வேண்டும்…பிறகே சட்டம் ஒழுங்கைப் பற்றிய கேள்விகள் போலீசாரை நோக்கிப்பாய வேண்டும்!!!! அதை விடுத்து எங்கே என்ன நடந்தாலும் போலிசாரையும் , ஆளும் அரசாங்கததையும் குற்றஞ்சாட்டுவதென்பது பத்திரிகைகளுக்கு தங்கள் பக்கத்தை நிரப்ப வேண்டுமானால் நிரப்ப உதவி செய்யலாமே ஒழிய பிரச்சினை தீர எவ்வகையிலும் உதவாது!!!!!

இத்தகைய மோதல்களின் ஆணி வேரான சாதியை ஒழிப்பதுவும் , சாதியென்னும் விஷச்செடி துளிர்விட தூபம் போட்ட மதத்தைப் புறக்கணிப்பதுவும் , இதுபோன்ற பிரச்சினைகளில் கூட அரசியல் ஆதாயம் தேட முயலும் சமூகத்தின் மிகக் கேவலமான அரசியல் வாதிகளை புறக்கணிப்பதுவுமே இவ்வாறான மோதல்களுக்கான நீண்ட காலத் தீர்வாகும்!!

தந்தை பெரியார் வார்த்தெடுத்த சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்த பகுத்தறிவாளர்களின் தேவை இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளதையே இச்சம்பவம் உறுதிப்படுத்துக்கின்றது….

தலைவர் கலைஞரே ,

உம்மை விட இச்சுயமரியாதை இயக்கத்திற்கு தலைமையேற்க பொருத்தமானவர் எவருண்டு?????

ஆட்சியை இளைய தலைமுறை கையில் ஒப்படைத்து விட்டு , நமது பகுத்தறிவுப் பயணததை புதிய உத்வேகத்துடன் உமது தலைமையில் தொடர வேண்டும் என்பதே எம் போன்ற உடன்பிறப்புகளின் வேண்டுகோள்….!!!!!

அதுவே , இத்தமிழ்சமுதாயம் தனது வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஒன்றிணைய ஒரே வழி……

அவ்வொற்றுமையே , தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஒரே முதலீடு !!!!!!!!

Advertisements