ஈழம் – கலைஞர் தடுமாற்றமா?

இங்கே ஈழத்தின் பால் அக்கறை காட்டும் தமிழுணர்வாளர்களில் மிகப்பலர் , ஈழப்பிரச்சினையில் கலைஞர் தடுமாற்றத்துடன் கருத்துக்களை தெரிவிப்பதாக கருதுகிறார்கள்….ஒரு வகையில் அவரது நிலைப்பாடும் அவ்வாறு கருதுவதாகவே இருந்து வந்திருக்கிறது….

ஆனால் உண்மை நிலை என்ன???

கலைஞரது தமிழுணர்வையும் , அவரது ஈழத்தின் பாலான அக்கறையையும் சந்தேகப்படுவதென்பது மிகப்பெரிய முட்டாள்தனம்..!! ஆகவே , அவ்வாறான வாதங்களை வைப்போர் , கலைஞரின் அரசியல் எதிர்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி , அவர்களுக்கு நாம் பதிலும் சொல்லத் தேவையில்லை.ஆனால் , கலைஞரின் நிலையில் குழப்பங்கொண்டு , ஏன் இவ்வாறாக அவர் செயல்படுகிறார் என்ற ஆதங்கத்துடன் தமது கருத்துக்களை வைப்போரின் சந்தேகத்தை தீர்க்கும் முகமாகவே இப்பதிவினை நாம் எழுதுகின்றோம்!

எந்தவொரு கட்சிக்கும் அரசியல் அதிகாரம் முக்கியம்…..இன்றைய சூழலில் புதிதாக கட்சி ஆரம்பிக்கும் பலரும் கூட முதலமைச்சர் கனவிலேயே ஆரம்பிக்கிறார்கள் என்பது கண்கூடு…மறுக்க முடியாத உண்மையுங் கூட…..

ஆக , தமது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் , அதுவும் இன்றைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியும் , தென் இந்தியாவில் நிலவும் தற்போதைக்கு சரி செய்யமுடியாத மின்வெட்டுக்களும் சூழந்த ஒரு சூழலில் தேர்தலில் ஈழத்துக்காக பதவி துறந்தால் , கழகம் மீண்டும் ஆட்சிக்கு வருமா என்பது சந்தேகம்தான்!!! இதுதான் உண்மை , இதைச்சொல்ல நமக்கு தயக்கமேதுமில்லை…கழகப்பொருளாளர் கூட அதே கருத்தைதன் சொல்லியிருக்கிறார்…

ஆக , ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதென்பது எவ்வளவு முக்கியமோ , அதே அளவிற்கு காங்கிரஸுக்கு மத்திய ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதென்பது முக்கியம் , ஆனால் இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் மத்திய ஆட்சியை பற்றிய பெரியதொரு கவலை இல்லை அவர்களுக்கு , இங்கே நிலை தலைகீழ்!!!!! காங்கிரஸை நம்பியே கழக் ஆட்சி இருப்பது கண்கூடு!!

அப்படிப்பட்ட சூழலில் , திரு.பழ நெடுமாறன் அவர்களுக்கோ , திரு.வைகோ அவர்களுக்கோ , திரு.திருமாவளவன் அவர்களுக்கோ , இல்லாத நெருக்கடி அல்லது பொருந்தாத சூழல் கலைஞருக்கு இருக்கிறது……அதனால் பழ.நெடுமாறன் போன்ற தமிழுணர்வாளர்களின் செயல்பாட்டையும் , ஆட்சியில் இருக்கும் கலைஞரின் செயல்பாட்டையும் ஒப்பிடுவதென்பது முட்டாள்தனம்…

ஆனால் , கலைஞரின் தமிழுணர்வின் பால் நம்பிக்கை கொண்ட பலரும் கூட , நெடுமாறனைப்போல கலைஞர் செயல்பட மாட்டேன் என்கிறாரே என்ற ஆதங்கத்தில் தான் கலைஞரை குறை கூறுகிறார்கள்..

ஆகவே தவறான ஒப்பீட்டின் பால் கலைஞரை குறைகூறுபவர்களுக்கு சில கேள்விகள்…

இன்றைய சூழலில் கழக ஆட்சி இல்லாது போனால் , ஒரு வேளை ஜெயலலிதா ஆட்சி மலருமானால் கருத்து சுதந்திரம் காணாமல் போய்விடும்….அதைத் தான் விரும்புகிறீர்களா??

