சந்தர்ப்பவாத கம்யூனிஸ்டுகளுக்கா உங்கள் ஓட்டு ?

கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கு காங்கிரஸ் எதிரி. ? நேற்றுவரை மத்தியில் காங்கிரசுடன் கூட்டு…! இன்று காங்கிரசுக்கு எதிரி.

மதவாதத்தை எதிர்ப்போம். பிஜேபியை ஆட்சிக்கு வர விட மாட்டோம் என்ற முழக்கம். பிஜேபி ஆளும் மாநிலங்களில் கூட கொண்டு வரத் தயங்கிய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்த அதிமுகவுடன் தமிழகத்தில் கூட்டு…..!

தொழிலாளர் வர்க்கத்திற்காக அனுதினமும் பாடு படுவோம் என்று சொல்லும் கம்யூனிஸ்டுகள் கொஞ்சம் பக்கங்களை பின்னோக்கி புரட்டிப் பார்க்கட்டுமே.

ஒரே கையெழுத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது யார் ?

லாபம் இல்லை , அதனால் போனஸ் இல்லை என்று போக்குவரத்து ஊழியர்களை அலைக்கழித்தது யார் ?

இதே அதிமுக தானே ?

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் கம்யூனிஸ்டுகளே , சேது சமுத்திரத் திட்டம் தேவை என்று அனுதினமும் நீங்கள் குரல் கொடுக்கவில்லையா ?  காங்கிரசு அரசு அதைத் தாமதப்படுத்துகிறது என்று குறை சொல்லவில்லையா ?

இதே அதிமுக இன்று என்ன சொல்கிறது. ?

சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவோம் என்று சொல்கிறது…..அதைப் பற்றீ எதுவுமே பேசாமல் இருப்பது சந்தர்ப்பவாதம் அன்றி வேறென்ன. ?

அடுத்தது ஈழம் …..

மதிப்பிற்குரிய தா.பாண்டியன் அவர்களே , வரதராசன் அவர்களே…….

நீங்கள் ஈழத் தமிழர்களின் நன்மை கருதியா அதிமுகவுடன் கூட்டுப் போட்டீர்கள்? நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி சேரும் போது அதிமுகவின் நிலை என்ன ?

இலங்கையில் ஒற்றையாட்சி முறை. விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள். தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய இரங்கல் கடிதம் கூட இறையாண்மைக்கு எதிரானது. பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும், போர் நடக்கும் போது சில தமிழர்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ராஜபக்சேவே சொல்லத்தயங்கியவற்றை எல்லாம் வெளிப்படையாகப் பேசியவர் தானே புரட்சித் தலைவி அவர்கள்?

இன்று அவர் ஈழத்துக்கு குரல் கொடுப்பது நாடகமில்லையென்றும் , கருணாநிதிதான் நாடகம் நடத்துகிறார் என்றும் சொல்வது என்ன நியாயம் ?

சரி , மூன்றாவது அணியில் இந்திய அளவில் பெரிய கட்சி மார்க்சிஸ்டு.

நாளை ஒருவேளை மூன்றாவது அணி ஆட்சியமைக்குமானால் , மார்க்சிஸ்டு அதற்கு தலைமையேற்குமானால் மார்க்சிஸ்டுகளின் ஈழ நிலை என்ன ?

ஒற்றையாட்சிக்குட்பட்ட இலங்கை. தனி ஈழம் கோருவது தவறு ….அதுதானே மார்க்சிஸ்டுகளின் நிலை….? இதுதானே இ.கம்யூவின் நிலையும் கூட ? இன்றும் கூட கம்யூனிஸ்டுகள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளவில்லையே ? ஆட்சிக்கு வந்தால் மட்டும் எப்படி திடீரென்று தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளப்போகிறார்கள் ?. இவர்கள் அனைவரும் இணைந்த கூட்டரசு எப்படி இலங்கைப் பிரச்சினையில் ஒத்த கருத்தைக் கொண்டு வந்து தமிழீழம் அமைக்கப் போகிறார்கள் ?

தேர்தல் வரை எதையேனும் மக்களை ஏமாற்றுவதற்குத் தானே நீங்கள் ஈழத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்?? இதுதானே சந்தர்ப்பவாதம் ? இத்தகைய சந்தர்ப்பவாதக் கூட்டணிக்கா உங்கள் ஓட்டு ?

அது ஒருபுறமிருக்க , சீனாவின் சொல்படியே எப்போதும் நடக்கும் இந்த கம்யூனிஸ்டுகள் சீனாவின் முழு ஆதரவுடன் நடக்கும் இந்தப் போரையா இராணுவத்தை அனுப்பி நிறுத்தப் போகிறார்கள் ? இன்றுவரை மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கூற்றை அங்கீகரித்துப் பேசியிருக்கிறார்களா இவர்கள் ?