இன்றைக்கு நாடாளுமன்ற எம்பிக்களை ராஜினாமா செய்வதால் யாருக்கு நட்டம்?? தமிழகத்துக்குத் தானே???? ஒரு வேளை ராஜினாமா செய்தபின் , காங்கிரஸ் தமிழகத்தில் ஆதரவை விலக்கி அதனால் திமுக ஆட்சியும் கவிழ்வதைத்தான் விரும்புகிறோமா????

( இங்கே குறிப்பிட வேண்டியது – அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஏன் கலைஞர் இதை நினைக்கவில்லை என்று – அன்றைய நிலை வேறு , காங்கிரஸும் கூட தீர்மானத்தை ஆதரித்தது , பிறகு அந்தர் பல்டி அடித்தது…அதனால் அனறைய சூழலும் ,இன்றைய சூழலும் வேறுவேறுதானதொரு சூழலில் இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிடுதல் இமாலயத் தவறு)

இக்கேள்விகளுக்கு பதில் கண்டோமானால் , கலைஞர் ஈழப்பிரச்சினையில் தடுமாறவில்லை…தெளிவான கொள்கையுடனே இருக்கிறார்……..ஆனால் தமிழின எதிர்கள் தான் அவர் தடுமாறுவதாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவுற விளங்கும்!!!

ஆகவெ , அவர் தடுமாறவும் இல்லை , தடுமாறவும் மாட்டார் என்பதைத்தான் அவரது சீரிய செயல்பாடுகளும் , மென்மையான அணுகுமுறைகளும் காட்டுகின்றன…

அவரது புலிகளின் நிலைப்பாடு பற்றிய கேள்விகளுக்கு புலிகளும் பதிலளித்துவிட்டார்கள் , அதன்பின்னர் கலைஞரும் போர்நிறுத்தம்தான் தேவை என்ற தொனியில் மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறார்…

நல்லதொரு தீர்வு கலைஞரால் கிடைக்குமென்ற நம்பிக்கையில் நாம் கலைஞர் கரத்தை வலுப்படுத்துவோம்!!!

வாழ்க தமிழ்மொழி , வாழ்க திமுக , வளர்க கலைஞர் புகழ்!!

11 Comments

  1. முன்பு வங்கதேசம் பற்றிச் சொன்னார்.

    பின்னால் உளநாட்டுச்சிக்கல்…. ஓரளவு தான் முடியும் …. என்றார்!

    ஈழத்தில் இனமழிய, காக்க முடியாவிட்டால், இந்த ஆட்சி எதற்காக என்றார், முன்பு.

    13நாளைக்குப் பின், ஆட்சியை இழக்க விருப்பமில்லை என்றார்!

    முதலில் போர் நிறுத்தம் என்றார், முன்பு.

    தொடர்பே இல்லாமல், சகோதரப்போர் என்று பிதற்றினார் பின்பு!

    நெடுமாறன் திரட்டிய உணவையும் மருந்தையும் அனுப்ப தில்லி இசைவு தராத போது கண்டு கொள்ளவே இல்லை.

    இப்போது யார் வழியாக ஈழத் தமிழர்க்குச் சென்றடையும் என்று உறுதியாகவும் தெளிவாகவும் தெரியாத நிலையில் இன்று வரை 20 கோடிக்கும் மேல் திரட்டியிருக்கிறார்!

    உடனே போர்நிறுத்தமென தீர்மானம் போட்டார்.

    40 ஆண்டு…4 நாள் என்று பிணாப்பின் பிதற்றலைக் கிளிப்பிள்ளையாகச் செல்லத் தொடங்கி விடார், பின்பு!

    இப்படி இன்னும் பலவற்றைப் பட்டியலிட முடியும்.

    நீங்கள் என்ன உண்மையை ஒப்புக்கொள்ளவா போகிறீர்கள்?