ஈழத்திற்கான ஆதரவு சத்தியமாக அவசரத் தேவைதான். ஆனால் , அவசரகதியில் ஓட்டுக்களைப் பெறுவதற்காகவே எழுப்பும் கோஷங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். அதன் பலனை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அனுபவிக்கப் போகிறவர்கள் நம்மை விட ஈழத்தமிழர்கள்தான்.
தமிழ் மக்களே………………………….சிந்தியுங்கள்.

20 Comments

  1. மைக் டெஸ்டிங்.

    மைக் டெஸ்டிங்.

    பின்னூட்ட டுபுரித்தனம்.

  2. மைக் டெஸ்டிங்.

    மைக் டெஸ்டிங்.

    பின்னூட்ட டுபுரித்தனம் – 2

  3. அருமை , அருமை ,

    கம்யூனிஸ்டு வேசம் கலைஞ்சு போச்சு. டும்டும்டும்.

  4. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி 15 வது மக்கள வைத் தேர்தலை நாடு தழுவிய அளவில் சந்திப்பதில்லை என்று முடிவெடுத்ததே. இது மாநிலத்திற்கு மாநிலம் சந்தர்ப்ப சூழ் நிலைகளுக்கு ஏற்பக் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வதற்கான தந்திர சாகசம் அல்லவா?
    2004 முதல் ஐந்தாண்டுக்காலம் மத் திய ஆட்சியில் ஏழு அமைச்சர்களைப் பெற்று பங்கு வகித்த கட்சி தி.மு.க. அப்படி யிருக்க, இந்தத் தேர்தலில் திமுக அறிக் கையிலேயே 2004இல் கொடுத்த வாக் குறுதிகளை அப்படியே மீண்டும் அச்சேற் றிக் கோரிக்கைகளை ‘வலியுறுத்துவோம், வலியுறுத்துவோம்’ என்று சொல்வதைத் தவிர, அந்தக் கோரிக்கைகளை திமுக இந்த ஐந்தாண்டுகளில் வலியுறுத்தவில்லை யா? அல்லது வலியுறுத்தியும் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் கண்டுகொள் ளவே இல்லையா? என்பதைத் தெளிவு படுத்துவீர்களா?
    ‘மத்திய அரசின் ஒட்டுமொத்த வரு வாயில் 50 சதவிகிதத்தை மாநிலங்களுக் கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான் தி.மு.கழகத்தின் நிலைப்பாடு. அதனைப் பெறுவதற்கான வழிவகைகளை திமுக வலியுறுத்தும்’ என்று 2004 தேர்தல் அறிக் கையில் திமுக கூறியிருந்தது. இப்போது 2009 தேர்தல் அறிக்கையில் மத்திய அர சின் ஒட்டுமொத்த வரி வருவாயில் 60 விழுக்காட்டை மாநிலங்களுக்குப் பகிர்ந்த ளிக்க வேண்டும் என்று திமுகவின் கோரிக் கையில்தான் ‘உயர்வு’ ஏற்பட்டுள்ளதே தவிர, இந்தப்பங்கு 1990-91 இல் 32.7 சதவிகிதமாக இருந்தது, 2004-05இல் 29.5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதுதானே உண்மை. இப்போது ‘ மீண்டும் வலியுறுத் துவோம்’ என்று கதையளப்பது தேர்தல் சாகசம் அல்லாமல் வேறென்ன?
    திமுகவின் கூட்டாளியான காங்கிரஸ் கட்சியின் 2009 தேர்தல் அறிக்கையில் ‘மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப் புகளின் நிதி ஆதாரங்கள் பலப்படுத்தப் படும்’ என்று பொத்தாம் பொதுவாகத் தெரி விக்கப்பட்டுள்ளதேயன்றி, மத்திய வரி வருவாயில் பங்குத் தொகை சதவிகிதத் தை உயர்த்துவது பற்றிய பேச்சே இல்லை என்பதை அறிவீர்களா?
    தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட் டது பற்றியே ஆரவாரமாக பேசி வருகிறீர் களே, 2004 தேர்தல் அறிக்கையில் தமிழ் மொழியை உடனடியாக மத்திய அரசு ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் என்று கூறியிருந்தது நினைவில் இருக்கிறதா? இதுகுறித்து ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசின் குறைந்த பட்ச பொதுத்திட்டத்தில் ‘அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற் றுள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்குவது பற்றிப் பரிசீலிக்க ஒரு குழு அமைக்கப்படும்’ என்று அறிவிக்கப் பட்டிருந்தும் கூட அதை திமுகவோ உங் கள் கட்சி அமைச்சர்களோ, எம்பிக்களோ ஒரு நாள் கூட வலியுறுத்தாதது ஏன்?
    “மாநிலக் கட்சிகளுக்கு தேசியக் கண்ணோட்டம் என்பதே கிடையாது; மாநி லக்கட்சிகள் வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக உள்ளன” என்று பிரதமர் மன்மோகன் சிங் இந்தத்தேர்தல் பிரச்சாரத்திலேயே பகிரங்க மாகக் குற்றம் சாட்டி வருகிறாரே, அந்தக் கட்சியின் ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று திமுக சொல்வது தந்திரமா, சாகசமா, தற்கொலையா?

    • “மாநிலக் கட்சிகளுக்கு தேசியக் கண்ணோட்டம் என்பதே கிடையாது; மாநி லக்கட்சிகள் வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக உள்ளன” என்று பிரதமர் மன்மோகன் சிங் இந்தத்தேர்தல் பிரச்சாரத்திலேயே பகிரங்க மாகக் குற்றம் சாட்டி வருகிறாரே, அந்தக் கட்சியின் ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று திமுக சொல்வது தந்திரமா, சாகசமா, தற்கொலையா?//

      நான் ஏதாவது சொல்வது இருக்கட்டும். மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு என்ற மேற்கு வங்க / திரிபுரா / கேரள மாநிலக் கட்சியின் நிலை என்ன ? ஏன் அவர்களை மாநிலக் கட்சிகள் என்று சொல்கிறேன் என்றால் “கடல்சார் பல்கலைக் கழக” விவாதத்தில் தனியொரு ஆளாக நின்று சென்னைக்கு கொண்டு வர அமைச்சர் டி.ஆர்.பாலு போராடியபோது மேற்கு வங்க எம்.பிக்களுடன் சேர்ந்து கல்கத்தாவுக்குத் தான் கடல்சார் பல்கலைக்கழகம் போக வேண்டும் என்று தமிழக கம்யூனிஸ்ட் எம்.பிக்களும் போராடிய கதை அறிந்ததால். !!

      • நண்பர் உதயசூரியன் அவர்கள் சொல்வது போல் தமிழக கம்யூனிஸ்ட் எம்பிகள் கல்கத்தாவுக்குத்தான் கடல்சார் பல்கலைகழகம் போக வேண்டும் போராடினார்கள் என்று கூறியிருப்பது எதை வைத்து சொல்கிறார் என்று தெரியவில்லை. அப்படி தமிழக கம்யூனிஸ்ட் எம்பிகள் போராடவில்லை.
        ஆனால் அணுசக்தி உடன்பாடு குறித்து கம்யூனிஸ்ட்கள் அச்சபடுவதில் நியாயம் உண்டு. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியவர் கலைஞர்தானே. இதை விட அதிகமாகவே என்டிடிவி யில் கொடுத்த பேட்டியில் கூறியிருந்தாரே. பின் எதற்காக நடாளுமன்றத்தில் அணு உடன் பாட்டை ஆதரித்து பேசியது. ஏன் ஆதரித்து வாக்களித்தது கதை உலகிற்கே தெரியுமே. அணுசக்தி உடன்பாடு என்பது காங் கிரசுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சனை அல்ல. தேசத்தின் இறையாண்மையோ டும் சுயேட்சையான அயல்துறை கொள் கையோடும் தொடர்புடைய ஒன்று எனவேதான் அந்த உடன்பாட்டை ஆதரிக்க கம்யூனிஸ்ட்டுகள் மறுத்தனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற முறையில் திமுகவுக்கும் இதில் முழு பொறுப்பு உண்டு. ஐந்தாண்டு ஆட்சியில் உடனிருந்து விட்டு, அனுபவிக்க வேண்டியதையெல் லாம் அனுபவித்துவிட்டு, பிரச்சனை யென்று வந்தால் அது காங்கிரஸ் ஆட்சி என்று ஒதுங்கிக் கொள்வது திமுகவுக்கும் அதன் தலைவர் கலைஞருக்கே ‘கை’ வந்த கலை என்று கூறலாமே!.

      • நண்பர் உதயசூரியன் அவர்கள் சொல்வது போல் தமிழக கம்யூனிஸ்ட் எம்பிகள் கல்கத்தாவுக்குத்தான் கடல்சார் பல்கலைகழகம் போக வேண்டும் போராடினார்கள் என்று கூறியிருப்பது எதை வைத்து சொல்கிறார் என்று தெரியவில்லை. அப்படி தமிழக கம்யூனிஸ்ட் எம்பிகள் போராடவில்லை…//

        நாடாளுமன்றத்தில் , கடல் சார் பல்கலைக்கழகத்தை கல்கத்தாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மேற்கு வங்க எம்.பிக்கள் போராடியபோது தமிழக கம்யூனிஸ்டு எம்.பிக்களும் ஒத்துழைத்தனர் என்பது வர்லாறு. அத்திட்டத்தை தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும் என்று வலியுறுத்தவே இல்லை. கேரள உறுப்பினர் தாமஸ் அவர்கள் கூட அப்பல்கலைக்கழகம் கொச்சிக்கு வேண்டுமென வலியுறுத்தியதாக செய்தி உண்டு.

      • அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியவர் கலைஞர்தானே. இதை விட அதிகமாகவே என்டிடிவி யில் கொடுத்த பேட்டியில் கூறியிருந்தாரே. பின் எதற்காக நடாளுமன்றத்தில் அணு உடன் பாட்டை ஆதரித்து பேசியது.//

        நண்பர் கண்ணன் , என் டி டிவிக்கு அளித்த பேட்டியில் கண்ணன் சொல்லியிருந்தது எல்லாம் – இப்போதைக்கு கூட்டணியும் , மதச்சார்பற்ற ஆட்சியும் தொடர வேண்டிய தேவையிருப்பதால் அணு சக்தி ஒப்பந்தத்தை பின்னுக்குத் தள்ளலாம் என்றுதான் என்பது எனது புரிதல்.

    • ஒரே முறையே எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடிந்தால் திடீர் சொர்க்கமாகிவிடும் இந்த நாடு.

      ஒருவேளை கம்யூனிஸ்டுகள் இந்த ஆட்சி எதுவுமே செய்யவில்லை என்று வாதிட்டால் ஏன் 4 வருடங்கள் இந்த ஆட்சியை ஆதரித்தார்கள் ?

      சரி , எதுவுமே செய்யவில்லை என்று சொன்னால் அதை வைத்து பிரச்சாரம் செய்வதை விட்டுவிட்டு ஏன் ஈழம் ஈழம் என்று அதன் பின்னால் செல்கிறார்கள்?

      அப்புறம் , போன முறை சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் இடதுசாரிகள் நிறைவேற்றி விட்டார்களா ? சேது சமுத்திரத் திட்டம் அவர்களுடைய வாக்குறுதிகளில் ஒன்றுதானே ? அதை நிறுத்துவோம் என்பவர்களுடன் கூட்டணி எதைக்காட்டுகிறது?