  2. உங்கள் நகைச்சுவை உணர்வின் விகிதாச்சாரம் திடீரென இப்பதிவில் கூடிவிட்டது . காங்கிரசுடன் கடுமையான போக்கை கையாண்டு ஆட்சியை இழந்தால் மீண்டும் வர முடியாது எனில் தமிழகத்தில் ஈழ ஆதரவு இல்லை என்று அர்த்தம் அல்லவா? ஆதரவு இல்லாத நிலையில் இவ்விஷயத்தை பற்றிய பேச்செதற்கு? தமிழக மக்கள் மட்டும் வாழ்வாங்கு வாழ தொடர்ந்து உழைப்பதில் தம்மை அர்ப்பணித்து கொள்ளலாமே! :-))))))

    அதிகாரம் மட்டுமே வேண்டுமென்றால் ஒக்கேனக்கல் திட்டத்திற்கு எதிராக அரசியல் செய்து பெங்களூரில் நான்கு சீட்டுகள் வாங்கலாம்! ஈழப்போராட்டத்தை எதிர்த்தால் இலங்கையில் கூட நான்கு எம்.பி சீட்டுகள் வாங்கலாம் ! ஏதேனும் உத்தேசம் இருக்கின்றதா?

    • //தமிழக மக்கள் மட்டும் வாழ்வாங்கு வாங்கு…// அதைத்தானே இங்கு இருக்கும் மக்களும் விரும்புவார்கள்…தமிழக மக்களின் வாக்கும் அதற்காகத்தானே அளிக்கப்பட்டது. அதை புறந்தள்ளுவது மக்களை ஏமாற்றுவது.

      இலங்கையில் ஈழ மக்கள் கட்சியே அங்கே ஆளுங்கட்சியில் கூட்டணி வைத்து கொண்டு அமைச்சரவையிலும் இருக்கும் பொழுது கடல் தாண்டி தமிழகத்தில் இருக்கும் கட்சிகளை மட்டும் குறிவைப்பதென்ன?

      ஈழம் யார்? யார் ? குரல் கொடுக்கவேண்டும்….யார் யார் ஆதரவு தரவேண்டும்..? என்ற பட்டியல் வரையறுக்கப்பட்டுள்ளதா?

      முதலில் இதற்கு இலங்கையில் ஒட்டுமொத்த ஆதரவு இருக்கிறதா? 100 சதவீத தமிழ் மக்களும் இதறகு ஆதரவு தெரிவித்திருக்கிறார்களா..? அப்படி தெரிவித்திருந்தால் தேர்தலில் வாக்களித்திருக்க மாட்டர்களே!. ராஜ பக்சேவுக்கும், பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கமாட்டார்களே! டக்ளஸ் தேவனந்தாவை அமைச்சரவையில் அமர்த்தியிருக்கமாட்டார்களே…அதற்கு ஆயிரம் காரணங்கள் கூறினாலும் மக்கள் செல்வாக்கு இல்லாமல் எப்படி முடியும்…?

      ஈழம் குறித்து குரல் கொடுப்பவர்கள் யார்…டெலோவா..? இசுலாமிய்த தமிழ்ரகளா? அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் கட்சியினரா..? இல்லை கருணாவா..? இல்லை இலங்கை ராணுவத்திலும், அரசாங்கத்திலும் பணிபுரியும் இலங்கைத் தமிழர்களா? யார் குரல் கொடுப்பது அவர்கள் எத்தனை சதவீதம்…? அந்த சதவீத்தஃதை தவிர மற்றவர்களுக்கு ஈழம் பற்றி அக்கறை இல்லையா? அவ்வளவு அதிகமான எதிர்ப்பா?

      அங்கேயே இதற்கான முழு ஆதரவையும் திரட்ட முடியவில்லையே ! இங்கு மட்டும் ஆதரவை எப்படி திரட்ட முடியும்…அங்கு எப்படி அவர்கள் வாழ்வாதாரத்தை பார்க்கிறார்களோ அதே போன்று இங்குள்ள அதிக எண்ணைக்கை கொண்ட தமிழ் மக்கள் அவர்கள் வாழ்வாதாரத்தை பார்ப்பது மட்டும் எப்படி தவறாகும்.?

      இங்கு ஈழம் தான் வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரும் ஒரணியிலா நிற்கிறார்களளா..? அதை புறந்தள்ளி விட்டு கலைஞர் இருந்து விட்டாரா?

      இங்குள்ளவர்களை கவனிக்காமல் அங்கேயே அதற்கு ஆதரவு இல்லை என்ற நிலையில் இவர் ஏன் கையில் எடுத்து கொண்டு ஆட்சியை இழக்க வேண்டும் என்ற குரல்கள் தான் மக்கிளிடையே கடந்த பலவருடங்களாகவே ஒலிக்கின்றன. ஏற்கனவே ஒலித்த குரல்களும் இம்மாதிரி குரல்களே….