      • சேது சமுத்திர திட்டம் 100 ஆண்டு களுக்கு மேலாக பேசப்பட்டும், உருப்படியாக உருவாகவில்லை. இத்திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1981 ல் இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சி கொடுத்தது. இருப்பினும் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு திட்டத்திற்கான உரிய கவனத்தையும் முக்கியத்துவத்தையும் கொடுக்க வில்லை. (2007 அக்டோபர் 1ம் தேதி சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கருணா நிதி பேசியது)
        சேது சமுத்திர திட்டம் முடிவுற்றால் திமு கழகத்திற்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் புகழ் வந்து சேர்ந்து விடுமோ? என்றெண்ணி , அத்திட்டத்திற்கு முட்டுக் கட்டை போட்டார்கள். – கருணாநிதி (1.4.2009 தினத்தந்தி )
        எப்படியாவது காங்கிரசுக்கு முட்டுக் கொடுத்து, ஓட்டுக்களை வாங்கி மீண்டும் அமைச்சரவையில் ஒட்டிக் கொள்ள வேண் டும் என்ற ஆசை திமுகவிற்கு இருக்கிறது. இது அந்த கட்சியின் முடிவு. அதற்காக மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது சரியாக இருக்குமா?
        திமுகவிற்கும், காங்கிரசுக்கும் சேது சமுத் திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியான திராணி இருந்திருந்தால் நிறை வேறி இருக்கும். மதவெறியர்களுக்கு பயந்து பின்வாங்கியது யார் என்பதை பின்நோக்கி பார்த்தால் நன்கு புரியும். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்பார்களே அது தானே சேது சமுத்திர திட்டத்தில் நடந்தது.
        மதவெறியர்கள் குளிர்காய மணல் திட் டை ராமர்பாலம் என்று கூறி பிரச்சனையை கிளப்பினர். இது இட்டுகட்டிய பொய் என தெரிந்தும் காங்கிரஸ் தலைமையிலான அரசு அதனை கிடப்பில் போட என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தது. அந்த நேரத்தில்தான் தமிழகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் உடனே சேது சமுத்திர திட் டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. ஆனால் காங்கிரஸ் தலைமை அதற்கும் செவி சாய்க்கவில்லை.
        மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சேது திட்டம் குறித்து விவாதிக்கையில் அமைச்சர் அம்பிகா சோனி வெளிநடப்பு செய்தார். பிரணாப்முகர்ஜி தொலைபேசி மூலம் சமாதனம் செய்தார் என்றெல்லாம் பத்திரி கையில் பக்கம் பக்கமாக செய்திகள் வந்திருந் ததை மறைக்க முடியுமா? சேது திட்டத்தை நிறைவேற்றி ஆக வேண்டும் என்று காங் கிரசுக்கு அக்கறை இருந்திருந்தால் ஏன் வெளி நடப்பு செய்திருக்க வேண்டும்?
        விஞ்ஞான பூர்வமாக தொல்பொருள் ஆய்வுத்துறையும், புவியியல் ஆய்வுக் கழக மும் ஆராய்ந்து அறிவித்த அறிவியல் உண் மைகளை திரும்ப பெற்றதும், உண்மையை கூறியதற்காக மத்திய தொல்பொருள் அதிகாரிகள் இருவர் பலிகடா ஆக்கப் பட்டதும் ஊரறிந்த ஒன்றுதான். பகுத்தறிவு பாதையில் வந்த திமுக என்ன செய்தது என்பதை விளக்கிட முடியுமா?
        ராமர் பாலம் என்பது கற்பனையானது தான். ஆதாம் பாலம் என்பது மணல் திட்டுக் களே ஆகும் என்று முதலில் கூறிய மத்திய அரசு எதற்காக மாற்று வழி காண குழு அமைத்தது?
        கருணாநிதி பிறந்த நாளன்று சேது கால் வாயில் கப்பல் என்று அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி அறிவித்தும் பார்த்தார். ஆனால் காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. பின்னர் கருணாநிதி பிறந்த நாளும் வந்தது. என்ன நடந்தது?
        கருணாநிதியே வலிய வந்து கவிதை மூலம் ‘ சேது – ராம் திட்டம் ‘ என்று பெயர் வைத்தாவது அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஒன்றும் கதையாகவில்லை.
        மீண்டும் திமுக பொதுக்குழுவை கூட்டி சேது – ராம் திட்டம் என்று கலைஞர் அறிவித் ததில் உள்ள உண்மையான உணர்வை புரிந்து கொண்டு, அத்திட்டத்தை நிறைவேற் றிட நடுவண் அரசை இப்பொதுக்குழு வலி யுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று தீர் மானமும் நிறைவேற்றப்பட்டது. அதற்கும் காங்கிரஸ் தனது கடைக் கண்ணைக்கூட அசைக்கவில்லை.
        ராமர் பெயரை சொல்லி மதவெறியர்கள் பிரச்சனை செய்த போதும், புராணத்தை போட்டு குழப்பி மத்திய அரசு பின்வாங்கிய போதும் மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்தது. எவ்வித தயக்கமும் இன்றி சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என குரல் கொடுத்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நூற்றுக் கணக் கான இளைஞர் பட்டாளம் குமரி, கோவை, ராமேஸ்வரம் என்று மும்முனைகளில் இருந்து சேது திட்டத்தை நிறைவேற்றுக என சென்னை நோக்கி சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டது. அப்போது தமிழக முதல் வரின் கீழ் இயங்கும் காவல்துறை என்ன செய்தது? அந்த பேரணி கோவை நகருக்குள் வரக்கூடாது என தடுத்து நிறுத்தியது. இது தான் திமுகவின் சேது திட்ட கொள்கையா என மக்கள் எள்ளி நகையாடினர்.
        எல்லா வாய்ப்பும், இடதுசாரிகளின் துணையும் இருந்த போதே சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தவறியது யார்? அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வருமா?
        “ மீண்டும் ‘ராமனை’ வைத்து மதவாத சக்திகள் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது என்றால், அந்த மிரட்டலுக்கு , மத்திய கூட் டணி ஆட்சி பணிவது வன்மையான கண் டனத்துக்கு உரியது. மேலும் மத்திய அரசு இப்படி பணிந்து போனது, வாக்களித்த மக்க ளுக்கே இழைக்கப்பட்ட துரோகமாகும்” என்று திராவிடர் கழக நாளிதழான விடு தலை ஏடு தீட்டிய கட்டுரை சுட்டியிருந்ததே அதுதானே உண்மை.

        சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மாட்டேன் ஜெயலலிதா கூறியவுடன் அன்றைக்கே மார்க்சிஸ்ட் கட்சி சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவதே எங்கள் நிலை என்று கூறியதே. அன்று முதல் இன்று வரை சேது திட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் நிலை மாற வில்லை. எப்படி கருத்துவேறுபாடுடன் ஜக்கிய முற்போக்கு கூட்டணியில் நான்கு வருடம் போராடிய தேசத்தை காத்ததோ அந்த பணியை எப்பொழுதும் கம்யூனிஸ்ட்கள் செய்வார்கள்.
        உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும் இந்தியாவை காப்பாற்றப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு கம்யூனிஸ்டகளே காரணம் என்பது நண்பருக்கு நன்றாகவே தெரியும். நான்கு ஆண்டுகள் கம்யூனிஸ்ட்கள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைத்திருந்தால். இந்த நேரத்தில் ப.சிதம்பரம், மன்மோகன் சிங்கின் புதிய பொருளாதார கொள்கை இந்திய பொருளாதாரத்தை கொள்ளை கொண்டிருக்கும் என்பதை மறுக்க முடியுமா?

      • நீங்கள் சொல்வதையெல்லாம் ஒருவிதத்தில் ஒப்புக்கொண்டாலும் இன்றைய சூழலில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்குத்தானே. அதற்கு பின்புலம் மதவெறி / இந்துத்துவா சக்திகளும் , அதிமுகவும் தான்.

        அவர்களை நியாயப்படுத்தப் போய் சேது சமுத்திரத் திட்டத்தையே காம்ரேடுகள் கொச்சைப்படுத்துவதில் வியப்பில்லை தான்.

        எப்படா மே 13 வரும் , இந்தக் கட்சிகளின் வேடம் கலையும் என்றிருக்கிறது.

  5. அரசு ஊழியர்களின் பணி ஓய்வுக்குப்பின் வாழ்க்கை ஆதாரமாய் இருக்கிற பென்சன் திட்டத்தை காலி செய்ய காங்கிரஸிற்கு ஆதரவாய் இருப்பது திமுக என்பதை மறக்க முடியுமா..!
    புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 10ரூ ஊதியத்தை லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வகையில் வந்த சுமார் ரூ. 420 கோடிக்கும் மேலான தொகை எங்கே என்று பதில் சொல்லுமா திமுக?
    புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் பங்கு ரூ. 420 கோடி எங்கே என்று சொல்லுமா திமுக?
    நாடாளுமன்றத்தில் சட்டமாகாத நிலையில் தமிழகத்தில் இன்றும் அமுலில் உள்ள புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யுமா கலைஞர் அரசு?
    வணிகவரித்துறை, தொழிலாளர்துறை, வேளாண்மைத்துறை, தொழில்நுட்பப்பிரிவுகள் என அனைத்துத் துறைகளிலும் காலிப்பணியிடங்களை கலைந்து ஆணையிட்டது திமுக அரசு தானே…!
    எட்டு தவணை அகவிலைப்படியை முடக்கி பெரும் ஊதிய இழப்பை ஏற்படுத்தியது திமுக அரசுதானே…
    பஞ்சப்படியை பாராள்வோரின் பிறந்தநாள் பரிசாக அறிவித்து அரசு ஊழியரின் கவுரவத்தோடு விளையாடியது திமுக அரசு தானே…
    பஞ்சப்படியை ஜிபிஎப்-ல் முடக்கியது யார்? திமுக அரசு தானே?
    எட்டு தவணை அகவிலைப்படியை அபகரித்தார்கள்..!
    சங்கங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுங்குவேன் என்றார்கள்..
    விகிதாச்சாரத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் இருப்பது கலைஞர் அரசு தானே… தொகுப்பூதியத்தை ஒழிப்பேன் என்று 2006 தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு இன்று வரை தொகுப்பூதிய கொத்தடிமைக் கூலி முறையை அமுல்படுத்தி தொகுப்பூதிய ஊழியர்களை ஏமாற்றிவருவது கலைஞர் அரசுதானே?
    காவல்துறையில் ஓய்வு பெற்ற நாய்க்கு மாதம் ஓய்வூதியம் ரூ. 1300க்கு மேல் வழங்கி விட்டு சத்துணவு ஊழியருக்கு ரூ. 500-ஐ மட்டும் வழங்கும் இழிநிலை திமுக ஆட்சியில்தானே?
    சாலைப்பணியாளரின் 41 மாத பணிநீக்க காலத்தை காலமாக்குவேன் என்று சொல்லி இன்றுவரை ஏமாற்றி வருவது கலைஞர் அரசு தானே.
    சாலைப்பணியாளர்கள் சம்பளம் வாங்காத 41 மாத காலத்திற்கும் கூட்டுறவுக்கடன் அபராத வட்டி வசூலித்து வருவது திமுக அரசுதானே.
    ஏழாவது ஊதிய மாற்றத்தை உரிய நேரத்தில் சங்கங்களை அழைத்துப்பேசி அமுல்படுத்தாமல் 9மாதமாக இழுத்தடிப்பது கலைஞர் அரசுதானே.
    விண்ணைத் தொட்டிருக்கும் விலைவாசி உயர்வை கண்டு கொள்ளாமல் இருப்பது திமுக அரசுதானே.
    அரசு ஊழியர்கள் நாள்தோறும் தாக்கப்படுவது திமுக ஆட்சியில் தானே அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் 2 லட்சத்திற்கும் மேலாக உள்ளன. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
    அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்காமல் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் உயிர்காக்கும் சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.
    அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக்கூடம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பணியிடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன.
    2008 ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மாற்றம் அறிவித்து 9 மாதங்களாகியும் இதுநாள் வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மாற்றம் அறிவிக்கப்படவில்லை.
    சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத்தாளர்கள், ஊரக நூலகர்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிட்ட 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர்க்கு சட்டப்பூர்வமான வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம்
    இதுநாள்வரை வழங்கப்படவில்லை.
    ஆளும் கட்சியினரின் நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் பணியாற்றிய காரணத்திற்காக தருமபுரி, நாகர்கோவில், திண்டுக்கல், சாத்தூர், பெரம்பலூர், இராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
    இன்றளவும்கூட ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற கொடுமை தொடர்கிறது.
    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு காலத்தில் உத்தரவாதம் அளிக்கின்ற ஓய்வூதிய நடைமுறையினை 2002ம் ஆண்டுக்குப்பிறகு பணியேற்றுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக சட்டவடிவு பெறாத புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்தி வருகின்றனர்.
    அரசுப்பணியாற்றியபோது உயிரிழந்த அரசு ஊழியர்கள் 50ஆயிரம் பேர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பது கண்துடைப்பு நடவடிக்கையாகவே இருந்துவருகிறது.
    1972ல் இரகசிய குறிப்பேடு முறையை ஒழித்ததும், மத்திய அரசு ஊழியர்க்கு இணையான ஊதியம், அகவிலைப்படி, போனஸ் மற்றும் 2009 ஊதியக்குழு இடைக்கால நிவாரணம் பெற்றது அனைத்தும் தமிழக அரசு ஊழியர்களின் உறுதியான போராட்ட நடவடிக்கைகளினாலும், இப்போராட்டங்களின் போது உயிரிழந்த எண்ணற்ற அரசு ஊழியர்களின் தியாகத்தாலும்தான் பெறப்பட்டதேயொழிய ஆட்சியாளர்களின் கருணையினாலோ அல்லது காருண்யத்தினாலோ பெற்றவை அல்ல.