      ஈழமக்கள் பிரச்சினை இங்குள்ள அரசியலை பாதிப்பதில்லை என்று ஏற்கனவே தமிழோசையில் மக்களிடமே கருத்து கேட்டு வெளியிடப்பட்டுள்ளதை காணலாம். எப்போதுமே இங்குள்ளவர்கள் பிரச்சினை தான் முக்கியம் அதற்கு பிறகு தான் ஈழம். இது என்றைக்குமே மாறாது. என்ன எதிராக செயல்பட்டாலும் மாறாது. எந்த அரசியல் கட்சியும் இதை மீறி தீர்வு கண்டுவிடாது. மக்கள் செல்வாக்கை விரும்புகிறவர்கள் இதை மீறமாட்டார்கள். தேர்தலில் பங்கு பெறாதவர்கள் இதை மட்டுமே கையெலெடுப்பார்கள். மற்றவர்கள் உணர்வுபூர்வமாக மட்டுமே கையிலெடுக்க முடியும்.

  3. முன்பு வங்கதேசம் பற்றிச் சொன்னார்.

    பின்னால் உளநாட்டுச்சிக்கல்…. ஓரளவு தான் முடியும் …. என்றார்!

    ஈழத்தில் இனமழிய, காக்க முடியாவிட்டால், இந்த ஆட்சி எதற்காக என்றார், முன்பு.

    13நாளைக்குப் பின், ஆட்சியை இழக்க விருப்பமில்லை என்றார்!///

    நீங்கள் மீண்டும் அன்று , இன்று என்ற கம்பேரிசனுக்கு போய் விட்டீர்கள் ,அதற்குத்தான் பதிவிலியே பதில் கொடுத்திருக்கிறேன்..!!!!!!!

    மீண்டும் உங்களுக்காக ஒரு முறை!!!

    ///////
    ( இங்கே குறிப்பிட வேண்டியது – அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஏன் கலைஞர் இதை நினைக்கவில்லை என்று – அன்றைய நிலை வேறு , காங்கிரஸும் கூட தீர்மானத்தை ஆதரித்தது , பிறகு அந்தர் பல்டி அடித்தது…அதனால் அனறைய சூழலும் ,இன்றைய சூழலும் வேறுவேறுதானதொரு சூழலில் இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிடுதல் இமாலயத் தவறு)

    ///////

  4. நெடுமாறன் திரட்டிய உணவையும் மருந்தையும் அனுப்ப தில்லி இசைவு தராத போது கண்டு கொள்ளவே இல்லை.

    இப்போது யார் வழியாக ஈழத் தமிழர்க்குச் சென்றடையும் என்று உறுதியாகவும் தெளிவாகவும் தெரியாத நிலையில் இன்று வரை 20 கோடிக்கும் மேல் திரட்டியிருக்கிறார்!

    உடனே போர்நிறுத்தமென தீர்மானம் போட்டார்.///

    நெடுமாறன் திரட்டிய போது கலைஞர் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் உங்கள் பிரச்சினையா இல்லை இலங்கைத் தமிழர்க்கு உதவிகள் போய் சேருவதில்லை / சேரவில்லை என்பது உங்கள் பிரச்சினையா என்று தெளிவு படுத்தினால் கண்டிப்பாக உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன்..

  5. நீங்கள் என்ன உண்மையை ஒப்புக்கொள்ளவா போகிறீர்கள்?////

    நீங்களாக ஒரு விடயத்தை கற்பனை செய்துகொண்டு , அதை உண்மையெனவும் கற்பித்துக்கொண்டு அதை நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டுவது எவ்விதத்தில் நியாயம் தலைவரே???

    தவிர்த்த , ஒரு விடயத்தை பற்றி மாற்றுக்கருத்துள்ளோரிடமும் விவாதித்து அதன்பின்னர் உண்மையா பொய்யா என்ற முடிவிற்கு வருவதே விவேகமான முடிவு….

    ஆனால் நீங்கள் நினைப்பதுதான் உண்மை என்ற முடிவிற்கு வந்தபிறகு , பிறகென்ன விவாதம்?