    • அரசு ஊழியர்களின் பணி ஓய்வுக்குப்பின் வாழ்க்கை ஆதாரமாய் இருக்கிற பென்சன் திட்டத்தை காலி செய்ய காங்கிரஸிற்கு ஆதரவாய் இருப்பது திமுக என்பதை மறக்க முடியுமா..!
      புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 10ரூ ஊதியத்தை லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வகையில் வந்த சுமார் ரூ. 420 கோடிக்கும் மேலான தொகை எங்கே என்று பதில் சொல்லுமா திமுக?
      புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் பங்கு ரூ. 420 கோடி எங்கே என்று சொல்லுமா திமுக?//

      இன்னும் ஏகப்பட்ட பலே , பலே கேள்விகளை நீங்கள் கேட்கலாம் நண்பர் கண்ணன்.

      ஆனால் ஒரே பதில்தான்…..

      இவற்றையெல்லாம் பற்றி கேள்வி எழுப்பி விட்டா திமுகவை விட்டு வெளியே போனார்கள் கம்யூனிஸ்டுகள்? இல்லையே…

      காங்கிரசுடன் கூட்டு வைத்துக்கொண்டிருக்கும் திமுகவுடன் இருக்க இயலாது என்றுதானே வெளியே போனார்கள் கம்யூனிஸ்டுகள்?

      நாளை ஒருவேளை மூன்றாவது அணி அதிக இடங்களைப் பெற்றால் காங்கிரஸ் தயவின்றி மத்தியில் ஆட்சியமைக்க முடியுமா ? அப்போது மட்டும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு காங்கிரசுடன் கூட்டுச் சேர முடியும்?

      ஒரு வேளை ராம் ராம் என்று சொல்லிக்கொண்டு பாஜகவுடன் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைக்கப் போகிறார்களா?

      • ஒரு வேலை மூன்றாவது அணிக்கு காங்கிரஸின் ஆதரவு கேட்டாலோ, அல்லது காங்கிரஸ் கம்யூனிஸ்ட்களின் ஆதரவை கேட்டாலோ எப்போதும் கம்யூனிஸ்ட்கள் மக்கள் விரோத கொள்கைக்கு ஜால்ரா போட மாட்டார்கள். திமுக பிஜேபியுடன் கூட்டணி வைத்து 5 ஆண்டுகாலம் அமைச்சர் பதவிளை அனுபவித்து விட்டு, பின்னர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலும் அமைச்சர் பதவி அனுபவிக்க எந்த முகத்துடன் வந்தார்களோ அந்த முகத்துடன் ஆதரவு கேட்க மாட்டார்கள் கம்யூனிஸ்ட்கள்.
        குறைந்த பட்சம் ஒரு பொது செயல்திட்டம் வகுத்து அதன் அடிப்படையில் ஆட்சி நடக்கும் என்றால்தான் ஆதரவு என்று தெளிவாகவே தெரிவிப்பார்கள். மந்திரி பதவிக்காக எல்லாவற்றிக்கும் தலையை அசைக்க மாட்டார்கள் கம்யூனிஸ்ட்கள்.
        ராம் ராம் என்று சொல்லி ஊரை சுடுகாடாக்கும் கூட்டத்துடன் கூட்டணி வைத்து அமைச்சர் பதவி அனுபவித்த சுகம் மறுபடியும் திமுகாவிற்கு வராமல் இருந்தால்h சரி. கம்யூனிஸ்ட்கள் அப்படி அல்ல. குஜராத் படுகொலை நடந்த போது அதை அந்த மாநில பிரச்சனை என்று ஒதுக்கியது திமுகதானே.

      • அதாவது தேர்தல் வரும்வரை எல்லாவித சமரசத்துக்கும் தயார்.

        தேர்தல் முடிந்தபின்னர் எந்தவித சமரசத்திற்கும் தயாரில்லை.

        இதுதான் நவீன கொள்கை போல.

        நடக்கட்டும் நடக்கட்டும். !!

    • ஊழியர்க்கு இணையான ஊதியம், அகவிலைப்படி, போனஸ் மற்றும் 2009 ஊதியக்குழு இடைக்கால நிவாரணம் பெற்றது அனைத்தும் தமிழக அரசு ஊழியர்களின் உறுதியான போராட்ட நடவடிக்கைகளினாலும், இப்போராட்டங்களின் போது உயிரிழந்த எண்ணற்ற அரசு ஊழியர்களின் தியாகத்தாலும்தான் பெறப்பட்டதேயொழிய ஆட்சியாளர்களின் கருணையினாலோ அல்லது காருண்யத்தினாலோ பெற்றவை அல்ல.//

      அதே உறுதியான போராட்ட நடவடிக்கைகள் அம்மா ஆட்சியில் எங்கே போச்சு ? ஒரே கையெழுத்தில் லட்சக்கணக்கானவர்களை வீட்டுக்கு அனுப்பிய போது / போக்குவரத்து ஊழியர்களின் போராட்ட நடவடிக்கையின் போது இடை நீக்கம் செய்து மாற்று ஓட்டுநர் / நடத்துநர்களை வைத்த போது போராட்டத்தின் மூலமாகவா உரிமைகளை வென்றெடுத்தீர்கள்?

      நீங்கள் போராடியும் தொழிலாளர்களின் உரிமையை கொடுக்க மறுத்த ஒரு கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு , கேட்டதும் உரிமைகளைக் கொடுக்கும் ஒரு கட்சியை பழித்துப் பேசுவதெல்லாம் ரொம்ப்போ ஓவர் ஆமா …

      உங்க தோழர்கள் கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

      • ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2.01.07 அன்று கூட்டிய முதல்வர்கள் மாநாட்டில் நயவஞ்சகமாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்திய்தே. அப்போது வித்தியாசமின்றி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒப்புதல் அளித்தது. அந்த திட்டத்தை அமுல்படுத்த நாங்களும் தயார் என்று வரிந்து கட்டி கொண்டு ஆதரித்ததே. அப்போது கம்யூனிஸ்ட்கள் மட்டுமே இந்த அரசு ஊழியர் விரோத திட்டத்தை எங்கள் மாநிலங்களில் அமுல்படுத்த முடியாது என திட்டவட்டமாக கூறினர். நாடாளுமன்றத்தில் புதிய ஓய்வூதிய மசோதா நிறைவேற்றப்படாத நிலையில் கூட முந்தியடித்து கொண்டு 2004ம் ஆண்டு முதல் அமுல்படுத்துவது ஏன்? நண்பர் உதய சூரியன் விளக்க முடியுமா? இந்த விவகாரம் கூட அரசு ஊழியர்களுக்கு தெரியும். இன்றும் காவல்துறையினருக்கு சங்கம் அமைக்கும் உரிமையை கொடுத்து 8 மணி நேரம் வேலை என்பதையும் உத்தரவாத படுத்தியிருப்பது கம்யூனிஸ்ட்கள் தானே. இதை இல்லை என்று கலைஞர் கூட மறுக்கமாட்டார் நண்பர் உதயசூரியன் அவர்களே.

      • நாடாளுமன்றத்தில் புதிய ஓய்வூதிய மசோதா நிறைவேற்றப்படாத நிலையில் கூட முந்தியடித்து கொண்டு 2004ம் ஆண்டு முதல் அமுல்படுத்துவது ஏன்? நண்பர் உதய சூரியன் விளக்க முடியுமா?//

        நன்றி நண்பர் கண்ணன் , இதைப் பற்றிய மேலதிக விபரங்களுடன் கண்டிப்பாக விவாதிப்போம். தற்போதைக்கு என்னிடம் போதுமான விபரங்களோ , தகவல்களோ இல்லை.

  6. Dont worry, we will defeat DMK and Congress at any cost,


Comments RSS TrackBack Identifier URI

Leave a reply to உதயசூரியன் Cancel reply