  6. உங்கள் நகைச்சுவை உணர்வின் விகிதாச்சாரம் திடீரென இப்பதிவில் கூடிவிட்டது . காங்கிரசுடன் கடுமையான போக்கை கையாண்டு ஆட்சியை இழந்தால் மீண்டும் வர முடியாது எனில் தமிழகத்தில் ஈழ ஆதரவு இல்லை என்று அர்த்தம் அல்லவா? ஆதரவு இல்லாத நிலையில் இவ்விஷயத்தை பற்றிய பேச்செதற்கு? தமிழக மக்கள் மட்டும் வாழ்வாங்கு வாழ தொடர்ந்து உழைப்பதில் தம்மை அர்ப்பணித்து கொள்ளலாமே! :-))))))

    ///

    அப்படி ஒரு நிலை வரவேண்டும் என்ற உங்களின் விருப்பம் நிறைவேற தலைவர் என்றுமே ஒத்துழைக்க மாட்டார்….

    இன்றைக்கு , தமிழகத்திலும் , இந்தியாவிலும் , உலகளாவிய முறையிலும் ஏற்பட்டுள்ள எந்த சிக்கலையுமே இது தமிழக அரசு சம்பந்தப்பட்ட விடயமல்ல என்று பிரித்துப் பார்க்கும் அளவிற்கு இன்னும் தமிழக மக்கள் தெளிவு பெறவில்லை என்பதுதான் உண்மை…….

    நல்லவர் யார் , கெட்டவர் யார் என்று பிரித்துப்பார்க்கும் முழுத் தெளிவு இன்னும் தமிழக மக்களுக்கு ஏற்பட வில்லை என்பதைத்தான் இன்னும் இருக்கும் செயலலிதாவிற்கான செல்வாக்கும் , வளரும் விஜயகாந்த்தின் செல்வாக்கும் உறுதிப்படுத்துகிறது…

    வெளி எதிரிகளை விட இவர்கள் ஆபத்தானவர்கள்…அத்தகையவர்களிடமிருந்து , இன்னும் முதிர்ச்சி அடையாத ஒரு சமூகத்தை அனாதரவாக விட்டுச் செல்ல திமுகழகம் என்றுமே விரும்பாது….!!!!!!!

    தமிழக மக்களை முன்னேற்றும் பாதையில் தொடர்ந்து ஈடுபடும்!!!!

    அதில் வெற்றியும் காணும்!!!

  7. The Tigers have the habit of sending trial balloons. A few days ago, LTTE indicated its willingness to consider a ceasefire. The government promptly rejected the offer reiterating its position that no truce was possible unless the LTTE gave up arms.

    The LTTE does not lose anything due to its ceasefire offers. Instead it gains a lot from them. If the government reciprocates, then it can have some respite, regroup and rearm for the next phase of war. Else, its propagandists can project the government as a hawkish regime not amenable to a truce and blame it for the humanitarian problems resulting from the continuation of war.

    However, the government has no alternative but to turn down such offers without falling into ceasefire traps. Every government that fell for the tigrine wiles emerged from peace traps with a bloody nose. The disastrous outcome of peace deals that President Premadasa and President Kumaratunga tried to strike with the LTTE is a case in point.

    The LTTE’s latest truce ploy was aimed at preventing the fall of Pooneryn to the army and saving Kilinochchi. In a recent interview with an Indian magazine Prabhakaran bragged that Kilinochchi would never fall. But, he himself is aware that he cannot hold out for a long time. The new front the army is going to open in the Wanni is a frightening proposition for the LTTE already overstretched and affected by a severe shortage of manpower.

    Immediately after the government’s rejection of the truce offer, the LTTE, perhaps to save its face and prevent demoralisation of its cadres, got one of its proxies to say in Parliament that it would not lay down arms. Talking with a forked tongue is the LTTE’s forte. It has a remarkable ability to send two different messages to its support base and the international community simultaneously.

    War is hell and it must end. The sooner, the better! But, experience shows us that no amount of ceasefires will lead to peace so long as the LTTE remains strong and intransigent. The last truce lasted for five years from 2002 to 2007 but nothing came of it. There was an absence of war but the LTTE did not desist from violence or work towards finding a solution. It used the fragile truce to replenish its supplies, recruit more combatants and gain legitimacy. In 2003, it walked away from peace talks with the UNF government, which to its credit, bent over backwards to keep the peace process on track. It is being claimed that an LTTE-instigated polls boycott brought about UNP leader Ranil Wickremesinghe’s defeat at the last presidential election. But, it was actually in 2003 that the LTTE destroyed the UNP leader’s political future by scuttling the peace process, upon which he was banking to win the presidency.

    The LTTE may offer to consider ceasefires and talk peace but Prabhakaran has unequivocally told the world the solution he has in mind. He won’t settle for anything less than Eelam as he declared at a press conference in Kilinochchi in 2002. Asked if his order to his cadres to kill him if he accepted anything less than Eelam was still valid, he had no hesitation whatsoever in answering in the affirmative. In fact, he renewed that order! He has never ever given the slightest indication that he would settle for anything else.

    One may argue that the LTTE made the setting up of an interim self-governing administration (ISGA) conditional to returning to the negotiating table in 2003. Yes, it did but the UNF government had the wisdom to avoid that trap. For, granting an ISGA would have been as good as giving Eelam. Among the critics of the ISGA was none other than the US Deputy Secretary of State Richard Armitage, who said the ISGA went beyond all known forms of federalism and it was therefore without a precedent.

    The LTTE demand read: “The ISGA shall have plenary powers for the governance of the Northeast including powers in relation to resettlement, rehabilitation, and development, including improvement and upgrading of existing services and facilities, raising revenue including imposition of taxes, revenue, levies and duties, law and order and land.” Besides, the LTTE asked for powers in respect of maritime resources and direct foreign aid.

    What more would the LTTE have needed if it had got the ISGA?

    Armitage urged the LTTE to adhere to the Oslo declaration, which envisaged a federal solution. The European Parliament, it may be recalled, in its resolution on Sri Lanka on Sep.08, 2006 said: “[The EU] condemns the intransigence of the LTTE leadership over the years, which has successively rejected so many possible ways forward including devolution at the provincial level or Provincial Councils; devolution at the regional level or Regional Councils; as well as the concept of federalism with devolution at the national level.”

    Thus, if any government agrees to a ceasefire with a view to talking peace with the LTTE, it must be prepared either to be taken for a ride like its predecessors or to grant the ISGA, which is nothing but a halfway house between federalism and Eelam.

    There have been calls for the government to do as the EU says to retain the GSP Plus concession. Similarly, the government should be asked to heed what the aforesaid EU Parliament resolution says about the LTTE, in trying to evolve a political solution. In other words, it is futile to talk to the LTTE so long as it remains intransigent demanding something that goes beyond federalism.

    So, if a political solution acceptable to all stakeholders is to be evolved through negotiations, then the international community and the peace lobby must wean the LTTE from violence, the ISGA and Eelam.

    Or, they must stop protesting against the on-going efforts to neutralise the LTTE and pave the way for a political solution.

    Courtesy: The Island

  8. A good explanation….but if i put in different words in short u r saying
    DMK just wanted power and it doesn’t care about Tamil Eelam
    Karunanidhi doesn’t have the qualities of a leader but since Jayalalitha is worse than him…he is the best.
    But one thing is sure… Karunanidhi is not wavering on Eelam issue….This is the first time his “Tamil unarvu” was put to test becoz this is the first time the ball was in his court.
    Guess what… u know the result for selfish reason he gave up on eelam .
    நாயை விட கேவலமாய் காங்கிரசை நக்கி பிழைக்கிறது திமுக

    – A disappointed tamilian

    • This comment seems to be comment of an ordinary Indian politician.Can anybody establish or prove by means of a precedent that Karunanith’s quit from power will create the Tamil Eelam in Srilanka. It is not only Congress in India but also the AIADMK blatantly opposed the fighting Tamils In Srlanka. But since 1956 Karunanithy is standing as a pleader for the Tamils in Eelam. It is only Jeyalalith who crushed “Tamil Unarvu” during her days in power.The people who are now passing comments were remained silent spectators. Let them go to he back pages of history.

  9. I am having a strong confidence that only Dr. Kalaignar can assist to achieve the goals of Srilankann Tamils. The shouting Masters in Tamil Nadu now standing in the shadow of Miss. J. Jeyalalitha have no right to speak about the Tamils in Elam. It is thanks to Dr.Kalignar the attention of the international community was drawn towards this issue. Every one blaming Dr.Kalaignar is trying to harvest some political benefit. My prayer to those who are playing politics at the cost of the life of Srilankan Tamils, is, please do not taint the noble causes of our blood related people. Silly comments against Dr. Kalaignar is nothing but a crooked attempt to split the Tamils only to favour the rivals in the fray.


Comments RSS TrackBack Identifier URI

Leave a reply to Mohan Kandasamy Cancel reply